Wednesday, June 9, 2010
கேள்விகள் துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது..
கூண்டில் அடைப்பட்ட குருவியும் நாமும் ஒன்றோ?
எதற்காக நாம் வாழ்ந்து கொண்டு இருகின்றோம்?
இக்கேள்வி இன்று காலை முதல் என்னுள் துளை இட்டு கொண்டு இருக்கின்றது.
நாம் வாழும் இந்த வாழ்க்கை முறை நமக்கு பிடித்து இருக்கின்றதா?
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குளாகவே வாழ்ந்து கொண்டு இருகின்றோம்.
வரையறுக்கப்பட்ட கல்வி, உணவு, வாழ்க்கை முறை.
ஒப்புகொண்டாலும், மறுத்தாலும் பணத்தின் பின்னால் ஒரு ஓட்டம்.
ஒரு வேலை பணம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்து இருப்பின் இவ்வுலகம் என்னவாக இருந்து இருக்கும்?
கேட்டேன் நண்பனிடம் "எதற்காக நாம் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்?" என்று.
அந்த கேள்வியை தூக்கி எறி என்றான் ஒற்றை வரியில்.
இந்த கேள்விக்கான பதிலை தேட மறுக்கின்றோமோ?
சற்றே வெளியில் நடந்தேன்.
ஒரு குருவி கூண்டு தென்பட்டது,
உள்ளே ஆறு குருவிகள்.
அதுவே அதன் உலகம்.
உணவு ஒன்றே அதன் கதி.
தன்னுடைய ஆசைகளுக்காக உணவை மட்டுமே வழங்கி அக்குருவிகளின் முழு சுதந்திரத்தை பறித்துக்கொண்டு, அவற்றை பார்த்து மகிழும் மனிதனின் சிறுமை, சிரிப்பை மட்டுமே வரவைத்தது.
கூண்டில் இருக்கும், இந்த குச்சிக்கும், அந்த குச்சிக்கும் தாவி கொண்டிருக்கும் அக்குருவிக்கு தெரியுமா, தன்னால் ஒரு பெரிய மரத்தின் உயரத்திற்கு பறக்க முடியும் என்று?
தன் ஆற்றலை உணரலாமல், உணர வாய்ப்பு இல்லாமல், அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் அக்குருவியும், 'ஏன் படைக்கப்பட்டோம்' என்ற வினாவிற்கு விடைதெரியாமல் சுற்றி கொண்டிருக்கும் நானும் ஒன்றன்றோ...
ஜன்னலின் வழி எட்டி பார்கையில்,
வண்டியில் இருந்தது ஓடுகளை இறக்கி கொண்டிருந்தார்கள்..
கேள்விகள்
துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது
நம் ஒவ்வொருவரையும்
கண்டுகொள்ளாதது போல் நடிப்பது ஏனோ?
முயன்று,
முயன்று ,
விடை தெரியாத அயர்ச்சியில், தேட மறுகின்றோமோ?
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தேடல்...
ReplyDeleteநானும் உங்களைப்போலவே தேடிக்கொண்டே இருக்கிறேன்...
விடைகள்தாம் இன்னும் எட்டவேயில்லை... :(
ம்ம்ம்..நல்ல சிந்தனை..!!
ReplyDeleteநல்ல கேள்விகள்..!!
சொல்லப்போனால் இந்த மொத்த சமுதாயமே நமக்கு கூண்டுதான்..!!
கூண்டை புரிந்துகொண்டு ஏற்றுகொண்டால், கூண்டுக்குள்ளும் கொண்டாட்டத்தை கொண்டுவரலாம்.!!
யாரோ ஒருத்தர் போட்ட சட்டத்திட்டத்திற்கு கட்டுபட்டே நாம் அனைவரும் வாழ்கிறோம்.. ஹம் விடுங்க
ReplyDeleteநல்ல தேடல் முயற்சி...பிறருக்காக வாழ்ந்து பாருங்கள் வாழ்வில் வசந்தம் உணர்ந்து வாழ்தல் புரியும் . சுதந்திரம் என்பது அவரவர் சிந்தனையைப் பொருத்தது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDelete//சில பிரியங்கள் ஏற்கப்படுவதில்லை சில பிரியங்களை ஏற்கமுடிவதில்லை... அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் ஏற்கப்படாத பிரியங்களும் எங்கோ கைவிடப்பட்டு காற்றில் கிடந்தலையும் நேசங்களும் பின் என்னாகுமென்று... ஒவ்வொரு காலையிலும் தன் வாசலில் பூக்களைப் பரப்பிக் கொள்ளும் இந்த மரங்களைப் பார்க்கையில் தோன்றுகிறது உடைந்து போன நேசங்கள் உதிர்ந்த பூக்களாகின்றன.. சில நேரங்களில் கவிதைகளாகவும். //
ReplyDeleteஅருமையான வரிகள் தங்காச்சி காயத்ரி வாழ்த்துகள்...
மறை பொருள்.. :)
ReplyDeleteநாம் என்னதான் கேள்வி கேட்டாலும், அந்த கேள்வியும் கூட , நாம் இருக்கும் கூண்டின் பாதிப்பில்தான் இருக்கும்... ஆக, தேடுதல் என்பது அர்த்தம் அற்றது.. தேடுதலுக்கு , கேள்விகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்...
ReplyDeleteநல்ல தொரு படைப்பு... சிந்தனையை தூண்டியது... வாழ்த்துக்கள்...
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள வேலை உயிர் வாழ்ந்து உயிர் கொடுப்பது மட்டுமே!
ReplyDeleteஆனால் ஆறாவது அறிவு நம் எல்லைகளை விரிவுபடுத்தவும் , பிற உயிர்களை அக்ரினைகளாக பாவிக்கவும் வைத்து விட்டது .
அவைகளை கூண்டில் அடைத்துப் பார்க்கும் போது நம்மை நாம் காண்பதாகவே உணர்கிறோம் .
அது மகிழ்ச்சி அல்ல . நம் பிம்பத்தைக் கண்ட சோகப் புன்னகை !
ஆழ் மனதிற்குத் தெரியும் , அந்த உண்மை!
நாம் அதை உரைத்து விட்டோம் , பிறர் அவற்றை உரைக்க வில்லை .
தேடலும் கூட,அவற்றைப் போலவே !
அவை கூண்டில் இங்கும் அங்கும் பறப்பது உணவிற்காக அல்ல!
நம்மை போலவே எல்லை தாண்டி உயிர் வாழ்வது எப்படி என்ற தேடலுக்காகத் தான் !
--
இப்படிக்கு,
வைஷாலி இளங்கோவன்.
நல்ல சிந்தனை.... தீர்வு தான் கேள்வி குறி.
ReplyDeleteதேடுதலின் முடிவு மிக மிக எளிமையானது.
ReplyDeleteவண்ணபேதம், வர்ணபேதம், வரட்டு வாதம்
கடந்த கண் கூசும் உள்ளோலி அல்லது இருள்மை.
ஒன்றான இறைவனையே நூறாயிரமாயாக்கும் நாம்
வாழ்வின் முடிபு 'ஒன்றே' என்பதை
மனித இயல்பு தாங்குவதில்லையோ?
//அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் அக்குருவியும், 'ஏன் படைக்கப்பட்டோம்' என்ற வினாவிற்கு விடைதெரியாமல் சுற்றி கொண்டிருக்கும் நானும் ஒன்றன்றோ...
ReplyDelete//
கூண்டில் அடைக்கப்பட்ட குருவி அதையே உலகம் என்றெண்ணி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. பொந்தில் இருக்கும் எறும்புகள் கூட மற்றதை பற்றி கவலைப்படுவதில்லை. மனிதர்கள் மட்டுமே தம் இருப்பை பற்றிக் கூட கவலை படுகின்றனர்.
சிந்தனையை தூண்டிய வரிகள்
@ ரங்கன்
ReplyDeleteசொல்லப்போனால் இந்த மொத்த சமுதாயமே நமக்கு கூண்டுதான்..!!
:) சில சமயம் உண்மை தான் ரங்கா..
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க...
@ ஜெய்
ReplyDeleteநானும் உங்களைப்போலவே தேடிக்கொண்டே இருக்கிறேன்...
//
:) தேடுங்க தேடுங்க...
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜெய்...
@ ஆனந்த் (பேனா மூடி)
ReplyDelete//யாரோ ஒருத்தர் போட்ட சட்டத்திட்டத்திற்கு கட்டுபட்டே நாம் அனைவரும் வாழ்கிறோம்.. ஹம் விடுங்க //
.......
அதெப்படி விடுவது ஆனந்த்...
:)
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க...
@ மதுரை சரவணன்
ReplyDelete//சுதந்திரம் என்பது அவரவர் சிந்தனையைப் பொருத்தது. //
மிகவும் சரி..
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்திற்கும் நன்றிங்க..
@ வசந்த்
ReplyDeleteஎன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலைத்திணை, காயத்திரி சித்தார்த்தின் வரிகள் அவை...
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க வசந்த்..
@ சிவாஜி சங்கர்
ReplyDeleteமுதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பா...
@ பார்வையாளன்
ReplyDelete//நாம் என்னதான் கேள்வி கேட்டாலும், அந்த கேள்வியும் கூட , நாம் இருக்கும் கூண்டின் பாதிப்பில்தான் இருக்கும்... ஆக, தேடுதல் என்பது அர்த்தம் அற்றது.. தேடுதலுக்கு , கேள்விகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்...//
சிந்தனையை திரி தூண்டிய பின்னுட்டம்.
முதல் வருகைக்கும், கருத்திருக்கும், உங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க..
@ வைஷாலி
ReplyDelete:-) உன் கருத்து மெய் சிலிர்க்க வைத்தடி தோழி..
முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வைஷு...
@ சி. கருணாகரசு
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க...
@ வாசன்
ReplyDelete//தேடுதலின் முடிவு மிக மிக எளிமையானது.
வண்ணபேதம், வர்ணபேதம், வரட்டு வாதம்
கடந்த கண் கூசும் உள்ளோலி அல்லது இருள்மை.
ஒன்றான இறைவனையே நூறாயிரமாயாக்கும் நாம்
வாழ்வின் முடிபு 'ஒன்றே' என்பதை
மனித இயல்பு தாங்குவதில்லையோ? //
.....
முடிவு வேறு ஐயா.
வருகிறோம், வாழ்கிறோம்(சிலர்-?), செல்கிறோம்.
இது ஏன்? இதுவே துளைக்கிறது என்னை.
@ வேலு
ReplyDelete//சிந்தனையை தூண்டிய வரிகள் //
.....
ஓடுகளை இறக்கிவிட்டேன் அல்லவா.. :)
மிக்க நன்றிங்க வருகைக்கும், கருத்திற்கும்...
உங்க வயசுக்கு மீறீய யோசனையும் கேள்விகளும். :-)
ReplyDeleteஇப்படியெல்லாம் யோசொக்காதிங்க கனி, லைஃப் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கை வாழ்வதற்கே.
எனக்கு வைரமுத்து அவர்களின் கவிதை வரி ஒன்று நினைவிற்கு வருகிறது கனி
ReplyDeleteமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபடு
"நீங்கள் கூண்டுகளில் இருந்தும் சுதந்திரமாய் திரிகிறீர்கள்
நாங்கள் சுதந்திரமாய் இருந்தும் கூண்டுக்குள் இருக்கிறோம் "
:) நன்றி முரளி...
ReplyDelete@ Nandy...
ReplyDeleteநன்றி நந்தினி.. அது 'சிகரங்களை நோக்கி'ல வரும்ல