Monday, January 17, 2011

எல்லாம் இருந்தும் ...

புத்தாடை போட்டுகிட்டு,
பக்கத்துக்கு வீடு, எதிர் வீடு என எல்லார் வீட்டுலையும் காட்டி...
தேடிபோய், உமா அம்மா என் புது டிரஸ் நல்லா இருக்கான்னு காட்டி
அம்மாவோட புது சேலையும் நானே கட்டிக்கிட்டு, தத்தித்தத்தி போய் மறுபடி காட்டினா
வாய் நிறைய சிரிப்போட, உனக்கு தான் நல்லா இருக்கு கனின்னு சொல்லுவாங்க..
இது ஒரு நிலை..

எதுக்கு தாத்தா இன்னொரு டிரஸ்?
இல்ல கனி, அம்மா எடுத்து தந்தது இன்னும் தெக்கலைல அப்புறம் ஸ்கூல்க்கு எதை போட்டுபோவ நாளைக்கு...
அதான் ரெடிமேட் சுடி ஒன்னு வாங்கியாந்தேன்.
சிரிச்சிகிட்டே டிரஸ் வாங்கிகொண்டு ஓடியது ஒரு நிலை...

என்ன.. கனி அக்கா புது டிரஸ் போடலையா?
இல்லமா இன்னும் தைக்க குடுக்கல...
சரி சரி...
இது ஒரு நிலை...

யோசிச்சு பார்த்தா...

போட்டுக்காட்ட உமா அம்மா இல்ல,
போட்டுக்கிட்டு போக பள்ளியும் இல்ல,
வாங்கி தர தாத்தாவும் இல்ல...

..............................

இந்த முறை கோலம் போடவே ஒரு நாள் லீவ் போட்டு ஊருக்கு வந்தாச்சு...
ஆனா வேலை நிறைய இருக்கவே நல்லா வெயில் வந்த அப்புறம் தான் போட்டோ எடுக்க முடிஞ்சுது..




...................................



மேல அந்த பக்கமா போஸ் குடுத்துட்டு இருக்கிறவர் தான் எங்க ஹீரோ... ரொம்ப வாயாடிங்கனா உங்கள காமெடி பீஸ்-ஆ ஆக்கிடுவாரு...
இந்த முறை பொங்கல் ரொம்ப சந்தோஷமா போக இவர் தான் ஒரு பெரிய காரணம்..
பெயர் இலக்கியன், சித்தப்பா மகன்(என் தம்பி)..


3 comments:

  1. அனைவருக்கும் என் இனிய நேரங்கடந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

    :)

    ReplyDelete
  2. ஸ்டைலுன்னா இலக்கி!!
    இலக்கின்னா ஸ்டைலு!!

    ஆப்பி பிலேடட் பொங்கலு விஷஸ்!!

    ReplyDelete
  3. குட்டி பசங்க இருந்தாலே எப்பொழுதும் ஆனந்தம்தான்! நல்லா இருக்கார் உங்க வீட்டு ஹீரோ....

    ReplyDelete