( முதல் முறைய இந்த தொடர்கதையை வாசிக்க வந்து இருக்கீங்களா? அப்போ இதை படிச்சிட்டு இங்க வாங்க..
part 1
part 2
part 3 )
கொஞ்சம் பயந்துபோனேன். வெறித்து ஸ்க்ரீனையே பார்த்துக்கொண்டிருக்க மறுபடியும் 'ஹாய் அமுதா' என்றான்.
ஹாய் சொல்லி பொதுவாய் பேசிக்கொண்டிருந்தோம்.
மகேஷ் : நெக்ஸ்ட் சண்டே உன்னை பெண் பார்க்க வரேன் ஞாபகம் இருக்கா?
அமுதின்செல்வி: அதுகூட ஞாபகம் இருக்காதா?
M: :) பிடிச்சு இருக்கா?!!!
A: தெரியவில்லை!
M: :) எனக்கும் அதே மன நிலை தான்.
பாக்கலாம் life ரெண்டு பேரையும் எப்படி கொண்டுபோகுது என்று
A: ம்ம்..
M: நெக்ஸ்ட் monday sydney போகபோறேன்.
A: ஓ! குட்! ஆபீஸ் வேலையா?
M: ஆமா.. ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமா.. 4 டேஸ்ல திரும்ப வந்துவிடுவேன்..
A: ம்ம்... சரி.. கொஞ்சம் வேலை இருக்கு. நான் போகட்டுமா?
M: ஓகே அம்மு.. நீ உன் வேலையை பாரு.. மறுபடி எப்ப வருவ?
.
.
எனக்கு என்ன டைம் சொல்வதென்று தெரியவில்லை. log out பண்ணிட்டேன்.
பின் அதற்காக வருத்தப்பட்டேன்.
நான் வரும் நேரத்தில் அவன் இல்லை. நான்கு முறை message அனுப்ப முயற்சித்து பின் கைவிட்டுவிட்டேன்.
ஏனோ ஒரு குழப்பம், ஒரு தயக்கம்.
நாட்கள் கழிந்து ஞாயிறு வந்தது..
ஒவ்வொரு சொந்தமாய் வீடு வந்து சேர்ந்தார்கள்.
எதிர்பார்த்திராத அளவிற்கு கூட்டம். அப்பாவிடம் மெதுவாய், ஏம்ப்பா பெண் பார்ப்பதற்கே இவ்ளோ பேர் வர சொல்லிடிங்க... என கடிந்து கொண்டேன்.
வெட்கமும் டென்ஷனும் கலந்த காலை.
மாப்பிளை வீட்டார் வந்து சேர்ந்தனர்.
என்னை சுற்றி ஏதேதோ யார்யாரோ பேசிக்கொண்டிருக்க.. ஒன்றும் காதில் விழவில்லை எனக்கு.
அம்மாவின் இழப்பை உணர்த்த மற்றொரு நாள் அன்று. அம்மாவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில்
ஆன்ட்டி என் அருகில் வந்து அமர்ந்துகொண்டு.. என் கைகளை இறுக பற்றிக்கொண்டார்.
டெலிபதியாய் இருக்குமா என தெரியவில்லை.
அம்முகுட்டி.. என்றார்.
ஆன்ட்டி என்றேன்..
ஹே என்ன ஆச்சு!! ஏன்டா குரல் ஒரு மாதிரி இருக்கு..
தெரியல ஆன்ட்டி என்றேன்.
ஒண்ணுமில்லடா பயப்படாதே.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கூப்பிடுவாங்க ..
நான் வந்து கூட்டிட்டு போறேன் சரியா.. வேற ஒன்னும் இல்லடா.
உலகம் பார்க்க அவசரமாய் வெளிவந்தது கண்ணீர்..
அச்சச்சோ.. makeup எல்லாம் கலையுது பாரு..
கண்கலங்காதடா அம்மு நீ பயப்பட இங்க ஒண்ணுமே இல்ல.. என்று சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாள் என் இரண்டாம் தாய்.
இக்கண்நீருக்கான விடை தேடிக்கொண்டிருந்த வேளையில்,
ஆன்ட்டி வந்து அழைத்து சென்றார்கள் ஹாலுக்கு.
அங்கிருந்த ஒருவரையும் நான் பார்க்கவில்லை.. பயத்திலும் வெட்கத்திலும் என் முகம் படு பயங்கரமாய் சிவந்துவிட்டது..
மாப்பிளையை பார்த்துக்கோம்மா என யாரோ சொல்லி கிண்டல் அடித்தார்.. சபை சிரித்தது..
ஆணி வைத்து அடித்தார் போல் என் கண்கள் தரையை விட்டு விலகவில்லை.
அங்கேயே உட்கார செய்தார்கள். ஏதேதோ இருவீட்டாரும் பேசிக்கொண்டிருக்க.. அங்கு கேட்ட முக்கியமானவைகளில் சில..
மகேஷின் அம்மாவும் சிறு வயதிலேயே இறந்து போன விஷயம்.
மகேஷ்க்கு சென்னைல தான் வேலை. அங்கேயே ஒரு பிளாட்டில் வசிக்கிறான். monday சிட்னி போகிற விஷயத்தையும் சபையில் சொன்னார் அவனின் அப்பா. இந்த புது ப்ராஜெக்ட் அவனோட கம்பனிக்கு கிடைத்துவிட்டது என்றால், அவனும் நானும் சிட்னியில் குறைந்தது ஒரு வருடமாவது தங்க நேரிடும் என்பதையும் கூடுதலாக சொன்னார். (எனக்கு உள்ளுக்குள் பூகம்பம், அப்பாவையும் இந்த வீட்டையும் விட்டு பிரிவதே கஷ்டம் இதுல அவ்ளோ தூரத்துல வேற போய் இருக்கனுமா.. வேண்டவே வேண்டாம்...)
மகேஷின் வீட்டில் அவன், அவங்க அப்பா, வேலைக்கார பாட்டி.. தோட்டக்காரன், மற்றும் ஒரு வயதான தூரத்து
உறவுக்கார தாத்தா இருப்பது தெரியவந்தது..
அவர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கு பின்னும் ஒரு கதை இருப்பதாக சொன்னார் அவரின் அப்பா..
சிறிது நேரம் கழித்து என்னை தனியே அழைத்துசென்ற ஆன்ட்டி..
அம்மு உனக்கு இந்த மாப்பிளையை புடிச்சு இருக்கா என்றார்..
உங்களுக்கு புடிச்சு இருக்கா ஆன்ட்டி?
புடிச்சு இருக்குமா.. ரொம்ப நல்ல பையன், எனக்கு சின்ன வயசுல இருந்தே அவங்க family பத்தி தெரியும்டா, அந்த ஊர்ல ஒரு 5 வருஷம் இருந்தது இருக்கோம்ல..
அப்பாக்கு?
எல்லாருக்கும் ஓக்கேடா.. நீ சொல்லு.. உன் விருப்பம் தான் முக்கியம்..
ம்ம்.. என்றேன் குனிந்துகொண்டே..
ஹே!! பொண்ணுக்கு இந்த கல்யாணத்துக்கு ஓக்கேவாம்..
இன்றைக்கே தேதி fix பண்ணிடலாம் என்றார் அங்கிள்...
அடுத்த மாதம் 15 ஆம் தேதி திருமணம் என்றும், வர வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு என்றும் முடிவு செய்யப்பட்டது..
பெண்பார்க்கும் படலத்தை நிச்சையதார்த்தமாகவே மாற்றிவிட்டார்கள்.
சந்தோஷம் + வெட்கம் + பயம் = கல்யாணம்.
என புது formula கண்டு பிடித்தேன் அன்று..
எல்லாரும் சாப்பிட்டு, அப்பாவிடமும், அங்கிளிடமும் பேசிவிட்டு வெளியேறினார்கள்.
மகேஷ் காரில் ஏறும் நேரத்தில் அங்கிள் ஏதோ அவன் காதில் சொன்னார்.. ஆன்ட்டி அதற்குள் என்னிடம், மகேஷ் ஏதோ உன்கிட்ட பேசனுமாம் கீழ பாரு என்றார். நான் மாடியில் நின்று கொண்டிருந்தேன் அப்போது.
மகேஷிடம் அங்கிள் நான் ஏதோ சொல்ல விரும்புவதாக சொல்லி இருக்கவேண்டும்..
நான் மகேஷை பார்க்க.. அவன் என்னை பார்க்க.. eyes to eyes first time!!
ஊரே சிரிக்குது அங்கிள் ஆன்ட்டி பண்ண வேலைல.. அப்புறம் சமாளிச்சு மகேஷும் அவன் family-யும் புறப்பட்டாங்க..
அன்று இரவு மகேஷ் fb வந்தான் அதிசயமாய்..
M: ஹே! உன்னிடம் பேச தான் fb வந்தேன்.. பார்த்தா நீயே இருக்கியே.. Gud god!
A: :) நாளைக்கு எத்தனை மணிக்கு flight ?
M: இவினிங் ஆறு மணிக்கு..
A: ம்ம்.. ஓக்கே..
அப்புறம்..
M: என்ன வேலை இருக்கா?
A: ஆமா கொஞ்சம் வெளிய போகணும்..
M: முக்கியமான வேலையா?
A: ம்ம்.. கோவிலுக்கு ஆன்ட்டி கூட..
M: ஓ! சரி..
A: logout பண்ண போறேன்..
M: ஹே! ஒரு நிமிஷம்..
கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்ட..
A: ஆமா
M: என்ன புடிச்சி இருக்கானு கேட்டதுக்கு தெரியலைன்னு சொன்ன..
A: இப்பவும் சொல்றேன்.. எனக்கு தெரியல..
M: :).. சரி போ.. i ll wait..
(ரொம்ப நாள் கழித்து இந்த பதிவை போடுவதற்கு மன்னிக்கணும்.. :) வேலை பளு!
)
நன்றி சதீஷ்.. :)
ReplyDeletegood one..
ReplyDeleteகதை நல்லவிதமா போய்ட்டு இருக்கு.. அம்முவின் மௌனம் கொஞ்சம் கலங்கவைக்கிறது..!!
ReplyDeleteசீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்..!!
ஹேய்...
ReplyDeleteஹ்ம்ம் இப்போ கதை விருவிருப்பாகுது...
:) :)
அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரமா???
உங்க பிளாக் ஃபான்ட்ல ஏதோ பிராப்ளாம. பாதி வெவ்வேறு வடிவில் இருக்கிறது. தயை செய்து யுனி கோடில் பதியவும். பதிவு சுவராசியமாய் இருப்பது போல் தெரிகிறது ஆனால் புரியவில்லை.
ReplyDeletehey kanni wud luv to read ur blog..but cant understand nethng :(
ReplyDeleteதொய்வில்லாமல் போகுது தொடர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
உங்கள் சொந்தக் அனுபவக் கதையா ?
ReplyDeleteஅனுபவமா!! :D
ReplyDeleteஅனைத்தும் கற்பனை...
நன்றி சிவா!!
அருமை இது வெறும் புனைவா இல்லை நினைவா ?
ReplyDelete(ரொம்ப நாள் கழித்து இந்த பதிவை போடுவதற்கு மன்னிக்கணும்.. :) வேலை பளு!
ReplyDelete)//
எனக்கு பிடிக்காத வார்த்தை முடியாது
அதற்கு பதிலா பதிவை அடுத்த பதிவை விரைவில்பதிவிட வேண்டும் :)
simply super..
ரியலிஸ்டிக்கா இருக்குது...
ReplyDelete