Sunday, April 24, 2011

Arranged Love - Part 3


கொஞ்ச நாளுக்கு இந்த கல்யாண பேச்சு போய்கொண்டிருக்க, அப்பாவும் அங்கிளும் அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வந்தாங்க.. அப்பாவுக்கும் இதில் விருப்பம் இருக்கவே என்னோட போட்டோவை அவங்க வீட்டில் தந்துவிட்டு. மகேஷின் போட்டோவை வாங்கிட்டு வந்தாங்க. வர ஞாயிறு பெண் பார்க்கும் படலம் என்றும் முடிவாயிற்று. அங்கிள் போட்டோ வை என் கையில் தந்துவிட்டு "பார்த்து சொல்லு அம்மு... உனக்கு பிடித்தால் தான் நிச்சயம்..." என்றார்.

கவரினை பிரித்து பார்கையில் மகேஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.

சும்மா ஒரு பையன நண்பனா ஏத்துக்கவே அவ்ளோ யோசிப்பவள் நான்.. எப்படி ஒரு போட்டோவை பார்த்து கல்யாணத்துக்கு ஓகே சொல்வேன் என்று எதிற்பர்க்கறாங்க.. போட்டோவை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, தோட்டத்தில் ஒரு வாக்கிங் போனேன்..

''இது தான் வாழ்க்கையோட திருப்பு முனை.. பையனும், அவனோட குடும்பமும் வெளியில் நல்லவங்களா இருந்துட்டு மனசு அளவுல நல்லவங்களா இல்லாம போயிட்டா!! அய்யோ நெனச்சு பார்க்கவே பயமா இருக்கு!!.. ஏன், அவங்க ரொம்ப நல்லவங்களா இருக்கா கூடாது?'' - இப்படி என் மனதில் பல்வேறு ஓட்டங்கள்..

எல்லா கல்யாண பெண்களுக்கும் இந்த பயம் இருக்கனும்ல.. என மனம் சிரித்துகொண்டு இருக்க facebook.com என கைகள் டைப் அடித்தது.. 3 friend request 1 Message 14 Notifications என்று வரவேற்றது அது. இவற்றில் எதையும் கவனிக்காமல் மகேஷ் என டைப் அடிக்க 15 மகேஷ்-கள் வந்து நின்றனர். இதில் அவனுடைய ஊர் மற்றும் வேலை வைத்து ஒரு மகேஷை கிளிக் செய்ய அங்கும் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

இந்த போட்டோவில் மகேஷ் நல்லாவே இருந்தான். படிப்பு, வேலை, புடிச்சது, விரும்பி பார்ப்பது, கேட்பது என அங்கிள் சொல்லாத அனைத்தையும் FB சொன்னது. இனி பெண்வீட்டாரும், மாப்பிள்ளைவீட்டாரும், புகைப்படம் தருவதற்கு பதில் FB profile names தந்து கொண்டால் நலம். ஒரு சில விடயங்கள் வெளியாட்கள் பார்க்க தடை செய்து இருப்பான் போல... Add as friend கிளிக் செய்து. மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினேன். accepted மெயில் வந்த அடுத்த நொடியில் Hi.... என்றான் மகேஷ்!!

3 comments:

  1. adutha part epponga ezhuthuveenga?

    ReplyDelete
  2. முகப்புத்தகம் வந்துடுச்சா கதையில..பார்ப்போம் என்னாகுதுன்னு..

    ReplyDelete