Monday, March 28, 2011

Arranged Love - 2



ஒரு விஷயத்தை ரசித்து பார்க்கும் போது, எண்ண அலைகள் நம்மை அறியாமல் நமக்கு பிரியமானவங்களை லிங்க் பண்ணும். இது எனக்கு அடிக்கடி நடக்கும் ஒன்று. ஒரு சின்ன பட்டாம்பூச்சி போதும், அவனை ஞாபகபடுத்துவதற்கு Black pulsar, கடையில் தொங்கவிட பட்டு இருக்கும் நல்ல T-Shirts, மாலை நேரத்து குருவி, மீன், மழை, அழகான போடோஸ், இப்படி நான் ரசிக்கும் சின்ன சின்ன விஷயம் எல்லாமே என்னுள் எழுப்பும் ஒரு கேள்வி என்னவன் என்பவன் யார்?

காதல் ஒரு அற்புதம். காதலிபவர்கள் தான் அந்த அற்புதத்தை உணரமுடியும் என்பது தவறு..
இதோ.. எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை பற்றி அடிக்கடி நினைவூற்றி, உயிரை வாங்கிக்கொண்டும், உயிரை கொடுத்துக்கொண்டும் இருக்கிறது காதல்..
காதல் முற்றி கவிதை வழியாய் நிரப்பிவைக்கபட்ட பொழுதுகளும் உண்டு..
இப்படி காதலோடு பயணித்து இருந்த ஒரு பொழுதினில்...

வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்த போது, அப்பாவை பார்க்க வந்த மாது அங்கிள், நம்ம நல்லதம்பி வாத்தியார் மகன் நல்ல கம்பெனில வேலை செய்யறான், நல்ல குடும்பம், நம்ம அமுதாவுக்கு அந்த பையன கட்டி வெக்கணும்னு எனக்கு ஒரு ஆசைன்னு ஒரு பிட்ட போட்டாரு.

அப்பாவும் அங்கிளும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ், ஒன்னாவே படிச்சு, வாத்தியாரா ஆனாங்க.. மாது அங்கிளுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும், அப்பாவுக்கும் தான். அண்ணன் தம்பியோ என்று கூட பல பேர் கேட்டு இருக்காக. மாது அங்கிளுக்கு பிள்ளைங்க கிடையாது. ஒரு குழந்தையை தத்து எடுத்து, படிக்க வெச்சு கல்யாணமும் பண்ணிட்டார். அடிக்கடி என்னையும் அவரோட பிள்ளைன்னு சொல்லுவாரு.

அம்மா இறந்து போனதுல இருந்து என் மீது அங்கிளுக்கும் மாது ஆன்டிக்கும் தனி பாசம். தினமும் அப்பா கூட அந்த திண்ணையில் உட்கார்ந்து நாட்டு நடப்பு, ஊர் விஷயம், வீட்டு விஷயம் பற்றி பேசலன்னா தூக்கம் வராது..

நல்லதம்பி வாத்தி பையான.. நீ எப்போடா அவனை பார்த்த, என் கிட்ட சொல்லவே இல்லன்னு அப்பா கேட்டாரு.
அவனா.. என்னடா மாப்பிள்ளைய போய் அவன் இவன்-ன்னு சொல்லிக்கிட்டு இருக்க? மாப்பிள்ளைன்னு சொல்லுடா..
ஹே!! நீ முடிவே பண்ணிட்டியா? ஷாக் ஆகிட்டார் அப்பா.. நானும் தான்...

3 comments:

  1. //காதல் ஒரு அற்புதம். காதலிபவர்கள் தான் அந்த அற்புதத்தை உணரமுடியும் என்பது தவறு..//

    இது உண்மை..கதை சூப்பரா போகுதுங்க.. மேலும் மேலும்..

    ReplyDelete
  2. :) :) :)
    \\எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை பற்றி அடிக்கடி நினைவூற்றி, உயிரை வாங்கிக்கொண்டும், உயிரை கொடுத்துக்கொண்டும் இருக்கிறது காதல்.....//
    தெரிந்த பெண்ணுகுண்டான பெயர்களனைத்தும் FLAMES போட்டு பார்த்து குதுகலித்த பதின்ம பொழுதுகள் நிழலாடுகிறது
    மேற்கண்ட வரிகளைக் கடக்கும்பொழுது..

    \\ஹே!! நீ முடிவே பண்ணிட்டியா? ஷாக் ஆகிட்டார் அப்பா.. நானும் தான்...//
    :) ஹ்ம்ம் நான் ஷாக் ஆகலையே..! :) :)

    ReplyDelete