Saturday, February 19, 2011

வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு

அதிகாலையில் வேலைக்கு போகும் போது குப்பை சென்னையும் சொர்க்கம் மாதிரி இருக்கு. நீங்க 7 மணிக்கு எழுந்துகரவங்களா இருந்தா ஒரு நாள் ஆச்சு கொஞ்சம் சீக்ரம் எழுந்து உலகத்த ரசிங்க. இல்லன்னா வாழ்கைல ஏதோ ஒன்றை மிஸ் பண்ணறிங்கன்னு அர்த்தம்.

"The Lucky One" நாவல் Nicholas Sparks எழுதினது படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு.. டைம் இருந்தா படிங்க. ஒரு மனுஷன், ஒரு போட்டோ ல இருக்கற பெண்ணைத் தேடி போகிறான். எப்படி அவன் கையில் அந்த போட்டோ கிடைக்குது, ஏன் அவளைத் தேடறான், அவளை எப்படி பார்த்தான். பார்த்த அப்புறம் என்ன ஆகுது என்பது தான் கதை. ம்ம்.. எப்படி சொல்றது.. புல்லாங்குழல் இசை போல அழகா அலை அலையா போகுது கதை..

சரவண பவன் டீ பிடிக்குமா உங்களுக்கு?
நைட் ஷிபிட் போனதில் இருந்தது அது நான் விசிறி ஆகிவிட்டேன்.
செம ஸ்டைலா டீ போடுவாருங்க அங்க வேலை செய்றவரு.
எத்தன ஸ்பூன் டீ தூள் போடுறாரு, சக்கரை போடறாருன்னு நானும் எண்ண ட்ரை பண்ணுவேன் ஆன முடியல, டக் டக் டக் ன்னு போட்டுடறாரு, அட்லீஸ்ட் அவராச்சு கணக்கு வெச்சி பாரான்னு தெரியல...


(எதாவது எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.. :))