Friday, December 31, 2010

வாழ்க்கையை ரசித்து வாழ்வோமாக.......




























வாழ்க்கையை ரசித்து வாழ்வோமாக.......


(2011 ல வாரம் ஒரு முறையாவது ப்ளாக் பக்கம் எட்டி பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்... :) )

Monday, December 20, 2010

மறந்துவிடாதே என் உயிரே


மழை துளியினை பிறந்த மேகமாய்
பார்த்து கொண்டிருக்கிறாள்.
ஏதேதேதோ விளக்கம் கொடுக்கிறான் அவன்.
சிரித்து கொண்டே சரி என்றாள்.
போய்வா என்றாள்
பாராங்கள் சுமக்கும் பட்டாம்பூச்சி ....


எப்படி விவரிப்பாள் அவளது நிலையை
இனி வேறோருத்தியையும்
மனதில் சுமக்க போபவனிடம்
என்ன எதிர்பார்ப்பாள்...

மறந்துவிடாதே என் உயிரே என்றாள்..

Tuesday, November 16, 2010

'ழ'


காலைல 9 மணிக்கு உள்ள போனா, சாயந்தரம்... ம்ஹும்... நைட் 10 ஆகுது திரும்பவும் ரூம்-க்கு வர..
அலைபேசியில் அம்மா கிட்ட பேசும் போது தெரிந்தோ தெரியாமலோ இல்ல இயந்திரத்தனமாவோ 'வேற என்னம்மா'ன்னு கேட்கும் போது ஏதோ ஒரு வலி மனசுல...
training center படி விட்டு கீழ இறங்கும்போது தான் தெரிஞ்சு இருக்கும் இவ்ளோ மழையா!!ன்னு... மரத்துல இருக்கற குருவி அலகால இறகுகளை சரி பண்ணிகிட்டே சிலிர்க்கும் போது தோணும், ச்சே என்ன வேலைடா இது.. மழை பெஞ்சதுகூட தெரியாம நாளு செவதுகுள்ள உட்கார்ந்துகிட்டு 0, 1, linux, networks, switch, hub, dns, dhcp, router, class test, module test, lab test, viva, certifications, அது, இதுன்னு...
இதுல வேற ஒன்னும் தெரியலன்னு வாத்திங்க திட்டும் போது, வருமே ஒரு கடுப்பு... இன்னைக்கு போய் எல்லாத்தையும் படிச்சிரனும்ன்னு நானும் என் உயிர் தோழியும் தடாலடி முடிவெல்லாம் எடுப்போம் எல்லாம் பையோட போய்டும்..
ரூம் க்கு வந்ததும் அரட்டை அரட்டை அரட்டை... தாங்கதுங்க floor - ரே அதிருது...
:)

-------------------------------------------------------------------------------------------------
ஏகப்பட்ட சுவாரசியமா அனுபவங்கள், சுவாரசியமா நண்பர்கள்...

மினி இந்தியா என்னோட கிளாஸ் ரூம். :) என்னோட பெயர உச்சரிக்க வெக்க அவ்ளோ கஷ்டபட்டுட்டேன்.. 'ழ' - தமிழின் தனித் தன்மை அன்றோ!! :)
இன்னைக்கு கூட ஒருத்தன் கனிமொழி யையும் தண்டபாணி யையும் குழப்பி கண்டபாணி ன்னு கூப்பிடறான்........ ஒருவழியா ஒழுங்கா உச்சரிக்க சொல்லி கொடுத்தாச்சு!!!!!!!!!!!!! :)

இன்னும் பத்தே நாள் ஒரு வழியா training முடிக்க போறேன் டோய்!!!

-------------------------------------------------------------------------------------------------

"எடுத்ததும் ஐந்து இலக்க சம்பளம் என்பதால் உங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியல" என்று வகுப்புல ஒரு ஐயா சொன்னாரு... "என்ன மாதிரி சமுதயத்த நீங்க உருவாக்க போறீங்க என்பதை நினைத்தால் பயமா இருக்கு" என்றும் சொன்னாரு... யோசிக்க வேண்டிய விஷயம், இதை பத்தி நிறைய பகிர்ந்துக்கணும்... நேரம் இல்லாத காரணத்தால் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. இதை பற்றி நீங்க என்ன நினைக்கரிங்க???




Saturday, October 16, 2010

விழுங்கிவிட்ட வார்த்தைகள்


என்ன இருக்கு?
என்ன இருக்கா? இருங்க வரேன்..
ம்ம்ம்..
இந்தாங்க மெனு கார்டு...
........
wheat தோசை 1, மல்லி ஊத்தப்பம் 1, அதுக்கு முன்ன veg சூப் 1/2
அஆங்... இதெல்லாம் இருக்கு, ஆனா தர முடியாது....
ஏன்???!!
கூட்டமா இருக்குல...
( இந்த அசிங்கம் தேவையா மச்சி )


சனிக்கிழமை நைட்டு முட்டி மோதி ஹோட்டல் சீட் புடிச்சா, இப்படி சொல்லிடாரு தலைவரு..
வாய் வரைக்கும் வந்துரும் 'எதுக்குயா ஹோட்டல் நடத்துரிங்கன்னு' ....
ச்சீ... இவன திட்டி என்ன பண்ணபோறோம் என்று, விழுங்கி விட்ட வார்த்தைகள் ஏராளம்...

Saturday, October 2, 2010

நண்பிகள் & நண்பர்கள்...

இந்த டவுட் மட்டும் திர்த்து வெச்சுட்டா அடுத்த நொடியே ஏதோ ஒன்றை கண்டுபிடித்து விடுவதை போல் முகத்தை வைத்துகொண்டு இருக்கும் 'ராம்கி'...
என் அறைத்தோழிக்கு தமிழ் தெரியாமல், எனக்கு தெலுங்கு தெரியாமல்... ஒவ்வொரு முறையும் ஆங்கிலத்தில் உரையாடுவது புதுமை... அன்பிற்கு மொழி தடை அல்ல என உணர்த்திகொண்டிருகிறாள், எப்போதும் ராகத்தோடே பேசும் 'லிக்கி'...
அன்பினால் செய்த சிலை என் 'சந்தியா'...
எப்போதும் பரபரப்பாய் இருக்கும் 'ரேவதி'...
எல்லாத்துக்கும் நக்கல் அடிக்கும் 'நித்யா'...
சின்சியர் 'சிவாகுமார்'...
அமைதியான 'சுப்பு'...
குழந்தை 'ஜோயல்'...
விக்ரம், சத்தியக், சுஜாதா, etc... etc... etc...
ஏகப்பட்ட அன்பு உள்ளங்களை பெற்று ஒவ்வொரு நொடியும் சுவாரசியமாய், புதுப் புது விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்...
அவ்வபோது வலையுலகத்தை மிஸ் பண்ணும் உணர்வு மேலழும்... இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்குள்ள புது லேப்டாப் வாங்கிடலாம்...
:)

Missing u friends...

Sunday, September 12, 2010

மெய் அல்ல...

ஒரு காலினை கோணலாய் வைத்து நின்றுகொண்டு
மறுகாலிற்கு ஓய்வு தந்து
பை பத்திரமாய் இருப்பதை உறுதி செய்து
மூச்சையும் கொஞ்சம் சிரமத்துடன் விட்டான்....

வந்தது அலைபேசி
"ட்ரெயின் ஏறிட்டேன் மா,
ஆங், இடம்லாம் கெடச்சிடுச்சு. உட்கார்ந்துட்டு தான் வரேன்,
சாப்டேன் மா.. நீ?
ம்ம்.. சரி... வெச்சிடவா? "




அழைத்தது அன்னை,
நிற்பது unreserved compartment ல்...

Tuesday, August 24, 2010

நின் பெயர் தான் என்னவோ?


இருள் வீசும் இவ்வேளையில், இல்லாத உன் கைகளை, பிடித்து நடப்பது பிடித்திருக்கிறது...

கடிகாரத்தின் சப்தம் கூட அச்சமூட்டும் இவ்வேளையில், நான் இருக்கிறேன் எனும் வாயற்ற நின் குரல் நம்பிக்கை ஊட்டுகிறது ...

கலங்கிய கண்களோடும், அடைக்கும் தொண்டையோடும், நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு
கணமும் நின் தொடுதலை உணர முடிகிறது..

நீ இல்லாமையை உணரும் போதெல்லாம், உருவம் அற்ற நீ, அருகில் அமர்ந்து தோளில் கை போடுகிறாய்...

இரவில், தனிமையில், இசையில் லயித்து இருக்கும் போது முழுவதுமாய் உணர்கிறேன் உன்னை...



நின் பெயர் தான் என்னவோ?
அன்பா?
நம்பிக்கையா?
கடவுளா?
தோழமையா?
தனிமையா?
அல்லது
ஒன்றும் இல்லாத ஒன்றா???

Wednesday, August 11, 2010

அளவுக்கு மீறின அன்பினால்...

பேருந்தில் , "நேத்து காலேஜிக்கு போன பொண்ணு வீட்டுக்கு வரலமா.." என ஒரு தாய் அடி வயிற்றிலிருந்து கதறுகிறாள். எவ்ளோ வேதனை இருந்தா யாருனே தெரியாத என்கிட்ட அழுது இருப்பாங்க அந்த அம்மா... என்ன சொல்லி, ஆறுதல் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

இதேபோல் ஒரு முறை, என் தோழி 'ஜோ'வின், பள்ளித் தோழியின் தாயிடம் இருந்தது அழைப்பு வந்தது. அது சமயம் நாங்கள் இருவரும் ஒரே ரூமில் தங்கி இருந்ததால், அவள் என்னிடம் பகிர்ந்து கொண்டாள். விஷயம் இது தான் " நேத்து காலைல எப்பயும் போல வாக்கிங் போன பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலையாம் கனி, ஆனா இன்னைக்கு நான் பத்ரமா இருக்கேன் தேடாதிங்கனு கால் பண்ணி சொல்லி இருக்கா, பாவம் அவங்க அம்மா என் கிட்ட ஏதாவது சொன்னாலான்னு கேக்றாங்க கனி, நான் அவ கிட்ட பேசியே 2 மாசமாகுது".....
என்ன சொல்வது, என்று தெரியாமல் அன்றும் விழித்தோம்.

இது போல் ஒரு பெண் காணாமல் போனால் என்னனு நினைப்பது.. ஆயிரம் கேள்விகள் எதிர்படும் இல்லையா... கடத்தல், விபத்து, காதல், வேறு சில வீட்டு பிரச்சனை என்று. அக்கம்பக்கத்தார் கிட்ட கூட சொல்ல தயக்கபட்டாங்க அந்த பெற்றோர். போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவும் யோசிச்சு, அதனால் பொண்ணோட எதிர்காலம் பாதிக்குமோ என்று அதுக்கும் தயக்கப்பட்டு, பிறகு நண்பர்கள் எடுத்து சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணினாங்க...

பல்வேறு சிரமங்களையும், கண்ணீரையும் தாண்டி அவளை இரண்டு வாரங்கள் கழித்து தென்காசியில் காணாமல் போனவளை சென்னையில் கண்டுபிடித்தனர்...
வெளிய இருந்தது பார்க்கும் போது எல்லாம் ஒரு செய்தியாக மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு நாளும் அவங்க அம்மா, அப்பா பட்ட கஷ்டம் இருக்கே...
அவள் வீட்டை விட்டு போக முக்கிய காரணம், அம்மா, அப்பாவின் சந்தேகங்களும், ஏச்சுகளும் தான்.

அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும் இல்லையா...??

புரிதலின்மை...
புரிதல், இதுல பசங்களும் தன்னுடைய எண்ணங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக்கணும், பெற்றோரும் பிள்ளைங்க கிட்ட அவங்களோட எண்ணங்களை பகிர்ந்துக்கணும். சின்ன வசயுல உன்னோட கிளாஸ்ல படிக்கரவங்க பெயரையெல்லாம் சொல்லுன்னு ஆசையா கேட்கிற பெற்றோர். பிள்ளைங்க வளர வளர நண்பர்கள் பத்தியோ, தோழிகள் பத்தியோ கேட்டு தெரிஞ்சுகறது இல்லையோன்னு ஒரு எண்ணம் எனக்கு.

மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்... (நம்ம பிள்ளைங்களயாச்சு மனம் விட்டு பேசிபழக வளக்கணும்ப்பா)

பெற்றோரும் ஒன்னு புரிஞ்சிக்கணும், ஒரு வயசு வரைக்கும் தான் நீங்க எங்களை வளக்கரிங்க, அதுக்கு அப்புறம் தோழமையும், புத்தகங்களும், மீடியாவும் தான் அந்த வேலைய செய்யுது.

ஒருவன் ஒரு இடத்தில் இருந்தது ஓட விரும்புகிறான் என்றால் அவனுக்கோ அல்லது அவளுக்கோ எவ்ளோ பிரஷர் இருந்தது இருக்கும் என்பதையும் புரிஞ்சிக்கணும்.

"காதலை மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறான் ஒருவன், காதலால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என சொல்கிறது குடும்பம்.. மீறி, காதலோடு சேர்ந்தால் இதுநாள் வரை கிடைத்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அன்பை இழப்பேன். இல்லையேல் குடும்பமே திரண்டு வந்து பழிதீர்க்கும். பயந்து குடும்பத்தார்க்கு தலையாட்டினால், அன்புக் காதலை இழப்பேன்.."
எல்லாத்துக்கும் ஒரு தீர்வு, பொறுமை, பொறுமையாய்... உறுதியாய்... இருக்கும் போது உண்மையான அன்பு புரியும். காலம் புரியவைக்கும்.

இது காதலுக்கு மட்டும் இல்லை. எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் பொருந்தும். ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன். ஏதாவது ஒரு வகையில் இந்த பதிவு உதவும் என்ற நம்பிக்கையில்... :)




நம்மக்கென இருப்பது ஒரு life.. அதை எவ்ளோ அழகா ஆக்க முடியுமோ, அவ்ளோ அழகா மாற்றுவோம்......

Sunday, July 25, 2010

நட்சத்திரம்


எது தான் உண்மை?
அது பொய் எனத் தெரியாத வரையோ?

இதுவரை சூரியனே மிகப்பெரிய நட்சத்திரமாய் நினைத்து கொண்டிருந்தோம். அதனைக்காட்டிலும் 265 மடங்கு பெரிய நட்சத்திரம் வேறோரு நட்சத்திர மண்டலத்தில் இருப்பதாய் தெரிவித்துவிட்டார்கள். சூரியனை போன்று பத்து மில்லியன் அளவு பிரகாசம் கொண்டதாம் அந்த நட்சத்திரம்.
165,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாம் அது.
எத்தனை பெரியதோ இந்த அண்டம்...
வியக்கிறேன் இன்று...


அத்தனை பிரகாசம் கொண்ட நட்சத்திரத்தில் எவ்வளவு அணுகரு பிணைவுகள் ஏற்படுமோ.....
இதை விட பெரிய, பிரகாசமாக இன்னும் எத்தனை நட்சத்திரங்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றனவோ, கண்டுபிடிக்கப்படும் வரை இதுவே பெரியதாக நம்பப்படும்.
:)
இத்தனையையும் ஆட்டுவிப்பதும் எதுவோ?
தானாகவே ஆடுகின்றனவோ, ஒன்றும் விளங்கவில்லை.


வெறும் இயற்கையின், இயற்பியலின் காதலியாக மட்டும் நான்...

Friday, July 9, 2010

டியர் ஜான் (2010)

வாழ்க்கையின் சில நேரங்களில் பிரிதல் தவிர்க்க முடியாததாய் இருக்கும். உளமார நேசிக்கும் இருவர் பிரிந்து இருப்பதை காட்டிலும் மனதை வருத்தும் விஷயம் எதுவும் இருக்காது அவர்களுக்கு. அப்படி பிரியும் போது இருவரும் தமது நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது கவிதை. அக்கவிதையை பற்றிய படம் தான் Dear John (2010). இது Nicholas Sparks என்பவரின் நாவலில் இருந்து படமாக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்க்கவேண்டும் என்று முன்பே நினைத்திருந்தால் இத்தோடு நிறுத்திக்கொண்டு டவுன்லோட் செய்யவும். படத்தை பற்றி அறியாதவர்களுக்கு.....






John (Channing Tatum) மற்றும் Savannah Lynn Curtis (Amanda Seyfried) . John அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்பவன், Savannah கல்லுரி மாணவி.

Savannah வின் பக்கத்து வீட்டு நண்பர்கள் Randy மற்றும் Tim . Randy Savannah வினை ஒரு தலையாய் காதலிக்கிறான். Tim மிற்கு Allen என்னும் மகன் இருக்கிறான். Alan ஆட்டிசதினால்(Autism) பாதிக்கப்பட்ட சிறுவன். Alan னின் தாய் அவர்களுடன் இல்லை. யாரிடமும் அதிகம் பேச கூச்சப்படும் allen னிற்கு, savannah என்றால் பிரியம்.

John னின் தந்தை வயதானவர், மிகவும் அமைதியானவர், சிறப்பான நாணயங்களை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் மிகுந்த நாட்டம் உடையவர். வெளி உலகத்தில் இருந்து தன்னை துண்டித்து கொள்ளும் எண்ணம் உடையவர்.

விடுமுறையில் கடற்கரையில், ஒரு ரம்யமான மாலை பொழுதினில் John னும் Savannah வும் சந்திகிறார்கள். சில நாட்களில் நட்பு, காதலாகிறது. John னின் தந்தையை பார்க்கவேண்டும் என்கிறாள் Savannah. அந்த சந்திப்பின் போது தான் பாதுகாத்து வைத்து இருக்கும் அறிய நாணயங்களை பற்றியே பேசுகிறார் அவனின் தந்தை.

ரண்டு வார விடுமுறை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தநாள் savannah கல்லூரி விடுதிக்கு செல்ல வேண்டும். Savannah வினை சந்திக்க John கடற்கரைக்கு வருகிறான். பிரிவினை நினைத்து இருவரும் வருந்துகிறார்கள். திரும்பி நிச்சியம் வருவேன் என சத்தியம் செய்கிறான் John. Savannah ஏதோ சொல்ல விழைந்து இறுதியில் John னின் தந்தை மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பதையும். alan னைப் போல் அவரும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறுகிறாள். John மிகுந்த கோபம் கொள்கிறான், அந்த இடத்தை விட்டு நகருகிறான். கடற்கரையில் நக்கலடிக்கும் Randy மற்றும் Tim மையும் அடித்து விடுகிறான்.

டுத்தநாள் savannah விடம் மன்னிப்புக் கேட்க அவளின் வீட்டிற்கு செல்கிறான். வீடு பூட்டியுள்ளது. அவள் சென்றுவிட்டதாய் சொல்கிறான் Tim . தான் சொல்லுவதை Savannah விடம் சொல்லிவிட முடியுமா என கேட்கிறான். Tim இசையவே John ஏதோ சொல்ல வருவான், ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது. Tim ஒரு பேப்பர் தந்து அதில் எழுதி தர சொல்லுவான். முதல் கடிதம்.

John தன் வீட்டிற்கு செல்கிறான் அங்கு அவன் தந்தை, தான் Savannah விற்கும் சேர்த்து சமைத்து இருப்பதை சொல்கிறார். அவள் வரமாட்டாள் என்கிறான் John சோகமாக. தந்தை ஒரு பார்வை பார்க்கிறார். வெளியில் கார் வரும் சப்தம் கேட்கிறது. எட்டிப்பார்த்தால் Savannah கையில் John னின் கடிதத்தோடு நிற்கிறாள். ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடுகிறான் John . Savannah , தான் நேற்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்கிறாள். John , தான் அவ்வாறு கோபப்பட்டு இருக்ககூடாது என்பதைச் சொல்லி மன்னிப்புகேட்கிறான்.

Savannah , john னிற்கு ஒரு கடிதம் தருகிறாள். அவள் சென்ற பின்னர் படிக்கவேண்டும் என்கிறாள். பிரியாவிடை பெற்று செல்கிறாள். John னும் அவன் பணிக்கு திரும்புகிறான். Savannah கடிதத்தில் கூறி இருப்பதாவது, John மனதில் நினைக்கும் அனைத்தையும், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் மறைக்காமல் அவளுக்கு கடிதம் எழுதுமாறு வேண்டுகிறாள்.
John னின் இரண்டாம் கடிதம் போர்க்களத்தில் இருந்து,

Dear Savannah,

I promise you i will see you soon then. I promise i will write everything. I promise you, i will tell everything..................
.
.
Everything around me makes me missing you........



:) ஒவ்வொரு வரியும் அவ்ளோ அழகா இருக்கும். அந்த இசையின் பின்னணியில் கேட்டுபாருங்க, ரொம்ப நல்லா இருக்கும்.
அத்தனையும் அன்பு, அளவில்லா அன்பு... அவளும் பதிலுக்கு கடிதம் எழுதினாள், அவனின் தந்தையை சென்று பார்த்து வந்ததைச் சொல்லி பின் அவரின் மிகவும் விருப்பமான mule coin னின் பின்னணியினை கேட்பாள். அவனும் பதில் அளிப்பான் அது ஒரு முறை John சிறியவனாக இருக்கும் போது கிடைத்ததாகவும், பெறும் மதிப்பு கொண்ட அந்த நாணயத்தை விற்க மனமில்லாமல், அதில் இருந்தது தான் தன் தந்தையின் நாணய சேகரிப்பு ஆரம்பித்ததையும், காலபோக்கில் இவனுக்கு அதில் ஈடுபாடு குறைந்ததையும் சொல்லுவான்.

நாட்கள் நகர்ந்தது. செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாய் John னின் கமாண்டோ ஆப்கானிஸ்தான் செல்லவேண்டும் என்பதையும், மனைவி இருப்பவர்கள் யோசித்து கூறலாம் எனவும் சொல்லுகிறார். அந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைகிறது. முதன்முதலாய் பிரிவிற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். விமான நிலையத்தில் John னை கண்டதும் தடுப்புகள் உள் நுழைந்து வந்து கட்டியனைகிறாள். அப்பொழுது ஒரு போலீஸ் அந்த பக்கம் என கைகளை காட்டுவது அழகு. :)

விடுமுறையில் John , savannah வின் பெற்றோர்களை சந்திக்கிறான். பேச்சுவாக்கில் ஆப்கானிஸ்தான் செல்ல விருப்பதன் நிலை பற்றி பேசுகிறார்கள். தன்னிடம் கேட்காமல் முடிவு எடுத்ததை பற்றி வருந்துகிறாள் Savannah . அப்போது John சொல்லும் வசனங்கள் அருமை. அதை தொடர்ந்து வரும் " Cut the bond with the moon....." என்ற பாடலின் இசை அவ்ளோ அழகு. பாடலின் முடிவில் Savannah வின் கண்ணீர்... விவரிக்க முடிய சோகம் அது.

மீண்டும் விரைவில் சந்திப்பதாய் விடை பெறுகிறான் John ... அதற்கடுத்து வரும் "This is the thing...... " பாடல் மிகவும் நன்றாக இருக்கும். fink இன் குரலும், அதை காட்சியமைக்கபட்ட விதமும் அழகு. இந்த கடிதம் ஒன்று தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது என்று அர்த்தம் தரும் அப்பாடலின் வரிகள் இங்கே...

I don't know if you noticed anything different
It's getting dark and it's getting cold and the nights are getting long
I don't know if you even noticed at all
That I'm long gone baby, I'm long gone

And the things that keep us apart keep me alive and
The things that keep me alive keep me alone

This is the thing

I don't know if you notice anything missing
Like the leaves on the trees or my clothes all over the floor
I don't know if you'll even notice at all
Coz I was real quiet when I closed the door

And the things that keep us apart keep me alive and
The things that keep me alive keep me alone

This is the thing

I don't know if you notice anything different
I don't know if you even notice at all
I don't know if you notice anything missing

This Is The Thing
This Is The Thing

.......

சி வாரங்களாய் Savannah விடம் இருந்தது எந்த கடிதமும் வரவில்லை. ஒரு நாள் அவளுக்கு தொலை பேசியில் முயற்சிக்கிறான் John . ஒருவரும் எடுக்கவில்லை. அடுத்த காட்சியில் பராஷுட் கிழே விழுகிறது. அவன் மனம் உடைந்ததை தெரிவிக்க என்று நினைக்கிறேன்.

பின்பு ஒரு நாள் ஒரு கடிதம் வருகிறது John னிற்கு, அது "Dear John Letter" அதாவது காதல் முறிந்து விட்டது என்பதை காதலி, காதலனிடம் தெரிவிக்கும் கடிதத்தை "Dear John Letter" என்பார்களாம்.

Dear John,

I know i can't wait you long, since i lost love you. I have been starring at this plain page for the last two hours, all of them being honest i have been starring for last two months. Please forgive me for what i about to say, i know this the hardest thing, i never had to do. My life without us has no meaning............

என நீளும் இக்கடிதத்தினை படித்துவிட்டு. அவள் அனுப்பிய அத்தனை கடித்தையும் எரித்துவிடுகிறான். John கடிதங்களை எரித்து கொண்டிருப்பதை பார்த்து வினவும் அவன் நண்பனிடம், அழுது கொண்டே She was engaged with some other guy என்று கூறுவது வலியிலும் வலியானது.

பின் என்ன நடந்தது என்பது பாதி கதை....
ஏன் அவள் வேறு ஒருவனை மணக்கிறாள்? என்ன காரணம்? பின் இருவரும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

நான் ரசித்ததில் சில...

*** தந்தை இறக்கும் தருவாயில், அவருக்கு தான் எழுதிய கடிதத்தினை படித்து காண்பிக்கிறான் John . அதில் தன்னை ஒரு நாணயத்துடன் ஒப்பிட்டு கூறுவதும், முடிவில் Savannah வை இழந்ததை எண்ணி தன்னையும் அறியாமல் அழுவதும், அவனது தந்தை படுக்கையிலும் அவனை அனைத்து கொள்வதும்.... என்னனு சொல்லத் தெரியவில்லை, பாருங்கள் தெரியும்......

*** எப்போதும் I will see you soon then. என சொல்லி பிரியும் john , Savannah வினை திருமணத்திற்கு பின் சந்தித்து விடைபெறும் போது Good bye Savannah என்று கூறுவது வலியின் உச்சம்.

*** கடலில், மழை பெய்யும் நேரத்தில் நீந்திக்கொண்டே John அழும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பார்க்க அழகு. John அழுவதைத்தவிர.

*** ஒவ்வொரு முறையும், John "ம்ம்ஹும்ம்.." என்று சொல்லும் போது அவ்ளோ அழகாக இருக்கிறார். John னின் தந்தையின் நடிப்பு அருமை.

*** இசை, படத்தின் பிளஸ் மற்றும் "Think of me" என்ற பாடலின் வரிகளும் அழகு.

When you hear but you just don't listen
When you're looking but you just don't see
When you're thinking there's no rhyme or reason
Think of me
Think of me

When you're getting to the end of a hard day
And you're thinking it's a long way home
When you're thinking that you're just plain crazy
Because you're on your own
Think of me

Savannah வின் கடைசி கடிதத்தில் நீ எங்கு இருக்கிறாய் என்பதை தெரிந்துக்கொள்ளும் உரிமை கூட எனக்கு கிடையாது என சொல்கிறாள். என்ன நடந்தது என்பதையும் சொல்கிறாள். இனி John வருவதும் வராததும் அவனது விருப்பம். பின் என்னவாயிற்று?

முடிவினை பொறுத்தவரையில் நாவலில் ஒரு விதமாகவும், படத்தில் ஒரு விதமாகவும் சொல்லப்பட்டு உள்ளது.

நல்ல melodrama வகை படம். பார்க்கச் செய்த நண்பன் முரளி அவர்களுக்கு நன்றி... :) அவர் தான் என்னை எழுதவும் சொன்னது... :)

Monday, July 5, 2010

இனியாவது விழிப்போம்...

பேருந்தின் உள் இருப்பவர்களும், வெளியில் நொடியில் நகரும் காட்சிகள் என காண்பவை எல்லாம் வெளிர் மஞ்சள் நிறத்தின் கலவையாய் தெரிகின்றது.
நா எப்போதோ வறண்டு விட்டது.
மெல்ல வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பாய் மாற,காதுகள் அடைத்து, பேருந்தில் இருந்தது எங்கோ அழைத்துச் செல்லபடுவது போல் ஒரு உணர்வு. உடல் மட்டும் இதோ... இங்கே, இருக்கும் சக்தி அனைத்தும் கொண்டு இக்கம்பியினை பிடித்து நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டும்.... குடிக்க கொஞ்சம் தண்ணீர்....

05/7/2010 11:50 A.M

தண்ணி இருக்குங்களா?
இந்தம்மா... மயக்கம் வருதா? இங்க உட்கர்ந்துக்கொம்மா.... நல்லா குடி...
போதும்.. இந்தாங்க...
இன்னும் கொஞ்சம் கூட குடி... ஜென்னளுக்கா முகம் கழுவிக்கோ... நல்லா சாஞ்சி உட்கர்ந்துக்கொம்மா...

05/7/2060 11:50 A.M

தண்ணி இருக்குங்களா?
இந்தம்மா... மயக்கம் வருதா? இங்க உட்கர்ந்துக்கொம்மா.. இந்த ஒரு பாட்டில் தண்ணி தான், இதை ரெண்டு நாளைக்கு வெச்சி குடிக்கணும், அதனால ரொம்ப ரொம்ப கொஞ்சமா குடி..
ம்ம்ம்...
நல்லா சாஞ்சி உட்கர்ந்துக்கொம்மா...

...........................................................


ஐம்பது ஆண்டு கால இடைவெளியில், மனிதமும், தாய்மையும், மாறாது...
ஆனால் கையில் காசு இருந்தும் கிடைக்கும் குடி நீரின் அளவு மிகவும் மோசமாகிவிடும்...
ஒழுகும் குழாய், வழிந்தோடும் குடங்களை பார்த்தால் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்ததெல்லாம் போதும்...
இனியாவது விழிப்போம்...

Thursday, June 24, 2010

வெட்டி....

எப்போதாவது வெட்டியாக இருந்தால் பரவா இல்லைங்க. எப்பயுமே வெட்டினா.....
செம போர்..

கல்லூரி முடித்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கியுள்ளேன்.
வேலைக்கு எடுத்த கம்பனியோ, எப்போது அழைக்கும் என சொல்லவே இல்லை. குறைந்தது மூன்று மாதம் ஆகும் என நம்புகிறேன்.

அம்மா ஊர் சுத்தவும் விட மாட்டேன்றாங்க. :(

ஏதாவது ஒரு வேலை செய்து எப்படியாவது இருக்கின்ற நேரத்தை உபயோகமாக மாற்றிக்கொண்டு இருக்கேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு படமாவது பார்க்கின்றேன்.

அடுத்து புத்தகங்கள், சேட்டன் பகத்-இன் நாவல்கள் " One night at the call center", " Two states ". இரண்டும் படிச்சுட்டேன். இப்பொழுது " தீண்டாத வசந்தம் " படித்து கொண்டிருகின்றேன். இது ஒரு மொழி பெயர்கப்பட்ட நாவல். நாவல் முழுக்க, வலிகள் நிறைந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சு குமுறல்கள்.

மேலும் ஹிந்தி கற்றுக்கொண்டு வருகின்றேன். :)

சனி, ஞாயிறு காலையில் மட்டும் வகுப்பு. பெரும்பாலும் எல்லாருமே ஒன்னாவது, ரெண்டாவது பசங்க. அவங்களோட சேர்ந்து க, கா, க(ga), க(gha) என்று படிக்கின்ற சுகம் இருக்கே.......

ஹிந்தி சார், நக்கலாய் கேட்கும் கேள்விகளுக்கும், வெள்ளந்தியாய் பதில் சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... அந்த வெள்ளந்தி சிரிப்பெல்லாம் மரணித்து விட்டது நமக்கு.
"அக்கா உன்னோட பேர் என்ன?" இந்த கேள்வியை ஒரு குட்டி பொண்ணு நான் சென்ற முதல் நாள் மூணு முறை கேட்டுச்சு.

ஆனால் நம்ம, யாராவது பேர் சொன்ன அடுத்த நொடியே மறந்து போனாலும், ஈகோவினால் திரும்ப கேட்க கூட மாட்டோம். மறுபடியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தெரியத்தானே போகுது என விட்டுவிடுவோம் இல்லையா... :)

அப்படியும் வார நாட்கள் வெட்டியாய் கழிகின்றனவே என சுவற்றை பார்த்து யோசிக்கையில் ஒரு போஸ்டர் வரைந்தால் என்ன?.. என ஒரு எண்ணம் எழ தூரிகையை கையில் எடுத்தேன்.





நல்லா இருக்கா???? :)

ஒரு மகிழ்ச்சியான செய்தி, எங்களின் போட்டோ ஒன்று இந்த மாத PIT - இன் முதல் கட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஒரு அடி முன்னேறி இருப்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி... தலைப்பும் மகிழ்ச்சியே...



அடுத்து car driving கற்றுக்கொள்ள அம்மாவிடம் பிட்டு போட்டுள்ளேன்.. ஹிஹிஹி...

இன்னும் உபயோகமாய் கழிக்க என்ன செய்யலாம் இந்த வெட்டி நாட்களில்.....????
சமூகசேவை ?
எங்கு எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டுள்ளோம் நானும் தோழியும்.

யாரை அணுகுவது என தெரியவில்லை.
உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் பின்னுட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும்.

Wednesday, June 16, 2010

நாற்பத்து இரண்டும், நாமும்...


நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான் என்றான் என் நண்பன்.

உங்களைப்போலவே நானும் திகைத்தேன் '42' தானா அத்தனைக்குமான பதில் என்று.
கூகுளில் சென்று உன் கேள்வியினை அளி, என்ன தருகின்றது என்று பார் என்றான்.

அவன் கூறியது போலவே " The Hitchhiker's Guide to the Galaxy "யும் அடுத்ததாக நாற்பத்தி இரண்டும் வந்து நின்றது..

அப்படி, என்ன தான் நாற்பத்தி இரண்டில் உள்ளது என்பதை தேடினேன்.
கணிதவியலில் பல்வேறு சிறப்பு தொடர் எண்களில் நாற்பத்து இரண்டு மட்டுமே வருகிறதாம்.

அறிவியலில், வானவில்லின் கோணம் 42 டிகிரி.

அடிப்படை மாறிலிகளான (Constants) ஒளியின் வேகம் மற்றும் பூமியின் விட்டம் வைத்து ஒரு கோட்பாட்டினை (theory) கூறுகிறார் 'பால் கூபர்'. அதாவது பூமியின் மையக்கோட்டில் ஒரு புறத்தில் இருந்தது இன்னொரு புறத்திற்கு துளையிட்டு, ஒளியினை செலுத்தினால் அது மறு புறம் செல்ல எடுத்து கொள்ளும் கால அளவு 42 நிமிடம். வியக்கதக்க வகையில் பூமியின் மையக்கோடு வழி அந்த துளை செல்லவில்லை என்றாலும், ஒளியின் பயண நேரம் 42 நிமிடம் தான் ஆகிறது. இதனையே 'லெவிஸ் கரோல்' என்பவரும் தன் ஆய்வின் மூலம் கூறுகிறார்.

மேலும் பைபிளில் பல்வேறு இடங்களில் நாற்பத்து இரண்டினை சுட்டி காட்டுகிறார்கள். பைபிள் பக்கம் போக வேண்டாம் ஏனெனில் அதனையே கேள்வி குறியோடு நோக்கும் ஆட்கள் நாம்(நான்).

The Hitchhiker's Guide to the Galaxy -
படத்திலும் நாற்பத்தி இரண்டை குறிப்பிட்டு இருப்பார்கள், இருப்பினும் அது ஒரு fiction கதை மட்டுமே.

மேலும் 9 * 6 = 42 ஆம் ( பேஸ் 13 ).................

'வசூல் ராஜா MBBS படத்தில்' வரும் லக்கி நம்பர் 7 கதையாக உள்ளது. :)

இது மட்டும் அல்லாமல் எந்த ஒரு search engine னில் தேடினாலும் அக்கேள்விக்கு விடை 42 வருமாறு program செய்யப்பட்டதும் ஏனோ?

'நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான்' என்பது உண்மையோ, பொய்யோ, அல்லது 42 என்பது Douglas Adams எடுத்து விட்ட ஒரு சமவாய்ப்பு இலக்கமாகவோ (Random number ) இருக்கலாம்.

எனினும், நாம் தெரிந்து கொள்வோம் நாற்பத்து இரண்டை பற்றி.

...................................................................................................................

The Hitchhicker's guide to the galaxy - புத்தகத்தின் ஆசிரியர் Douglas Adams

42 தான் உண்மையான விடை என்றாலும் நம் புலனறிவு அதனை ஏற்றுக்கொள்ளாது. :)
ஏனெனில்,
நம் மூளையானது அதன் புலனறிவுகளால் வரையறுக்கப்பட்டது. அதன் வரையறைக்கு மீறிய ஒரு உறுபொருளை அதனால் புரிந்து கொள்ள முடியாது .

விடை தெரியாத அத்தனை கேள்விகளுக்கும் இது பொருந்தும்.

Wednesday, June 9, 2010

கேள்விகள் துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது..


கூண்டில் அடைப்பட்ட குருவியும் நாமும் ஒன்றோ?

எதற்காக நாம் வாழ்ந்து கொண்டு இருகின்றோம்?

இக்கேள்வி இன்று காலை முதல் என்னுள் துளை இட்டு கொண்டு இருக்கின்றது.

நாம் வாழும் இந்த வாழ்க்கை முறை நமக்கு பிடித்து இருக்கின்றதா?

வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குளாகவே வாழ்ந்து கொண்டு இருகின்றோம்.

வரையறுக்கப்பட்ட கல்வி, உணவு, வாழ்க்கை முறை.

ஒப்புகொண்டாலும், மறுத்தாலும் பணத்தின் பின்னால் ஒரு ஓட்டம்.

ஒரு வேலை பணம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்து இருப்பின் இவ்வுலகம் என்னவாக இருந்து இருக்கும்?

கேட்டேன் நண்பனிடம் "எதற்காக நாம் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்?" என்று.

அந்த கேள்வியை தூக்கி எறி என்றான் ஒற்றை வரியில்.

இந்த கேள்விக்கான பதிலை தேட மறுக்கின்றோமோ?

சற்றே வெளியில் நடந்தேன்.

ஒரு குருவி கூண்டு தென்பட்டது,
உள்ளே ஆறு குருவிகள்.
அதுவே அதன் உலகம்.
உணவு ஒன்றே அதன் கதி.
தன்னுடைய ஆசைகளுக்காக உணவை மட்டுமே வழங்கி அக்குருவிகளின் முழு சுதந்திரத்தை பறித்துக்கொண்டு, அவற்றை பார்த்து மகிழும் மனிதனின் சிறுமை, சிரிப்பை மட்டுமே வரவைத்தது.
கூண்டில் இருக்கும், இந்த குச்சிக்கும், அந்த குச்சிக்கும் தாவி கொண்டிருக்கும் அக்குருவிக்கு தெரியுமா, தன்னால் ஒரு பெரிய மரத்தின் உயரத்திற்கு பறக்க முடியும் என்று?
தன் ஆற்றலை உணரலாமல், உணர வாய்ப்பு இல்லாமல், அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் அக்குருவியும், 'ஏன் படைக்கப்பட்டோம்' என்ற வினாவிற்கு விடைதெரியாமல் சுற்றி கொண்டிருக்கும் நானும் ஒன்றன்றோ...
ஜன்னலின் வழி எட்டி பார்கையில்,
வண்டியில் இருந்தது ஓடுகளை இறக்கி கொண்டிருந்தார்கள்..


கேள்விகள்
துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது
நம் ஒவ்வொருவரையும்
கண்டுகொள்ளாதது போல் நடிப்பது ஏனோ?

முயன்று,
முயன்று ,
விடை தெரியாத அயர்ச்சியில், தேட மறுகின்றோமோ?

Sunday, June 6, 2010

செடியும் குழந்தையும்..


கீழே வைக்க மனமில்லாமல்...

( சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5 அன்று, பெட்ரோல் பங்கில் தரப்பட மரக்கன்று. பரிகாரம் என்று நினைக்கிறேன்.... )

இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது போல் ஒரு உணர்வு.

ஒவ்வொரு கன்றையும், செடியையும் பார்க்கும் போது அப்படியே வீட்டுக்கு தூக்கிட்டு போய்விடலாம் என்று தோன்றும்.

ஒரு செடியை வாங்கினாலோ, பதியனிட்டது அழகாய் வந்து விட்டாலோ, ஒடித்து நடப்பட்ட கிளையில் தளிர் வந்தாலோ, ஒரு சந்தோஷம் வரும் பாருங்க, அதற்கு இணை ஏதும் இல்லை.

இந்த சந்தோஷத்தை அனுபவிக்கவாயினும் ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றி தான் பாருங்களேன்.

Wednesday, May 26, 2010

இரு வேறு ஊமைகள் ..















எப்போதுமே அழுக்காய் இருக்கும் பேருந்து நிலையம்,
எப்போதாவது சுத்தம் செய்யப்படும் டீலக்ஸ் பஸ்,
நேத்து பார்த்த அதே பிச்சைக்கார தாத்தா,
அதே 'அம்மா' என்னும் குரல்,
நேற்று சட்டென காசெடுக்க உள்ளே போன 'கை'
இன்று போக மறுத்தது
மூளையின் கட்டளைக்கு இனங்க
கண்கள் பேருந்தின் உள்ளே திரும்பின.
உள்ளே,
வேறோரு தம்பி தன்னை ஊமை என
துண்டு சீட்டினால் விளம்பரம் செய்து கொண்டிருந்தான்
என் மீதும் துண்டு சீட்டு விழுந்தது
திரும்பி வந்து நின்றவன்,
வாய்திறந்து நாக்கை காட்டினான்,
அறுபட்டது போலவே இருந்தது.
ஏற்கனவே இது போல் நிறைய பேரை பார்த்து இருந்தாலும்
மனதின் கட்டளையால் 'கை' காசெடுக்க போனது,
சில்லரையை கொடுத்தேன்...
வாங்கினான், கடனை வசூலிப்பவன் போலவே
பேருந்தின் கீழே இறங்கியவனை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
யாரிடமோ,
பேசினான் அவன்.
ஊமையை நான்.


( மூளை சில சமயம் ஊமையாய்,
மனம் சில சமயம் ஊமையாய்... :-) )

Friday, May 21, 2010

அவள் ஒரு தேவதை - 1

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகள் மிக அதிகம், ஒரு சிலரைத் தவிர.

சமீபத்தில் ஒரு தேவதையை சந்திக்க நேர்ந்தது.

நேர்காணல் முடித்துவிட்டு, நானும், என்னுடன் முன்சுற்றில் தேர்வான, என் கல்லூரி தோழி சரண்யாவும் (அவளையே முன்னாள் தான் தெரியும் :-) ) புல்லு புடிங்கிக்கொண்டு இருந்தோம்.

முடிவுகள் ஆறுமணிக்கு தான் என்று தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார்கள். அப்போது மணி 11:00 . கொண்டுவந்த சாப்பாட்டை உள்ளே ஏற்கனவே தள்ளிவிட்டதால்,
"வா.. கனி.. ஏதாவது விளையாடலாம்" என்றாள் சரண்யா.

என்னுடைய எண்ணமெல்லாம் நான் சரியாக நேர்காணலை செய்தேனா? நிறை குறைகள் என்ன? என்பதிலேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், மெல்ல அவளை பார்த்து என்ன விளையாடலாம் என்றேன், என் குரலில் சிரத்தை இல்லாதது எனக்கே தெரிந்தது.
அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. " கடவுளே இன்னும் கிட்டத்தட்ட எழு மணி நேரம் எப்படி தான் ஓட்ட போறோமோ? , நல்லவேளை இப்படி அழகாய் உட்கார புல் தரையாவது இருக்கு " புற்களின் நுனிகளை ஓயாமல் கிள்ளிக்கொண்டு இருந்தேன்.
" ம்ம்ம்... ஓடிபுடிச்சி விளையாடலாமா? " என்றாள் அவள்.
கடுப்பாகி, ஒரு முறை அவள் கண்களை பார்த்துவிட்டு, "எங்க, இங்க உனக்கு ஓடி புடிச்சி விளையடுனுமா?" என்றேன்.
என் கடுப்பில் அவள் சிரித்துவிட்டாள்.
முன்னாள் ஆவது திருவிழா மாதிரி இருந்தது அந்த கல்லூரி, என் உயிர் தோழி சாய் கூடவே இருந்ததால், வேடிக்கை பார்த்துக்கொண்டே, அந்த கல்லூரியை சுற்றிகொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் இன்று, வெறும் 150 பேர் மட்டுமே. அந்த கல்லூரியின் கட்டிடத்தில் நாங்கள் வெறும் எறும்புகள் போலவே காட்சி அளித்தோம்.

சரண்யாவுக்கு நேர்காணல் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்பட கதையில் போய் முடியவே, ஏகமாய் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அப்போதைக்கு, சரண்யாவும், அடிக்கடி வரும் குறுஞ்செய்திகளும் மட்டுமே எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

கண் அயரும் நேரத்தில் "ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று ஒரு பெண்ணின் குரல்.
யாருடா அது என நிமிர்ந்து பார்க்கையில் அவளே தான், பெயரை மறந்து இருந்தேன், நேற்று முன் சுற்றிற்கான முடிவுகளை வெளியிட்ட பின் ஒரு அறைக்கு செல்லுமாறு அறிவுருதப்படோம்.

அப்போது தான், அவளை முதன்முதலாய் பார்த்தேன். பரஸ்பரமாய், பெயரையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவுதான்.

அடுத்த சந்திப்பிலேயே இவ்ளோ பெரிய ஹாய் நான் எதிர் பார்த்திராதது.
"ஹைய்யோ........ ஆறு பேர் கிட்ட இருந்து மிஸ்டு கால்".... என்று சொல்லிக்கொண்டே செல் போனில் முழ்கிகினாள். பேசிக்கொண்டே கையில் வைத்து இருத்த file - ளையும், ஒரு பெரிய purse -யும் நீட்டினாள். வாங்கி கீழே வைத்தேன். பையை கீழே போட்டுவிட்டு. பேச்சு சுவாரசியத்தில் புள் தரையில் நடந்து, நடந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"உன்னோட ப்ரிண்டா கனி??" என்றாள் சரண்யா.

ஆமாம் என தலையை ஆட்டினேன்.

ஒரு வழியாய் எல்லோரிடமும் பேசிவிட்டு நாங்கள் இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள்.

"எப்படி போச்சு இண்டர்விவ்?" என்றேன்.

"நாளு பேரும்மா, அதுல ஒருத்தன் கேட்டான், நைட் ஷிபிட்க்கு வருவியானு, நான் சொன்னேன் எஸ் சார், அப்புறம் பக்கத்துல இருந்தவன் கேட்டான், தொடர்ந்து நைட் ஷிப்ட்டே... போட்டா வருவியான்னு, நான் சொன்னேன் எஸ் சார், அவனுக்கு பக்கத்துல இருந்தவன் கேட்டான் மூணு ஷிப்ட்டுமே தொடர்ந்து வொர்க் பண்ண சொன்னா செய்வியான்னு, நான் சொன்னேன் எஸ் சார். நானும் எவ்ளோ நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது கனி , முடியல... " என்று முடித்தாள்.

"உனக்கு எப்படி" என்றாள்.

"எனக்கு formal ஆக தான் இருந்தது" என்றேன்.

சரண்யாவை விசாரிக்க, மறுபடியும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' கதை ஓடியது...
"எனக்கு பசிக்கிது யாரு கேண்டீன் வரிங்க" என்றாள்.

ஏற்கனவே மொக்கி இருந்தாலும் அவளுக்காக போகலாம் என்றே இருந்தது. அவள் இரண்டு பரோட்டாவை ஒன்றரை மணி நேரமாய் சாப்பிட்டு கொண்டே அவள் போட்ட மொக்கைகளை, அழகாய் கேட்டுக்கொண்ட என்னையும் சரண்யாவையும் கேண்டீனில் இருந்த அத்தனை பேரும் அனுதாபமாய் பார்த்தனர். :-)

"நீ என் RJ வா ஆக கூடாது வைஷு" என்றேன் (அவள் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டேன் ). இடைவிடாமல் மொக்கை போடவும் தனித்திறமை வேண்டும் அல்லவா...

"நீ ஏன் வளரவே இல்ல, வைஷு ", என்றாள் சரண்யா.

"நீ என்ன எனக்கு காம்ப்ளான் கொடுத்தாயா, அல்லது ஆர்லிக்ஸ் தான் கொடுத்தாயா? நான் வரளவில்லை என கவலைப்பட" என்றாள் செம குரலில்.

"எவ்ளவோ ட்ரை பண்ணாலும் பபுள் மட்டும் வரமாட்டேன்குதுப்பா" என்றாள்.

sprite வாங்கி கொடுத்து உள்ளே தள்ள வைத்தோம்.

"என்னோட juniors க்கு எதை சொல்றேனோ இல்லையோ இந்த காலேஜ் கான்டீன்ல பரோட்டா மட்டும் வாங்காதிங்கன்னு சொல்லிவைக்கணும்" என்றாள்.

மெல்ல அவள் சாப்பிட்டு முடித்ததும், நகர்ந்தோம்.

இசை, புத்தகம், கல்லூரி வாழ்க்கை என ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள். இடையில் விண்ணைத்த்தாண்டி வருவாயா பாட்டு போட்டு சரண்யாவை ஓட்டிக்கொண்டே, இருந்ததில் நேரமும் ஓடியது.

அவளுக்கும் காஞ்சிபுரம் தான் என்பதால், இன்னும் ஆறுதலாய் இருந்தது.
மாலைக்குள் நட்பு ஏகமாய் வலுப்பெற்றது. அவள் ஏதோ ஒரு பெண்னை பார்த்து நக்கல் அடித்தாள், சிரித்துகொண்டே அவள் நெற்றியில் இடிக்கும் அளவுக்கு நெருங்கினோம்.
.
.
முடிவுகளை அறிவித்த போது, அவள் பெயரை படிக்கையில் அவளைவிட பன்மடங்கு சந்தோஷத்தில் இருந்தேன். கட்டியணைத்துகொண்டோம்.

அவள் அப்பாவிற்கு, அவள் வேலைக்கு செல்லவிருப்பதில் விருப்பம் இல்லை, திருமணம் செய்து வைக்க நினைக்கிறார், என்பது போல் பேசினாள். "நான் எப்படியாவது பேசி சமாளிச்சு வந்துவிடுவேன் கனி".... என்றாள் சிரித்து கொண்டே.
மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் விடைப்பெற்றோம்.


சரியான படிப்ப்ஸ், சராசரி மதிப்பெண் 89% அவளுக்கு... :-) நான் ஒரு யூனிட் டெஸ்ட்ல கூட எந்த பாடத்துளையும் இவ்ளோ மதிப்பெண் வாங்கினது கிடையாது.
பல மொக்கைகளைத் தவிர, உடன் வந்து தோல்வி அடைந்த தோழிகளை அவள் தேற்றிய விதத்தையும், பிறருக்கு உதவும் குணத்தையும் என்னவென்று சொல்ல...

அவளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.
நல்ல நட்பை பெற்ற சந்தோஷத்தில் நான்.

....................

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைவதே தூய நட்பாம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் பலரில் சிலர் மட்டுமே என்றும் நம் நெஞ்சத்தில் ஊன்றி இருப்பர்.
அவர்களிடம் நாம் பழகியது சில மணி நேரமாய் இருந்தாலும் அவர்களின் தாக்கம், அளவிட முடியாததாய் இருக்கும்.
என்னை தாக்கிய சில தேவதைகளை பதிவிட விரும்பி செய்த, என் முதல் முயற்சி .

Wednesday, May 19, 2010

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!
"இனி தம்பியோட fees க்கு கஷ்டப்பட வேண்டியதில்லை அம்மா"
என்றேன் நேற்று.
அன்னையின் கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர்......

தந்தை விட்டு சென்ற அத்தனை பொறுப்புகளையும்,
செம்மையாய் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக நல்ல கம்பெனியில், தேவைக்கும் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. :-)

கடந்த இரண்டு நாட்களாய் நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றது மொத்தம் 1498 பேர் இறுதியில் தேர்வு செய்யப்பட்டது 80 பேர்.

அதில் நானும் ஒருத்தி என அறிவித்த போது....... அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. துள்ளி குதித்து ஓடினேனாம், தோழி ஒருத்தி சொன்னாள்.

இந்த வேலை எனக்கு கிடைக்க, என்னை விட பலமுறை கடவுளிடம் வேண்டிய, வேலை கிடைத்ததும் என்னை விட பல நூறு முறை சந்தோஷப்பட என் அன்பு தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உறவினர்களுக்கும் மிக்க நன்றி.

சோர்ந்த போதெல்லாம் தட்டி கொடுத்து, வெற்றி பெற்றபின் தொலைபேசியில் ஓவென கத்தி மகிழ்ந்த என் நெஞ்சார்ந்த தோழி 'யுஜி' மற்றும் அன்பு 'ரங்கி'கும் என்றும் என் அன்புகள்.... :-)





வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாட்களில் பயணித்து கொண்டு இருக்கின்றேன்... :-)

Saturday, May 15, 2010

நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி......

"மாமி, இன்னிக்கு மழை வர மாதிரி இருக்குல..."
"இன்னிக்கு வர வேண்டாம் கனே*, நேத்து தானே நட்டோம், இன்னும் பச்ச கட்டல இல்ல, மழை பெஞ்சா தாங்காதுமா"

"கடவுளே இன்னைக்கு மழை வேண்டாம் நாளைக்கு சேர்த்து வெச்சி பெய்யட்டும்......"

அது தான் நான் முதல் முறை மழை வேண்டாம் என வேண்டியதாய் இருக்கும்.

தாத்தா இறந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான்
நெல்லு போட்டு இருக்கோம்.

"நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி...... " :-)




செம காத்து...













விட்டு, நாலடி நடந்து வந்ததுக்கு, ரெண்டு எலுமிச்சை, ரெண்டு மாங்காய்....



(உள்ள பாம்பு இருக்கா??
இல்ல சிலந்தி தான்... :-) )



அதோ தெரியுதே.... அதுதான் எங்க வீடு...

காத்து வாங்கிக்கொண்டே நடக்கையில், தோன்றியது 'குடுத்து வெச்சவ கனி நீ' என்று....
சிரித்து கொண்டே ரசித்தேன்...

"எங்க, போட்டாத கூட எடுக்க முடியல" என்று யாரோ பேருந்தில் புலம்பியது நினைவிற்கு வர, யோசனை எங்கோ போனது...



(கனே - கண்ணே என்பதன் மருவு )

Monday, April 26, 2010

நாமும், அணுக்கருவும்...

ஏப்ரல் 26,
Chernobyl Day,

சிலருக்கு நினைவு இருக்கலாம். சிலர் மறந்து போயும் இருக்கலாம். எனக்கு இந்த வருடம் தான் 1986 - ல்
Chernobyl - ல் நடந்த பெரிய அணுக்கரு விபத்தை பற்றித் தெரிய வந்தது. மேலும் கடந்த வாரம் discovery channel - ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இந்த விபத்தை பற்றியும், அதனால் இன்றளவும் ஏற்பட்டு வரும் நோய்கள் பற்றியும், இனி என்ன நடக்கும் என்பது பற்றியும், மிகத் தெளிவாய் சொல்லி இருந்தார்கள்.

You tube -ல் இருக்கும் இந்த சுட்டியையும் பார்க்க.

Chernobyl - ல் அணுக்கரு விபத்து நடந்து முடிந்த மூன்றாம் நாள் தான் செய்தியை வெளியில் விட்டு இருக்கிறது அப்போது இருந்த ஐக்கிய சோவித் ரஷ்ய அரசாங்கம். ஏகப்பட்ட பொய்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். " அணுக்கரு சக்தி மனித சக்தியை மீறிவிட்டது", என்று எளிமையாய் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த விபத்தினால் வெளியேற்றப்பட்ட கதிரியக்க caesium-137, strontium-90 , iodine, மற்றும் plutonium ஆகிய தனிமங்களின் ஐசோடோப்க்கள் இன்றளவும் மக்களை பாதித்து வருகிறது.

ஹிரோஷிமா, நாகசாகியில் எற்படுத்தப்பட்டதை போல 100 மடங்கு கதிர்விச்சு.
சாதரணமாக, ஒரு கையடக்க கதிரியக்க அளவுகோளானது அதிகபட்சமாக 4 roentgens per hour வரை கணக்கிடுமாம். ஆனால்
Chernobyl -இன் மேற்கூரையில் மட்டும் கதிரியக்கத்தின் அளவு 2,000 and 15,000 roentgens per hour என்று இருந்தது அப்போது.

தொடர்ந்து கதிரியக்க தனிமங்கள் வெளியேற்றப்பட்டு கொண்டே இருந்ததால், அந்த அணுக்கரு உலையின் மேற்புறத்தில் ஒரு தடுப்பு சுவர் போன்ற அமைப்பை கட்ட எண்ணி ரோபோட்டுக்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கதிரியக்கத்தின் விளைவால் ரோபோட்டுகளும் செயல் இழக்கவே, ராணுவ வீரர்கள் கொண்டு 200m அளவுள்ள காண்க்ரீட் கூரையை 1989 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம்.

You tube Video வில் இருவர் முகமூடி போட்டுகொண்டு எதையோ அள்ளி கீழே வீசுவதைப் பார்க்கலாம். அவர்கள் தான், பயோரோபோட்டுகள் (Bio Robots ) என்று அழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் (அனைவருமே 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று).

அது தான் கூரையின் மேற்புறம், அவர்கள் கையாளுவது மணிக்கு 2000 ரோஜெங்களை வெளியிடும் கிராபைட் துகள்கள். அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் காரணமாக, மனிதர்கள் 40 நொடிகள் மட்டுமே அங்கே இருக்க முடியும், அதுவும் 30 கிலோ எடை கொண்ட ஈயத்தால் ஆன பாதுகாப்பு உடையுடன் மட்டுமே போக முடியும்.

ஆகவே இந்த வேலையையை செய்து முடிக்க மட்டும் சுமார் 6,00,000 பயோரோபோட்டுகள் பயன்படுதப்பட்டனர். பின்னர் அத்தனை பேரும் கதிரியக்கத்தின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டனர்.

24 வருடம் கழித்து அவர்களில் இன்று 1,50,000 பேர் மட்டுமே உயிரோடு இரு
க்கின்றனராம்.

எஞ்சி இருப்போருக்கு உரிய ஊதியம் கூட வழங்கவில்லை அந்த நன்றயுள்ள அரசு.
உண்மையில், இன்றளவும் இத்தகைய கதிரியக்கத்தினால் ஏற்படும் மனித உயிர் இழப்புகளின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு வருகிறது.

2005 யில்
Chernobyl ஐ green peace குழு ஒன்று ஆராய சென்ற போது ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

" Today I learned that the radioactive material still in the reactor can blow up any second. " என்று.

" அணுக்கரு கதிர்விச்சு பிரளயம்" யோசிக்கவே பயமாக இருக்கிறது.


விபத்து ஏற்பட்டதன் காரணம் அனுபவம் இல்லா ஊழியர்கள் என்று சொல்லபட்டாலும், வருங்காலத்தில் இப்படி ஒரு கோர விபத்து ஏற்படாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வபோது உறுதி செய்ய வேண்டும்.

கதிரியக்க கழிவுகள் பற்றி பெரும்பாலும் பலருக்கு தெரியும் என்று நம்புகிறேன். நேரம் இருப்பின் நம்ம கல்பாக்கத்தை பற்றிய இந்த செய்தி தொகுப்பையும் படிக்க வேண்டுகிறேன்.

உலகத்தில் தேவைப்படும் மின்சாரத்திற்கு நாம் பெரிதளவில் இந்த அணுக்கரு உலைகளையே நம்பி இருகின்றோம்.

நேற்று " நீயா நானா" வில் சொன்னது போன்று "ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் அழிவுகள் இருக்கத்தான் செய்யும்" .

வேறு ஒருவர் வலியில், நாம் நம் அறைகளுக்கு குளிரூட்டிக் கொண்டு இரு
க்கின்றோம்.

இத்தனை அபாயங்களுக்கு நம்மையும், வரப்போகும் நம் தலைமுறையினரையும், உட்
படுத்திக்கொண்டு பெறப்படும் மின்சாரத்தை, மிகச் சிக்கனமாய் பயன்படுத்துவோமாக (என்னையும் சேர்த்தே)...

Friday, April 23, 2010

sms -ல் வைரஸ்


வழக்கமாய் வரும் கனவுகளை போல் இல்லாமல், போன வாரம் ஒரு வித்தியாசமான தொழிற்நுட்ப கனவு.
;)

வைரஸ்.

அதுவும் sms ல் வைரஸ்.

என்னோட மொபைல்க்கு ஒரு மெசேஜ் வருது, என்னதுன்னு ஓபன் பண்ணா, வைரஸ் ஆக்டிவேட் ஆய்டுச்சி. அதுவே தன்னால contacts ல இருக்கின்ற எல்லா நம்பர்களுக்கும், forward பண்ணிக்குது. மொத்தத்தில் கையிருப்பு அதாங்க balance காலி.

இந்தமாதிரி வைரஸ் உருவாக்கம், sms ல் தற்போது சாத்தியமில்லை என்றாலும், வருங்காலத்தில் உருவாக்கபடலாம்.
;)

ஆனால், மொத்தம் மெசேஜ் சைசே 140 அல்லது 160 பிட்ஸ் தானே... அது எப்படி வைரஸ் வர முடியும்???
அதுமட்டும் இல்லாம , ஒரே நேரத்துல 10 பேருக்கு மேல மெசேஜ் அனுப்ப முடியாது. லாஜிக் இடிக்குதே.........
???
??
?


எதுவுமே நடக்கலாம்... :-)

Thursday, April 15, 2010

கைவிடப்பட்ட கைத்தறிகள்


திடீரென்று என்ன... கைத்தறி பற்றி எல்லாம்...??

நெசவு குடும்பத்தில் பிறந்த நான் பேசாமல் யார் பேசுவது....

ஆம், அம்மா வீட்டில் பட்டு நெசவு, அப்பா வீட்டில் லுங்கி நெசவு.

பட்டு நெசவை நான் பிறப்பதற்கு முன்பே கைவிட்டுட்டாங்க. நான் வளர்ந்தது எல்லாம் லுங்கி நெய்யும் சப்தத்துடன் தான்.

ஓரளவிற்கு நல்ல வருமானத்தை தந்த கைத்தறிகளை கைவிட முக்கிய காரணம், விசைத்தறிகளின் வரவு. ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, விசைத்தறிகளின் மூலம் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி செய்ய முடியும். ஆகவே அதன் ஆதிக்கம் கைத்தறி நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க விடாமல் செய்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் நெசவாளர்கள் மாற்று தொழிலை தேடினர். ஒரு காலத்தில் அதாவது நான் ஆறாவது படிக்கும் போது, காலையில் சைக்கிள் ஓடிக்கொண்டு எங்கள் தெருவினை எளிதாக கடந்து விட முடியாது. தெருவின் இரு புறங்களிலும் பாவு போடப்பட்டு இருக்கும்.
ஆனால் இன்று, கடப்பாரையின் தடம் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதிஷ்டவசமாய் எங்கள் பகுதி ஸ்ரீபெருமந்தூர் மற்றும் ஓரகடம் SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu ) - இதற்கு பக்கமாய் இருக்கவே, வேலைவாய்பிற்கு குறைவில்லை.

கைத்தறி இருந்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் தோழமையாய் இருந்ததாய் எனக்கு ஒரு உணர்வு. அப்போது ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்ததால் அப்படி தோன்றியதோ தெரியவில்லை. ஆலைக்காரம்மா, பாவு தோய்த்து தருபவர், நூல் இழைபவர்கள், வீட்டில் தறி நெய்பவர்கள், பாவு போடுபவர்கள், என பல பேருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இன்று, என் ஊர் முற்றிலும் நகரமயமாக்கப்பட்டு உள்ளது. ஷிபிட் முறையில் எல்லாரும் வேறு வேறு வேலைக்கு செல்வதால் தோழமைக்கு நேரமில்லை. தெருக்களும் வெற்று சிமெண்ட் சாலைகளாய் காட்சியளிகிறது.

மாற்றங்கள் எங்கள் வீட்டு தறிக்கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து உபகரணங்களையும், விற்றுவிட்டார் எங்கள் சித்தப்பா. கரணங்கள் நிறையவே உண்டு. மேலே சொன்னதுபோல பாவு வரவு தட்டுப்பாடு, தாத்தாவை ஓய்வு பெற செய்ய, என சொல்லிக்கொண்டே போகலாம்.

எது எப்படி இருப்பினும், தறிக்குழியினுள் மண் அள்ளி போட்டவுடன் என் தாத்தாவின் கண்களில் இருந்து வழிந்த நீர் மிகவும் வலியுடையது. 'இனி நாம் பயன்படமட்டோமோ' என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி அது அவரை மேலும் முடக்கியது. ஆனால் இது அவருக்கு ஓய்வு தேவைப்படும் வயது என்பதை, மெல்ல புரியவைத்தார் என் சித்தப்பா.

இந்த மாற்றங்களால் பெரும் பயன் பெண்களுக்கே என்று சொல்லலாம். ஏனெனில், அச்சு பிணைப்பதிலும், நூல் இழைப்பதிலும் கிடைத்த வருமானத்தைவிட இப்போது நல்ல வருமானத்தில் வேலைசெய்கிறார்கள்.

ஊரில் முன்பு இருந்ததைவிட 4 மடங்கு மக்கட்த்தொகை பெருகிவிட்டது. புலம் பெயர்ந்த மக்களே அதிகம். எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தோர். கூடவே சுற்றுசுழல் மாசுபாடும் அதிகமாகிவிட்டது. சும்மா இருந்த தறி கூடத்தை, "நாளு செவுரு எழுப்பினா வாடகைக்காவது விடலாம் " என்ற யாருடைய யோசனையோ, உருவம் பெற்றது.

எங்கள் தறிக்கூடத்தில் எனக்கென ஒரு ஊஞ்சல் இருக்கும். என்னுடைய விடுமுறை தினங்களில் பெரும்பாலும் அங்கு தான் இருப்பேன். நான், தம்பி, வசந்தி, நித்தியா, காயத்திரி என எல்லோரும் விளையாடுவோம்.

எங்களை தன் உஞ்சளால் தாங்கி தாலாட்டிய எங்கள் தறிக்கூடம் முற்றிலும் தடம் இன்றி சிதைந்ததுவிட்டது.

" இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்."

எனக்கு என்ன வருத்தம் என்றால், முன்பு என் ஊரார் எல்லோரும் முதலாளிகளாய் இருந்தனர். ஆனால் இப்போது, ஏதோ ஒரு தொழிற்சாலையில் கூலிகளாய் இருகின்றனர். என்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொங்கல், தீபாவளி போல பண்டிகை நாட்கள் என்றால் விடியற்காலை எல்லாம் தறி சப்தம் கேட்கும்.

ஆனால் இன்று,............... :-)

Saturday, April 3, 2010

துள்ளி எழுந்திடடி, என் தேவதையே...


























துள்ளி
எழுந்திடடி, என் தேவதையே
நின்னைச் சுற்றி இருக்கும் முட்டாள்களுக்கு,
நீ யார்ரென புரியவைப்போம்.

நீ சோர்ந்து இருப்பதனால்,
இந்த சோலையும் சோர்ந்ததடி.

அஞ்சி இராதே, - நீ
இப்புவி ஆளபிறந்தவளடி.

மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.

பாரதி பெற்றவளே, - நீ
துயர்கொள்ளல் ஆகுமோ?

இறக்கை விரித்திடடி, - உந்தன்
கனி காத்திருக்கிறாள்.




( ஓவியம் - நன்றி ஸ்வேதா )

Tuesday, March 30, 2010

பிரியும், என்றும் பிரியாத நட்புகள்...


பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடித்திரிந்த பறவைகளே,
பழகி களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம்,
நாம்,
பறந்து செல்கின்றோம்.....

..........................................................................................................

யாருமே தெரியாத இடத்தில் விட்டுட்டு போறிங்களே,
என்று
அன்று பனித்த என் கண்கள்,
இன்றும் பனிக்கிறது
எல்லாரையும் நல்லா தெரிஞ்சிகிட்டு
புரிஞ்சிக்கிட்டு விட்டுட்டு போக போறேனே என்று...

ரொம்ப அழ வெச்சிடாதிங்க மக்கா...

.........................................................................................................

ஒரே மரத்தில் இளைப்பாறிய நாங்கள்,
இன்று
உலகத்தின் வெவ்வேறு திசைகளில்,
தனித்தனியே பறக்க இருக்கிறோம்.


எங்களின் பயணம் இனிதே அமைய ,
நீங்களும் வாழ்த்தலாமே...
:-)

Tuesday, March 23, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்...

தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் அகல்விளக்கு ஜெய்க்கு நன்றி...
தொடர்பதிவின் நிபந்தனைகள்

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக
இருக்கும்
,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

.....................................................................................................................................................
ஜெய் சொன்ன எல்லாரையும் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவர்களைத்தவிர
......................................................................................................................................................

1. N.K டீச்சர்

நா.கலாவல்லி, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை.ஒல்லியான உருவம், எப்போதும் அபூர்வா புடவை, எல்லாரையும் நல்லா மிரட்டுவாங்க, இவ்வளவுதான் தெரியும் இவர்களை பற்றி ஒன்பதாம் வகுப்பு வரை.

நான் பத்தாம் வகுப்பு ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன், அப்பாடா... இவங்க எங்க கிளாஸ் டீச்சர் இல்லை, வெறும் கணிதத்திற்கு மட்டும் தான், தப்பிச்சோம் என்று.
அவங்க வகுப்புக்கு வந்து பாடம் எடுக்க ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுது, அவங்களை பற்றி.
வெறும் கணிதத்திற்கு மட்டும் ஆசிரியை அல்ல, என் வாழ்க்கைக்கே ஆசிரியை என்று.
நம்பிக்கையின் உற்று அவங்க.
என் கையெழுத்தை மாற்றி என் தலையெழுத்தையே மாற்றியவர்கள். எல்லாத்தையும் 90 டிகிரில எழுத்து கனி, எந்த மொழியாக இருந்தாலும் சரி என்றார்கள், அப்ப மாத்தினது தான்.

கிளாஸ்ல, வில்மா ருடோல்ப் கதைல இருந்து மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடுறது வரைக்கும் எல்லாத்தையும் பேசுவாங்க.
எண்கணிதம் முதல் எய்ட்ஸ் வரைக்கும், வகுப்பில் சர்வ சாதாரணமா பேசுவாங்க.
எல்லாமே பிளான் பண்ணிதான் பண்ணுவாங்க.
பசங்களை மிரட்டி அழவெச்சிட்டு, சாக்லேட் தந்து காமெடி பண்ணுவாங்க.

இவளின் முந்தானை பிடித்து சுற்றி திரிந்த காலங்கள் என்றும் மறக்கவே முடியாதவை.

வீட்டில் உள்ள பல்வேறு காரணத்தினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த என்னை, படிப்பை தவிர வேறு எந்த விஷயத்திற்கும் கவனம் செலுத்த முடியாமல் மாற்றினாங்க.
கணித மன்றம் பற்றியும், ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் நாங்க வாங்கின பரிசும் பின்னாடி இருந்து வழிநடத்தின N.K டீச்சர் பற்றியும், அவங்களுடைய தன்னம்பிக்கை பற்றியும் ஒரு தனி பதிவே போடலாம். என்னோட சேர்த்து பொது தேர்வில் கணிதத்தில் ஏழுபேர் முழு மதிப்பெண், ஒரு கிராமத்துல இருக்கின்ற அரசு பள்ளிகூடத்தில் இதுவும் ஒரு சாதனையே. இன்னும் சொல்லிகிட்டே இருக்கலாம் எங்க டீச்சர் பற்றி.

இப்பவும் " மண்ட மேலையே தட்டு " என்று அவங்க அடிக்கடி சொல்லும் வாக்கியம் காதில் கேட்டுகொண்டே இருக்கும். :-)

2. லத்திக்கா சரண்...



இவங்கள நேரில் பார்த்ததில் இருந்து ரொம்ப பிடிச்சி போச்சு, என்ன.... ஒரு கம்பீரம்!!!
இவங்களுடைய நடையும், இன்னொரு போலீஸ் அதிகாரி கிட்ட பேசும் விதமும், ரொம்ப பிடிக்கும்.
அப்புறம் அவங்களுடைய ஹேர் கட்டிங்.






3. அன்னை தெரசா

தன்னிகரற்ற தொண்டு. ( வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன் )

4. வில்மா ருடால்ப்





நம்பிக்கையின் சிகரம்.








5. அருந்ததி ராய்




எழுத்திற்கு...
எழுத்திற்கு என்று மட்டும் சொல்ல முடியாது...
ஏதோ ஒன்னு என்னை ஈர்க்கும்...











6. ஸ்ரீ சரவணா ஸ்டோர்ஸ் ( காஞ்சிபுரம் )- கடையோட முதலாளி அம்மா

இவங்க பெயர் தெரியாது, ஆனால் அப்படி ஒரு அடக்கம், பொறுமை, பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவங்க பில் போடும் அழகையும், வேலை ஆட்களை வேலைவாங்கும் திறமையையும், வாடிக்கையாளர்களிடம் பேசும் கணிவையும்.
மேலாண்மைத் திறமைகளுக்கு இவங்க.

7. கல்பனா சாவ்லா

வானத்தில் பறக்கணும்னு ஆசை இருக்கின்ற பொண்ணுக்கு, அப்படி பறப்பவர்களையும், விண்வெளிக்கு போகின்றவர்களையும் எவ்ளோ....... பிடிக்கும்.
எல்லாரையும் பிடிக்கும்னாலும் கல்பனா சாவ்லா தான் ரொம்ப பிடிக்கும்........
( நாசா என்ற பேட்சுக்கு பதில் இஸ்ரோ என்று இருந்து இருக்கலாம்...
எதை சொல்வது, யாரை சொல்வது? )





8. பார்கா தத் ( Barkha Dutt )

இவங்க NDTV குரூப் எடிட்டர், இவங்களையும் ரொம்ப பிடிக்கும்.

26/11 நிகழ்வின்போது இவர்களை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது ( அட, டிவில தாங்க ), அப்பொழுதில் இருந்து இவங்களை பிடிக்கும்.

இவங்க நேர்முகம் காணும் விதம் அழகு.

எனக்கு பத்திரிக்கை துறைக்கு போகணும்னு வேற ஒரு ஆசை. இவங்க எல்லாரையும் பேட்டி எடுக்கும் போதும், கவரேஜ் நியூஸ் தரும்போதும் பொறாமையா இருக்கும்.

சமீபத்தில் தான் தெரியும் இவங்களுக்கு 2004 ல் பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது என்று.



9. மேரி கியூரி


எனக்கு வேதியியல் ( Chemistry ) ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரேடியம், போலோனியும் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ஐசொடோப்கள் பற்றிய இவருடைய ஆராய்ச்சி மெய்சிலிர்க்கவைக்கும்.

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
பாரிஸ் பல்கலைகழகத்தின் முதல் பெண் விரிவுரையாளர், என பல பெருமைகள் இவரைச்சாரும்.

இவை அனைத்தையும் விட, ரேடியத்தின் அதிக கதிரியக்க தன்மையே அவரின் உயிரிழப்பிற்கும் காரணம் என்னும் செய்தியே, அவரை என் உள்ளத்தில் உட்கார வைத்துவிட்டது.
பதினோராம் வகுப்பில் இருந்து இவங்களை ரொம்ப பிடிச்சி போச்சு.


10 . ராஜி
முழு பெயர் இராஜேஸ்வரி.
எல்லாத்தையுமே வித்தியாசமா செய்யணும்னு யோசிகின்ற பொண்ணு இவ.
என்னோட தோழி.
இவ வித்தியாசமா யோசிக்கிறது மட்டும் இல்லாம, என்னையும் யோசிக்க வைப்பா.
பல்கலைவித்தகி.
நான் வாசித்த முதல் கவிதை அவள் தான்.
எங்கள் பள்ளியின் பூபந்து நடு ஆட்டக்காரி ( அதாங்க Ball Badminton center player ). வெறித்தனமா ஆடுவா.
பழசை எப்பவுமே மறக்க மாட்டா.
எவ்ளோ பெரிய கஷ்டமா இருந்தாலும், ஒரு புன்னகையோடு எதிர் கொள்ளும், அவளிடம் இருந்து நான் கற்றது, கற்க வேண்டியது ஏராளம்... ஏராளம்....

......................................................................................................................................................

ராஜி கிட்ட மட்டும் இருந்து இல்லை, மேலே சொன்ன மீதி ஒன்பது பேரிடம் இருந்தும் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
இன்னும் நிறைய பேர் இருக்காங்க அரசியல், வலைப்பூ பதிவர்கள், பொது வாழ்க்கை, மருத்துவம், சமையல் என பல பிரிவுகளில் பல பேரை பிடிக்கும். விதி முறையை மீற கூடாது இல்லையா...
நிறுத்திக்குவோம்... :-)