Monday, March 28, 2011

Arranged Love - 2



ஒரு விஷயத்தை ரசித்து பார்க்கும் போது, எண்ண அலைகள் நம்மை அறியாமல் நமக்கு பிரியமானவங்களை லிங்க் பண்ணும். இது எனக்கு அடிக்கடி நடக்கும் ஒன்று. ஒரு சின்ன பட்டாம்பூச்சி போதும், அவனை ஞாபகபடுத்துவதற்கு Black pulsar, கடையில் தொங்கவிட பட்டு இருக்கும் நல்ல T-Shirts, மாலை நேரத்து குருவி, மீன், மழை, அழகான போடோஸ், இப்படி நான் ரசிக்கும் சின்ன சின்ன விஷயம் எல்லாமே என்னுள் எழுப்பும் ஒரு கேள்வி என்னவன் என்பவன் யார்?

காதல் ஒரு அற்புதம். காதலிபவர்கள் தான் அந்த அற்புதத்தை உணரமுடியும் என்பது தவறு..
இதோ.. எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை பற்றி அடிக்கடி நினைவூற்றி, உயிரை வாங்கிக்கொண்டும், உயிரை கொடுத்துக்கொண்டும் இருக்கிறது காதல்..
காதல் முற்றி கவிதை வழியாய் நிரப்பிவைக்கபட்ட பொழுதுகளும் உண்டு..
இப்படி காதலோடு பயணித்து இருந்த ஒரு பொழுதினில்...

வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்த போது, அப்பாவை பார்க்க வந்த மாது அங்கிள், நம்ம நல்லதம்பி வாத்தியார் மகன் நல்ல கம்பெனில வேலை செய்யறான், நல்ல குடும்பம், நம்ம அமுதாவுக்கு அந்த பையன கட்டி வெக்கணும்னு எனக்கு ஒரு ஆசைன்னு ஒரு பிட்ட போட்டாரு.

அப்பாவும் அங்கிளும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ், ஒன்னாவே படிச்சு, வாத்தியாரா ஆனாங்க.. மாது அங்கிளுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும், அப்பாவுக்கும் தான். அண்ணன் தம்பியோ என்று கூட பல பேர் கேட்டு இருக்காக. மாது அங்கிளுக்கு பிள்ளைங்க கிடையாது. ஒரு குழந்தையை தத்து எடுத்து, படிக்க வெச்சு கல்யாணமும் பண்ணிட்டார். அடிக்கடி என்னையும் அவரோட பிள்ளைன்னு சொல்லுவாரு.

அம்மா இறந்து போனதுல இருந்து என் மீது அங்கிளுக்கும் மாது ஆன்டிக்கும் தனி பாசம். தினமும் அப்பா கூட அந்த திண்ணையில் உட்கார்ந்து நாட்டு நடப்பு, ஊர் விஷயம், வீட்டு விஷயம் பற்றி பேசலன்னா தூக்கம் வராது..

நல்லதம்பி வாத்தி பையான.. நீ எப்போடா அவனை பார்த்த, என் கிட்ட சொல்லவே இல்லன்னு அப்பா கேட்டாரு.
அவனா.. என்னடா மாப்பிள்ளைய போய் அவன் இவன்-ன்னு சொல்லிக்கிட்டு இருக்க? மாப்பிள்ளைன்னு சொல்லுடா..
ஹே!! நீ முடிவே பண்ணிட்டியா? ஷாக் ஆகிட்டார் அப்பா.. நானும் தான்...

Wednesday, March 23, 2011

Arranged Love - 1


வீட்டுக்கு முன்னாடி இருக்கும் படியில் உட்கார்ந்து மழையை ரசிக்கும் சுகம் (சுகமா, தவமா வரமான்னு தெரியாது.. அந்த feel வேற எங்கும் எதிலும் எனக்கு கிடைத்தது இல்லை.
என்னையும் மறந்து அந்த வெள்ளைச் செம்பருத்தி செடி மழையில் ஆனந்தமாய் நனைவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.
பச்சை ஏறிய தோட்டம். அம்மாவின் மிச்சமென அப்பா அடிக்கடி சொல்லுவார்.
சின்ன ஊட்டி வீட்ல இருக்கும் போது ரசிக்க வேற என்ன வேணும்.

அப்பா, மழை (ஈரம்), books , all time net, music எல்லாம் இருப்பதாலோ என்னவோ என் வீடு எனக்கு சொர்க்கம்.
நான் வேடிக்கை பார்க்க உட்காரும் போதெல்லாம், எனக்கு பக்கத்துலையே எங்க வீட்டு நாயும் உட்கார்ந்து கொள்ளும்.
அது என்ன ரசிக்குமோ தெரியல.. ரொம்ப நேரம் ஆனா என்னையும், ஜிம்மியும் சேர்த்தே அப்பா திட்டு வாங்க..
தமிழ்நாடு - கேரளா border -ல வீடு இருப்பதால் மழைக்கு பஞ்சம் இல்லை. ஆனால் படிச்சது, வேலை பார்ப்பதெல்லாம் சென்னை தான்.
எத்திராஜ் காலேஜ்ல Bsc computer science படிச்சேன். முடிச்ச உடனே எனக்கு கல்யாணம் பண்ணிடனும்-ன்னு அப்பாக்கு விருப்பம்..
ஆனா நானும் மாது அங்கிள்-லும் சேர்ந்து அப்பாவோட மனசை மாத்திட்டோம்..
"அம்மு(அமுதின் செல்வி) வேலைக்கு போகட்டுமே"ன்னு மாது அங்கிள் அப்பாகிட்ட சொன்னங்க இல்லை கெஞ்சினாங்கனே சொல்லலாம்..

இதெல்லாம் நடந்து ரெண்டு வருஷம் ஆகுது.
இனி..



(Picture : Thanks to Sam)

Wednesday, March 9, 2011

எச்சில் வெள்ளத்தில்...


எச்சில் வெள்ளத்தில்
ஹய்ஸ்டைலில் எடுத்த உடை அணிந்து
ரீபோக் ஷுவுடன்
நாற்றம் நாசியில் ஏறாதிருக்க
ஸ்ப்ரே அடித்து அலைய போகிறோம்...

இவனுக்கு ஏன் கவலை
அவன் காரில் போவன்...


(படம் - திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் எடுத்தது..)