Saturday, February 20, 2010

தனிமை - நான் - இரவு
மணி இரவு 9 ...
"எங்க போற?" - அம்மா.
"சும்மா வெளிய நடந்துட்டு வரேம்மா..." - நான்

இரவில் வெளியில் நடப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்

வளர்பிறை நிலவு
குளிர் காற்று
பக்கத்து ஊரின் நிலா
" கனி... உள்ள வா... "
இரவில் மாமரமும் அதன் பூவும்
தவளையின் சப்தம்
அங்கங்கே குதித்து ஓடும் குட்டி தவளைகள்
சுடுகாட்டின் மின்விளக்கு
இருள்
ஆள் நடமாட்டமே இல்லாத தெரு
பவழ மல்லியின் வாசம்
என் கொலுசு சப்தம்
" கனி... சொல்லிகிட்டே இருக்கேன்..."
நிலவின் வெளிச்சத்தில் தெரியும் தென்னைமரம்
காற்றின் போக்கிற்கு ஏற்றவாறு அசையும் கீற்று
என்னுடனே இங்கும் அங்கும் நடந்து வரும் வீட்டு நாய்குட்டி
வெளிச்சம் இல்லாத இடங்களில் 'U turn' அடிக்கும் என் பயம்
ஒழுகிக்கொண்டே இருக்கும் தெரு குழாய்
சிமெண்ட் சாலையின் விரிசல்
( வெளியில் வந்து, இரு புருவங்களையும் தூக்கியபடி )
" கனி... இப்ப நீ, உள்ள வரல... "
"வந்துட்டேன் அம்மா... "
உள்ளே போனதும்
"நடக்கணும்னா ஹால்-ல நடையேன்..."
"?!?!?!?!?!"

Wednesday, February 10, 2010

ஒரே குட்டையில்...

அவங்க பாட்டுக்கு வந்தாங்க...
ஏதோ Soft skills training class- ன்னு சொன்னங்க...
வகுப்பும் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு...
....
படித்து முடித்தவுடன் பிள்ளைகள் வேலைக்கு போக வேண்டும்.
இது தான் நாம் பெற்றவர்களுக்கு செய்யும் கைமாறு, என்பதை சொல்லவந்த ஆசிரியை...
இப்படி கூறினார்.

" Everything is business. Even, your parents are invested in you.
Why a person investing in something?
Because he needs profit...
So, as they invested in you, you people have to give them profit soon... "
.........................................

கடுப்பாய்டேன்...
உண்மைதானா?
Is that everything is business? ( உங்கள் பதிலும் வேண்டும்... )
இது இப்படி இருக்க...


அடித்து பிடித்து இன்ஜினியரிங் காலேஜ்-யில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களே..

எங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சி எனப்படும் Job fair-இன் போட்டோகளை பாருங்கள். கிட்டத்தட்ட 12,000 மேற்பட்ட B.E, B.Tech பட்டதாரிகள் பங்குபெற்றனர். ( 2009, 2010 மட்டும் ).
முட்டி மோதி செம ரகளை... இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காகவே நாகர்கோயிலில் இருந்து சென்னை வந்தாள் என் தோழியின் தோழி. எனக்கு தெரிந்தே பத்து பேர் அப்படி தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்தார்கள்.


( கூட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே, மொபைலில் சிக்கியது... )


ஏன்??
எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா? என்ற ஏக்கம் அல்லது என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்ற எதிர்பார்ப்பு.

ஆனால் ஒன்று மட்டும் வெளிச்சம், என்னுடன் போட்டி போட ஆட்களுக்கு பஞ்சமில்லை. கிட்டத்தட்ட என்னுடைய ( 2006 - 2010 ) batch B.E, B.Tech மட்டும் 1,50,000 மாணவர்கள். வேலைகிடைக்காதோர், வேலையிழந்தோர் எல்லாரையும் சேர்த்தால் எங்கு போகும் இந்த கணக்கு?

என்னோட வகுப்பிலும் இருக்காங்க 38 அரியருடன் ஒரு நண்பன். விருப்பம் இல்லாமல் எந்த குட்டையில் தள்ளினாலும் இதுதான் விளைவு.

நம்ம பிள்ளையும் நல்லா சம்பாதிக்கட்டும் என்பது தான் உங்க எண்ணம் புரியுது. ஆனால்,
எல்லாரும் ஒரே குட்டையில் விழுந்தால். குட்டை என்ன ஆவது ???

இனியாவது எங்க விருப்பத்துக்கு எங்களை படிக்க வையுங்களேன். தயவுசெய்து.

.
.
.
.
அப்போது அந்த டீச்சர் "Everything is business" என்று சொல்லும்போது எழுந்து நின்று,
"How dare you speak like this?? " என்று கேட்போம்.
.
.
.


( அம்மா.... M.S பண்ணட்டுமா?? :-) )

Tuesday, February 2, 2010

கோபம் என்னும் நெருப்பு...

அது தீக்காயம் தான்.
ஆனால் அந்த இடத்தில் எப்படி ?
வரைந்து வைத்தாற்போல் இருந்தது.
சினிமாவில், பாம்பு கடித்து வாயருகே நுரை வழிந்து நிற்பது போல், தான் பார்த்து இருக்கின்றேன்.
இது என்ன தீ வழிந்துள்ளது?
எப்படி நடந்து இருக்கும்?
சுவாமி சந்நிதானத்தில் எனக்கு எதிர் வரிசையில் நின்று தெய்வத்தை, வணங்கும் அந்த 5 வயது சிறுவனை பார்த்தவுடன் என்னுள் அதனை கேள்விகள்.
தெரியாமல் இன்று காலை நான் சூடான பாத்திரத்தில் கை வைத்திற்கே அலறிவிட்டேன்.
இந்த ஆழமான தீ விபத்து ஏற்பட்ட போது அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்.
மனம் கனத்தது.
நேரடியாக அவனிடமோ, அருகில் இருந்த அவன் தாயிடமோ கேட்க ஒரு மாதிரி இருந்தது.
கோவில் விட்டு வெளியில் வந்தவுடன், என் அம்மாவிடம் கேட்டேன். அந்த குட்டி பையனுக்கு வாய்க்கு பக்கத்துல என்னம்மா, எப்படி அடிபட்டுச்சினு உங்களுக்கு தெரியுமா என்று.
அந்த குட்டி பையனோட அம்மா தான் சூடு வெச்சிட்டாங்க, என்று என் அம்மாவிடம் வேலையாள் சொன்னதாக சொன்னங்க. பெரிய பிரச்சனையாகி, ஊரில் எல்லாருக்கும் தெரியும் போலும்...

இப்படியும் ஒரு தாயா??

பெற்ற பிள்ளைக்கு கன்னத்தில் சூடு வைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்க அந்த குட்டி பையன் என்ன செய்திருப்பான்?

எவ்ளளவு பெரிய தவறாகவே இருந்தாலும், குழந்தையை திருத்தும் வழியா இது?
யார்மீதோ உள்ள கோபத்தை குழந்தை மீது கொட்டியுள்ளர்கள்...
ச்சே, எப்படி எரிந்து இருக்கும் அவனுக்கு, நினைத்தாலே மனம் ஏதோ செய்கின்றது.
இப்படிப்பட்ட பெற்றோர்களை என்ன செய்வது??