Monday, January 25, 2010

கற்றுக்கொள்ள ஆட்கள் இருகின்றார்கள், சொல்லி தர??


மாலை 5:00 மணி வழக்கமாய் ஏறும் அதே பேருந்து. எப்போதும் போல கூட்டம், படி வரைக்கும். ஒரு வழியாய் ஏறி பேருந்தின் நடு பகுதியை அடைந்தேன்.
ஆறு மாததிற்கு முன்பு வரை நான் அந்த பேருந்திற்கு புதியவள்.
இப்போது வழக்கமாய் வரும் அனைத்து பயணிகளையும் ஓர் அளவிற்கு தெரியும். யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசினது இல்லை.
ஆனாலும் ஒரு சிலரை பிடிக்கும், ஏனோ ஒரு சிலரை பிடிக்காது.
இன்று என் முன் எனக்கு பிடித்த ஒரு சிறுமி. தோராயமாக ஆறாவது அல்லது ஏழாம் வகுப்பு படித்துகொண்டு இருப்பாள். அவளது பள்ளி சீருடை அவள் ஒரு மெட்ரிகுலேஷேன் மாணவி என்பதை அடையாளப்படுத்தும்.
எப்போதும் அவள் தோழி ஒருத்தியுடனே பேசிக்கொண்டே வருவாள். இந்த நாள் போல் மிக நெருக்கமாய் நான் அவளுடன் பயணித்தது இல்லை.
அவர்கள் பேசிகொண்டது எனக்கும் கேட்டது. ஒரு கட்டத்தில் "ஹே ஹேமா சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் என்ன வித்தியாசம்? " என்றாள் என்னவள் .
"எனக்கும் அதே டவுட் தான் டி" என்றாள் ஹேமா.
சரி அந்த அக்கா கிட்ட கேட்போம் என்று அவர்களுக்கு முன் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டார்கள். ( நான் இருவருக்கும் பின்னால் இருந்தேன் )
"தெரியாதே மா" இது அந்த அக்காவின் பதில்.
எனக்கு ஒரே ஆச்சரியம் இதே கேள்வி எனக்கும் சிறு வயதில் ஏற்பட்டது. நான் யாரிடம் கேட்டு விடைபெற்றேன் என்று நினைவு இல்லை. ஆனால் தற்போது எனக்கு விடை தெரியும்.
பொதுவாக நானாக போய் பதில் சொல்லும் பழக்கம் இல்லை.
அமைதியாகவே இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின் ஏதோ ஒன்று உள்ளுர சொல்லியது, நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா கனி, போய் சொல்லி தா என்றது.
ஹாய் என்றேன், இருவரும் பின்னால் திரும்பினார்கள், சுதந்திர தினம் என்றாள் என துவங்கினேன் அதற்குள் என்னவளின் முகம் பிரகாசித்தது, "உங்களுக்கு பதில் தெரியுமாக்கா" என்றாள். தெரிஞ்சதை சொல்றேன் என்றேன். மீண்டும் அவள் " சுதந்திர தினம், என்றாள் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்ற தினம், ஆனால் குடியரசு தினம்னா???" என்றாள்.
சுதந்திரம் பெற்றதும் நாம ஆங்கிலேயர்களின் சட்டத்தை தான் பினபற்றினோம். நமக்கே நமக்குன்னு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமைல ஒரு குழு, உருவாக்கினாங்க, அந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஜனவரி 26 - 1949 இருந்து பின்பற்றுகின்றோம். அந்த நாளுக்கு பேரு தான் குடியரசு தினம், என்றேன்.
குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியுமா என்ற தயக்கத்துடனே சொன்னேன். ஆனால் அவங்க நல்லா புரிஞ்சிகிட்டாங்க. பின் மக்களாட்சி பற்றியும் பேசினோம்.
இறுதியில் 'நன்றி' வேறு. "இந்த கேள்வி உங்ககிட்ட இருந்து வந்ததே எனக்கு எவ்ளோ பெரிய சந்தோசம் தெரியுமா" என்றேன்.

குடிமையியல் என்று சமூகவியலில் ஒரு பிரிவு உண்டு, அங்கே தெளிவாக இதெல்லாம் சொல்லி இருந்தா பசங்க ஏன் இத்தனை கேள்விகளுடன் இருக்காங்க??
பாட புத்தகத்தில் சரியாய் தரவில்லையா ? இல்லை டீச்சர் சரியாய் புரியரற மாதிரி சொல்லி தரவில்லையா ?
கற்றுக்கொள்ள ஆட்கள் இருகின்றார்கள், சொல்லி தர??
நாம் நம்மால் முடிந்தவரை சொல்லிதருவோம்...Friday, January 22, 2010

குருஷேத்ரா - 2010

kurukshetra - the battle of brains - வருடாவருடம் அண்ணா பல்கலைகழக CEG மாணவர்களால் பிற கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு போர்க்களம்.

இந்த வருடம் இந்நிகழ்வு ஜனவரி 20 தொடங்கி 23 வரை, திருவிழா போல் நடந்து கொண்டு இருக்கின்றது.

இன்றைக்கு
தான் என்னால் போக முடிந்தது...
சில
பல போட்டிகளில் பங்கு பெற்றாலும், Cloud Computing workshop - ல் கலந்துகொள்ள முடியவில்லை என்பது பெரிய ஏமாற்றம்.

முதன் முறையாக video conferencing seminar - ல் இருந்ததில் மகிழ்ச்சி, ஒலி தான் கொஞ்சம் இரைச்சலாய் இருந்தது. cisco - வில் பணிபுரியும் ஒருவர் US - ல் இருந்து நெட்வொர்கிங் பற்றி வகுப்பு எடுத்தார்.

மெட்ராஸ் பற்றி ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பழைய மெட்ராஸ் பற்றிய புகைப்படங்களும் , ஓவியங்களும் மிக அருமை.
நேரம் இன்மை காரணமாக வெறும் போட்டோ பகிர்வுடன் விடை பெறுகிறேன்.

இது Apprley's plan of St. Gorge - ஆகஸ்ட் 1749

வியந்துவிட்டேன்...

Sunday, January 17, 2010

பொங்கல்...

காலை பனி + கோலம் + சாமி பாட்டு + உற்சாகம் + மகிழ்ச்சி + வாழ்த்துக்கள் + அன்பு + சக்கரை பொங்கல் + கரும்பு + கிழங்குகள் +........ +...= பொங்கல்.
( நான் இங்க பீல் பண்ணிட்டு அடுத்த நாள் காலேஜ் போயிட்டு வந்து பார்த்தா ஆச்சர்யம், என் அம்மாவும் மல்லிகா அம்மாவும், மண் தரையை அழகா ரெடி பண்ணிட்டாங்க, சும்மா விடுவோமா...
அழகா இருக்கு இல்லையா ?? )


( இந்த கோலம் அம்மா போட்டது )( இந்த மூன்றும் பெரும் பொங்கல் அன்று )


( மாட்டு பொங்கல் அன்று, நிஜமா நான் போட்டதுப்பா நம்புங்க :-) )


வீட்டை சுற்றி ...

எல்லா வருடத்தை விட இந்த முறை எங்க வீட்ல நிறைய பூக்கள்...

ச்சே... இதை ஒரு போட்டோ எடுக்க ஒரு கேமரா இல்லையே என்று பல நாட்கள் நான் ஏங்கி இருக்கேன்.

இந்த பொங்கல் ஸ்பெஷல்-லே என் புது கேமரா மொபைல் தான்.

எல்லா வருடத்தை விட இந்த வருடம் பொங்கல் ரொம்ப நல்லாவே கொண்டாடியாச்சி...

ஆயிரத்தில் ஒருவன் கூட பார்த்துவிட்டேன். படம் நல்லா இருக்குங்க. விமர்சனத்திற்குஇங்கே சுட்டவும்.

ஒரு நல்ல போஸ்ட் எழுதி பல நாட்கள் ஆகுது, எனக்கும் வருத்தம் தான். பொறுமையாக வெளிவரட்டும்.

மீண்டும் சந்திக்கிறேன்.

Tuesday, January 12, 2010

கடந்த காலம்...


கோலம் என்னவோ அழகா தான் இருக்கு.

மண் தரைல செம்மண் கரைசல் தெளிச்சி, அதுக்கு மேல ஒரு அடுக்கு செம்மண் கொட்டி கொஞ்ச நேரம் காயவிட்டு, அதையும் சீராய் மெழுகி, அதுக்கும் மேல பசுஞ்சாணம் தெளிச்சி, இதே பச்சரிசி மாக்கோலம் போட்டா எவ்ளோ அழகா இருக்கும், இல்லையா?

இது எல்லாத்தையும் கடந்தகாலம் ஆக்கிவிட்டது இந்த சிமெண்ட் ரோடு... இத்தனைக்கும் எங்கள் வீடு இருப்பது, ஒரு கிராமத்தில்...
:-(

Sunday, January 3, 2010

செவிடாய் ஒரு பயணம்...
ஏதோ ஒரு அடர்ந்த சோகம்,
கால்களை மடக்கி,
முகத்தை முட்டிக்குள் புதைத்து,
மீன் பிடித்து கொண்டிருந்தது...

ஒரு திசைமாறிய கப்பல்,
நினைவுகளின் ஊடே பயணித்தது...

நேற்று பார்த்த பிச்சைகாரின்யின் முகமும்,
அவளின் மூக்குத்தியும் ஏதோ சொல்ல விரும்பின...

குடிபோதையில் என் முதுகில் கை வைத்தவன்
ஏதோ சொல்ல நினைத்தான்...

அந்த ஊர் கோடியில் உள்ள வீட்டில் வாழும்
மனநலம் குன்றியவனும் ஏய் என்றான்...

திருநங்கை ஒருத்தி கைகளை தட்டி அழைத்து
கவனத்தை திருப்பினாள்...

எங்கும் நிற்காமல் பயணித்து கொண்டே இருந்தது
என் கப்பல்...

திடிரென,
காலத்தின் கடலில் பின்னோக்கி பயணித்தது...

வாழ்வின் ஒவ்வொரு சோக நினைவுகளிலும் நங்கூரம் இட்டது...

இன்று ஏன் இப்படிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள்,
என்றும் எண்ணினேன்...

இமைகளை திறக்க துளியும் விருப்பம் இன்றி
முட்டியே கதி என முகத்தை மறைத்து
கண்களை மேலும் இறுக்கி கொண்டேன்...

திடீர் என்று காலில் ஏதோ ஒன்று நக்குவது போல் ஒரு உணர்வு
மெதுவாய் தலை தூக்கி காலை பார்த்தேன்
கருப்பு காலினை அந்த எச்சில் மேலும் கருப்பாய் காட்டியது

மேலும் நிமிர்ந்தேன்

மெல்ல விளங்கியது
அது மாடிக்கு போகும் பாதையை
நான் மறித்து அமர்ந்துள்ளேன்,
விலகினேன்
அது படி ஏறவில்லை
என்னையே பார்த்துகொண்டிருந்தது

இதுவும் ஏதோ சொல்ல நினைத்தது...

யார் சொல்லுவதையும்
கேட்க காது கொடுக்காமல்
பயணித்துக்கொண்டே இருக்கிறது, என் கப்பல்


கரையை நோக்கி, சுயநலத்துடன்...