
என்ன இருக்கு?
என்ன இருக்கா? இருங்க வரேன்..
ம்ம்ம்..
இந்தாங்க மெனு கார்டு...
........
wheat தோசை 1, மல்லி ஊத்தப்பம் 1, அதுக்கு முன்ன veg சூப் 1/2
அஆங்... இதெல்லாம் இருக்கு, ஆனா தர முடியாது....
ஏன்???!!
கூட்டமா இருக்குல...
( இந்த அசிங்கம் தேவையா மச்சி )
சனிக்கிழமை நைட்டு முட்டி மோதி ஹோட்டல்ல சீட் புடிச்சா, இப்படி சொல்லிடாரு தலைவரு..
வாய் வரைக்கும் வந்துரும் 'எதுக்குயா ஹோட்டல் நடத்துரிங்கன்னு' ....
ச்சீ... இவன திட்டி என்ன பண்ணபோறோம் என்று, விழுங்கி விட்ட வார்த்தைகள் ஏராளம்...