Tuesday, November 16, 2010

'ழ'


காலைல 9 மணிக்கு உள்ள போனா, சாயந்தரம்... ம்ஹும்... நைட் 10 ஆகுது திரும்பவும் ரூம்-க்கு வர..
அலைபேசியில் அம்மா கிட்ட பேசும் போது தெரிந்தோ தெரியாமலோ இல்ல இயந்திரத்தனமாவோ 'வேற என்னம்மா'ன்னு கேட்கும் போது ஏதோ ஒரு வலி மனசுல...
training center படி விட்டு கீழ இறங்கும்போது தான் தெரிஞ்சு இருக்கும் இவ்ளோ மழையா!!ன்னு... மரத்துல இருக்கற குருவி அலகால இறகுகளை சரி பண்ணிகிட்டே சிலிர்க்கும் போது தோணும், ச்சே என்ன வேலைடா இது.. மழை பெஞ்சதுகூட தெரியாம நாளு செவதுகுள்ள உட்கார்ந்துகிட்டு 0, 1, linux, networks, switch, hub, dns, dhcp, router, class test, module test, lab test, viva, certifications, அது, இதுன்னு...
இதுல வேற ஒன்னும் தெரியலன்னு வாத்திங்க திட்டும் போது, வருமே ஒரு கடுப்பு... இன்னைக்கு போய் எல்லாத்தையும் படிச்சிரனும்ன்னு நானும் என் உயிர் தோழியும் தடாலடி முடிவெல்லாம் எடுப்போம் எல்லாம் பையோட போய்டும்..
ரூம் க்கு வந்ததும் அரட்டை அரட்டை அரட்டை... தாங்கதுங்க floor - ரே அதிருது...
:)

-------------------------------------------------------------------------------------------------
ஏகப்பட்ட சுவாரசியமா அனுபவங்கள், சுவாரசியமா நண்பர்கள்...

மினி இந்தியா என்னோட கிளாஸ் ரூம். :) என்னோட பெயர உச்சரிக்க வெக்க அவ்ளோ கஷ்டபட்டுட்டேன்.. 'ழ' - தமிழின் தனித் தன்மை அன்றோ!! :)
இன்னைக்கு கூட ஒருத்தன் கனிமொழி யையும் தண்டபாணி யையும் குழப்பி கண்டபாணி ன்னு கூப்பிடறான்........ ஒருவழியா ஒழுங்கா உச்சரிக்க சொல்லி கொடுத்தாச்சு!!!!!!!!!!!!! :)

இன்னும் பத்தே நாள் ஒரு வழியா training முடிக்க போறேன் டோய்!!!

-------------------------------------------------------------------------------------------------

"எடுத்ததும் ஐந்து இலக்க சம்பளம் என்பதால் உங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியல" என்று வகுப்புல ஒரு ஐயா சொன்னாரு... "என்ன மாதிரி சமுதயத்த நீங்க உருவாக்க போறீங்க என்பதை நினைத்தால் பயமா இருக்கு" என்றும் சொன்னாரு... யோசிக்க வேண்டிய விஷயம், இதை பத்தி நிறைய பகிர்ந்துக்கணும்... நேரம் இல்லாத காரணத்தால் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. இதை பற்றி நீங்க என்ன நினைக்கரிங்க???




8 comments:

  1. சுவாரசியமான பதிவு.. அதுவும் முதல் பத்தி ரொம்பவே அருமை.. ஐந்து இலக்க சம்பளத்தால் பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும் அல்லது சமுதாயம் சீரழிந்து விடும் என்பதெல்லாம் பிதற்றல்.. சமுதாயம் சீரழிய காரணம் ஒவ்வொரு மனிதனின் மனோபாவம்.. உதவனும்னு நினைப்பவனுக்கு ஐந்து இலக்க சம்பளம், "ஐய்.. இன்னும் கொஞ்ச நெறையா பேருக்கு உதவலாம்" என்னும் மனோபாவத்துடன் தான் பார்ப்பான். அம்மா நிறைய கஷ்டப்படுறத பாத்து வளந்த பையனோ பொண்ணோ, "இனி வேலைக்கு போகாதம்மா" என்பான்(ள்). வீட்டிலே இருக்குற கடனை எப்படியாச்சும் கட்டணும்னு நேனைக்குரவங்க எத்தனையோ பேரு இருக்காங்க.. நிறைய குடும்ப பொறுப்பு மிக்கவர்கள் தன் சகோதர சகோதரிகளின் திருமண படிப்புகளுக்காக ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் போது கூட ரெண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டு சேமிக்கணும்னு தான் நெனைப்பாங்க.. இப்படி இன்னும் நெறைய சொல்லிகிட்டே போகலாம்..

    ReplyDelete
  2. சுவாரசியமான பதிவு.. அதுவும் முதல் பத்தி ரொம்பவே அருமை.. ஐந்து இலக்க சம்பளத்தால் பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும் அல்லது சமுதாயம் சீரழிந்து விடும் என்பதெல்லாம் பிதற்றல்.. சமுதாயம் சீரழிய காரணம் ஒவ்வொரு மனிதனின் மனோபாவம்.. உதவனும்னு நினைப்பவனுக்கு ஐந்து இலக்க சம்பளம், "ஐய்.. இன்னும் நெறையா பேருக்கு உதவலாம்" என்னும் மனோபாவத்துடன் தான் பார்ப்பான். அம்மா நிறைய கஷ்டப்படுறத பாத்து வளந்த பையனோ பொண்ணோ, "இனி வேலைக்கு போகாதம்மா" என்பான்(ள்). வீட்டிலே இருக்குற கடனை எப்படியாச்சும் கட்டணும்னு நினைப்பவர்கள் எத்தனையோ பேரு இருக்காங்க.. நிறைய குடும்ப பொறுப்பு மிக்கவர்கள் தன் சகோதர சகோதரிகளின் திருமண மற்றும் படிப்புகளுக்காக ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் போது கூட ரெண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டு சேமிக்கணும்னு தான் நெனைப்பாங்க.. இப்படி இன்னும் நெறைய சொல்லிகிட்டே போகலாம்..

    ReplyDelete
  3. கண்டபாணி-யா?????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  4. எதாவது ஒன்றை இழந்துதானே இன்னொன்றை பெற வேண்டி உள்ளது..

    இங்கே இழக்க எதுவுமில்லைங்கற தைரியத்தோட தில்லா வாழ்க்கைய பாருங்க..!!

    வாழ்க்கை நம் கையில்!!

    ReplyDelete
  5. ஹ்ம்ம்....
    பயிற்சி வகுப்பை ஒழுங்கா முடிக்க போறதுக்காக ஒரு வாழ்த்துக்கள்....
    அப்புறம் எடுத்த உடனே ஐந்து இலக்க சம்பளம் வாங்க போறதுக்கு இன்னொரு வாழ்த்து...
    :) :)
    கண்டிப்பா பணத்தோட மதிப்பு தெரியாது....முதல் சம்பளமே ஐந்து இலக்கத்தை தொடும் பொழுது...
    ஒரு கர்வம் இருக்கும்....மேன்மக்கள் என்ற நினைப்பு தொட்டதிலெல்லாம் வெளிப்படும்....
    நான் சந்தித்த மனிதர்களிடம் பார்த்து உணர்ந்தது...
    :)

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு... ஐந்து இலக்க சம்பளம் வாங்குகிறோம்.. என்று அங்கலாய்க்கிறார்கள்.. உண்மையில் அதில் நமக்காக செலவு செய்வது எவ்வளவு என்று யோசித்து பார்த்தீர்களானால்.. வேனாம் விடுங்க.. இதெல்லாம் போய் யோசிச்சி.. மனச கஸ்டப்படுத்திக்கிட்டு.. ஐந்து இலக்க சம்பளத்தால் நன்மை நமக்கல்ல.. நம்மைச் சுற்றி (வீட்டு வாடகை, மளிகை, காய்கறி, போக்குவரத்து, உதவி கேட்டு வருவோர் இன்னபிற..) இருப்போருக்குத்தான்..

    ReplyDelete
  7. ம்ம்ம்ம்...... இப்போ இருக்க விலைவாசிக்கு 5 இலக்க சம்பளம் இல்ல 6 இலக்க சம்பளம் வாங்குனாலும் பத்தாது நு நெனைக்கிறேன்.......

    ReplyDelete