Wednesday, March 23, 2011

Arranged Love - 1


வீட்டுக்கு முன்னாடி இருக்கும் படியில் உட்கார்ந்து மழையை ரசிக்கும் சுகம் (சுகமா, தவமா வரமான்னு தெரியாது.. அந்த feel வேற எங்கும் எதிலும் எனக்கு கிடைத்தது இல்லை.
என்னையும் மறந்து அந்த வெள்ளைச் செம்பருத்தி செடி மழையில் ஆனந்தமாய் நனைவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.
பச்சை ஏறிய தோட்டம். அம்மாவின் மிச்சமென அப்பா அடிக்கடி சொல்லுவார்.
சின்ன ஊட்டி வீட்ல இருக்கும் போது ரசிக்க வேற என்ன வேணும்.

அப்பா, மழை (ஈரம்), books , all time net, music எல்லாம் இருப்பதாலோ என்னவோ என் வீடு எனக்கு சொர்க்கம்.
நான் வேடிக்கை பார்க்க உட்காரும் போதெல்லாம், எனக்கு பக்கத்துலையே எங்க வீட்டு நாயும் உட்கார்ந்து கொள்ளும்.
அது என்ன ரசிக்குமோ தெரியல.. ரொம்ப நேரம் ஆனா என்னையும், ஜிம்மியும் சேர்த்தே அப்பா திட்டு வாங்க..
தமிழ்நாடு - கேரளா border -ல வீடு இருப்பதால் மழைக்கு பஞ்சம் இல்லை. ஆனால் படிச்சது, வேலை பார்ப்பதெல்லாம் சென்னை தான்.
எத்திராஜ் காலேஜ்ல Bsc computer science படிச்சேன். முடிச்ச உடனே எனக்கு கல்யாணம் பண்ணிடனும்-ன்னு அப்பாக்கு விருப்பம்..
ஆனா நானும் மாது அங்கிள்-லும் சேர்ந்து அப்பாவோட மனசை மாத்திட்டோம்..
"அம்மு(அமுதின் செல்வி) வேலைக்கு போகட்டுமே"ன்னு மாது அங்கிள் அப்பாகிட்ட சொன்னங்க இல்லை கெஞ்சினாங்கனே சொல்லலாம்..

இதெல்லாம் நடந்து ரெண்டு வருஷம் ஆகுது.
இனி..



(Picture : Thanks to Sam)

6 comments:

  1. ஆஹா...

    ப்ளீஸ் கன்டினியூ...

    ReplyDelete
  2. ஆரம்பமே குளுகுளுன்னு இருக்கே.. ம்ம் அமுதின் செல்வி .. அழகான பேரா இருக்கே..!!

    வெயிட்டிங் ஃபார் த நெக்ஸ்ட் போஸ்ட்..!!

    ReplyDelete
  3. ஹேய்...! லேபிளை பாக்காம நா பாட்டுக்கு படிச்சிட்டே வர்றேன்..!
    :) :)
    அப்றம்தான் புரிஞ்சிது கதைன்னு...
    தொடர்கதைனா இவ்ளோ சின்ன சிறு சிறு பத்தியா தொடருமா???
    :( :(
    இன்னும் ஒரு பத்தி கூடுதலா எழுதினா வாசிக்கிற நாங்க சந்தோஷபடுவோம்பா
    :) :)

    ReplyDelete
  4. நிழற்ப்படம் மிகவும் ரசிக்கவைத்தது..!
    :)

    ReplyDelete