Wednesday, February 10, 2010

ஒரே குட்டையில்...

அவங்க பாட்டுக்கு வந்தாங்க...
ஏதோ Soft skills training class- ன்னு சொன்னங்க...
வகுப்பும் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு...
....
படித்து முடித்தவுடன் பிள்ளைகள் வேலைக்கு போக வேண்டும்.
இது தான் நாம் பெற்றவர்களுக்கு செய்யும் கைமாறு, என்பதை சொல்லவந்த ஆசிரியை...
இப்படி கூறினார்.

" Everything is business. Even, your parents are invested in you.
Why a person investing in something?
Because he needs profit...
So, as they invested in you, you people have to give them profit soon... "
.........................................

கடுப்பாய்டேன்...
உண்மைதானா?
Is that everything is business? ( உங்கள் பதிலும் வேண்டும்... )
இது இப்படி இருக்க...


அடித்து பிடித்து இன்ஜினியரிங் காலேஜ்-யில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களே..

எங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சி எனப்படும் Job fair-இன் போட்டோகளை பாருங்கள். கிட்டத்தட்ட 12,000 மேற்பட்ட B.E, B.Tech பட்டதாரிகள் பங்குபெற்றனர். ( 2009, 2010 மட்டும் ).
முட்டி மோதி செம ரகளை... இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காகவே நாகர்கோயிலில் இருந்து சென்னை வந்தாள் என் தோழியின் தோழி. எனக்கு தெரிந்தே பத்து பேர் அப்படி தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்தார்கள்.


( கூட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே, மொபைலில் சிக்கியது... )


ஏன்??
எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா? என்ற ஏக்கம் அல்லது என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்ற எதிர்பார்ப்பு.

ஆனால் ஒன்று மட்டும் வெளிச்சம், என்னுடன் போட்டி போட ஆட்களுக்கு பஞ்சமில்லை. கிட்டத்தட்ட என்னுடைய ( 2006 - 2010 ) batch B.E, B.Tech மட்டும் 1,50,000 மாணவர்கள். வேலைகிடைக்காதோர், வேலையிழந்தோர் எல்லாரையும் சேர்த்தால் எங்கு போகும் இந்த கணக்கு?

என்னோட வகுப்பிலும் இருக்காங்க 38 அரியருடன் ஒரு நண்பன். விருப்பம் இல்லாமல் எந்த குட்டையில் தள்ளினாலும் இதுதான் விளைவு.

நம்ம பிள்ளையும் நல்லா சம்பாதிக்கட்டும் என்பது தான் உங்க எண்ணம் புரியுது. ஆனால்,
எல்லாரும் ஒரே குட்டையில் விழுந்தால். குட்டை என்ன ஆவது ???

இனியாவது எங்க விருப்பத்துக்கு எங்களை படிக்க வையுங்களேன். தயவுசெய்து.

.
.
.
.
அப்போது அந்த டீச்சர் "Everything is business" என்று சொல்லும்போது எழுந்து நின்று,
"How dare you speak like this?? " என்று கேட்போம்.
.
.
.


( அம்மா.... M.S பண்ணட்டுமா?? :-) )

11 comments:

 1. இந்தக் குட்டை கல்வியின் பெயரால் கொள்ளையடிக்கும் சுயநிதி கல்லூரி முதலாளிகளால் உருவாக்கப்பட்டது. கல்வி என்பது நாட்டின் தேவைப்படும் வளர்ச்சிக்கும், மாணவனின் இயல்பு ஆர்வத்திற்கும் இணைந்து கொடுக்கும் வகையில் இல்லை என்றால் இப்படித்தான் அன்றலர்ந்த ஈசலைப் போல....என்ன செய்வது?

  ReplyDelete
 2. Unfortunately it's true with the present generation.. Every parents are investing on us to make us engineers, doctors and business admins, because it's not only a dream, they want to show off their pride by making their children a doc/engr. Also to buy/sell with a good deal in the marriage market!! it's a bitter truth!!

  ReplyDelete
 3. நீங்க பைனல் இயர்ரா

  ReplyDelete
 4. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு வினவு அவர்களே...

  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 5. //நட்பு said...
  it's a bitter truth!!//

  yes :-(

  ReplyDelete
 6. //பேநா மூடி said...
  நீங்க பைனல் இயர்ரா
  //

  ஆமாங்க பைனல் இயர் தான், ஏங்க ??

  ReplyDelete
 7. // சக்தி said...
  hm ennanu solla //


  இதே பீலிங் தாங்க எனக்கும்.....
  :-)

  வருகைக்கு மிக்க நன்றி சக்தி...

  ReplyDelete
 8. சரியா சொன்னீங்க....

  எம்.எஸ்.க்கு முயற்சி பண்ணுங்க...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ஒரு ஜெனரல் நாலட்ஜ் தான்

  ReplyDelete
 10. unga college la mattum illa ella edathulayum ethey kastam than pa....

  eppo eruka ella companylum referecce than pa first.

  eppo thane padichi mudikringa ennum nerya parka vendi eruku pa....

  ReplyDelete