Friday, May 21, 2010

அவள் ஒரு தேவதை - 1

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகள் மிக அதிகம், ஒரு சிலரைத் தவிர.

சமீபத்தில் ஒரு தேவதையை சந்திக்க நேர்ந்தது.

நேர்காணல் முடித்துவிட்டு, நானும், என்னுடன் முன்சுற்றில் தேர்வான, என் கல்லூரி தோழி சரண்யாவும் (அவளையே முன்னாள் தான் தெரியும் :-) ) புல்லு புடிங்கிக்கொண்டு இருந்தோம்.

முடிவுகள் ஆறுமணிக்கு தான் என்று தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார்கள். அப்போது மணி 11:00 . கொண்டுவந்த சாப்பாட்டை உள்ளே ஏற்கனவே தள்ளிவிட்டதால்,
"வா.. கனி.. ஏதாவது விளையாடலாம்" என்றாள் சரண்யா.

என்னுடைய எண்ணமெல்லாம் நான் சரியாக நேர்காணலை செய்தேனா? நிறை குறைகள் என்ன? என்பதிலேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், மெல்ல அவளை பார்த்து என்ன விளையாடலாம் என்றேன், என் குரலில் சிரத்தை இல்லாதது எனக்கே தெரிந்தது.
அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. " கடவுளே இன்னும் கிட்டத்தட்ட எழு மணி நேரம் எப்படி தான் ஓட்ட போறோமோ? , நல்லவேளை இப்படி அழகாய் உட்கார புல் தரையாவது இருக்கு " புற்களின் நுனிகளை ஓயாமல் கிள்ளிக்கொண்டு இருந்தேன்.
" ம்ம்ம்... ஓடிபுடிச்சி விளையாடலாமா? " என்றாள் அவள்.
கடுப்பாகி, ஒரு முறை அவள் கண்களை பார்த்துவிட்டு, "எங்க, இங்க உனக்கு ஓடி புடிச்சி விளையடுனுமா?" என்றேன்.
என் கடுப்பில் அவள் சிரித்துவிட்டாள்.
முன்னாள் ஆவது திருவிழா மாதிரி இருந்தது அந்த கல்லூரி, என் உயிர் தோழி சாய் கூடவே இருந்ததால், வேடிக்கை பார்த்துக்கொண்டே, அந்த கல்லூரியை சுற்றிகொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் இன்று, வெறும் 150 பேர் மட்டுமே. அந்த கல்லூரியின் கட்டிடத்தில் நாங்கள் வெறும் எறும்புகள் போலவே காட்சி அளித்தோம்.

சரண்யாவுக்கு நேர்காணல் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்பட கதையில் போய் முடியவே, ஏகமாய் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அப்போதைக்கு, சரண்யாவும், அடிக்கடி வரும் குறுஞ்செய்திகளும் மட்டுமே எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

கண் அயரும் நேரத்தில் "ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று ஒரு பெண்ணின் குரல்.
யாருடா அது என நிமிர்ந்து பார்க்கையில் அவளே தான், பெயரை மறந்து இருந்தேன், நேற்று முன் சுற்றிற்கான முடிவுகளை வெளியிட்ட பின் ஒரு அறைக்கு செல்லுமாறு அறிவுருதப்படோம்.

அப்போது தான், அவளை முதன்முதலாய் பார்த்தேன். பரஸ்பரமாய், பெயரையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவுதான்.

அடுத்த சந்திப்பிலேயே இவ்ளோ பெரிய ஹாய் நான் எதிர் பார்த்திராதது.
"ஹைய்யோ........ ஆறு பேர் கிட்ட இருந்து மிஸ்டு கால்".... என்று சொல்லிக்கொண்டே செல் போனில் முழ்கிகினாள். பேசிக்கொண்டே கையில் வைத்து இருத்த file - ளையும், ஒரு பெரிய purse -யும் நீட்டினாள். வாங்கி கீழே வைத்தேன். பையை கீழே போட்டுவிட்டு. பேச்சு சுவாரசியத்தில் புள் தரையில் நடந்து, நடந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"உன்னோட ப்ரிண்டா கனி??" என்றாள் சரண்யா.

ஆமாம் என தலையை ஆட்டினேன்.

ஒரு வழியாய் எல்லோரிடமும் பேசிவிட்டு நாங்கள் இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள்.

"எப்படி போச்சு இண்டர்விவ்?" என்றேன்.

"நாளு பேரும்மா, அதுல ஒருத்தன் கேட்டான், நைட் ஷிபிட்க்கு வருவியானு, நான் சொன்னேன் எஸ் சார், அப்புறம் பக்கத்துல இருந்தவன் கேட்டான், தொடர்ந்து நைட் ஷிப்ட்டே... போட்டா வருவியான்னு, நான் சொன்னேன் எஸ் சார், அவனுக்கு பக்கத்துல இருந்தவன் கேட்டான் மூணு ஷிப்ட்டுமே தொடர்ந்து வொர்க் பண்ண சொன்னா செய்வியான்னு, நான் சொன்னேன் எஸ் சார். நானும் எவ்ளோ நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது கனி , முடியல... " என்று முடித்தாள்.

"உனக்கு எப்படி" என்றாள்.

"எனக்கு formal ஆக தான் இருந்தது" என்றேன்.

சரண்யாவை விசாரிக்க, மறுபடியும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' கதை ஓடியது...
"எனக்கு பசிக்கிது யாரு கேண்டீன் வரிங்க" என்றாள்.

ஏற்கனவே மொக்கி இருந்தாலும் அவளுக்காக போகலாம் என்றே இருந்தது. அவள் இரண்டு பரோட்டாவை ஒன்றரை மணி நேரமாய் சாப்பிட்டு கொண்டே அவள் போட்ட மொக்கைகளை, அழகாய் கேட்டுக்கொண்ட என்னையும் சரண்யாவையும் கேண்டீனில் இருந்த அத்தனை பேரும் அனுதாபமாய் பார்த்தனர். :-)

"நீ என் RJ வா ஆக கூடாது வைஷு" என்றேன் (அவள் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டேன் ). இடைவிடாமல் மொக்கை போடவும் தனித்திறமை வேண்டும் அல்லவா...

"நீ ஏன் வளரவே இல்ல, வைஷு ", என்றாள் சரண்யா.

"நீ என்ன எனக்கு காம்ப்ளான் கொடுத்தாயா, அல்லது ஆர்லிக்ஸ் தான் கொடுத்தாயா? நான் வரளவில்லை என கவலைப்பட" என்றாள் செம குரலில்.

"எவ்ளவோ ட்ரை பண்ணாலும் பபுள் மட்டும் வரமாட்டேன்குதுப்பா" என்றாள்.

sprite வாங்கி கொடுத்து உள்ளே தள்ள வைத்தோம்.

"என்னோட juniors க்கு எதை சொல்றேனோ இல்லையோ இந்த காலேஜ் கான்டீன்ல பரோட்டா மட்டும் வாங்காதிங்கன்னு சொல்லிவைக்கணும்" என்றாள்.

மெல்ல அவள் சாப்பிட்டு முடித்ததும், நகர்ந்தோம்.

இசை, புத்தகம், கல்லூரி வாழ்க்கை என ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள். இடையில் விண்ணைத்த்தாண்டி வருவாயா பாட்டு போட்டு சரண்யாவை ஓட்டிக்கொண்டே, இருந்ததில் நேரமும் ஓடியது.

அவளுக்கும் காஞ்சிபுரம் தான் என்பதால், இன்னும் ஆறுதலாய் இருந்தது.
மாலைக்குள் நட்பு ஏகமாய் வலுப்பெற்றது. அவள் ஏதோ ஒரு பெண்னை பார்த்து நக்கல் அடித்தாள், சிரித்துகொண்டே அவள் நெற்றியில் இடிக்கும் அளவுக்கு நெருங்கினோம்.
.
.
முடிவுகளை அறிவித்த போது, அவள் பெயரை படிக்கையில் அவளைவிட பன்மடங்கு சந்தோஷத்தில் இருந்தேன். கட்டியணைத்துகொண்டோம்.

அவள் அப்பாவிற்கு, அவள் வேலைக்கு செல்லவிருப்பதில் விருப்பம் இல்லை, திருமணம் செய்து வைக்க நினைக்கிறார், என்பது போல் பேசினாள். "நான் எப்படியாவது பேசி சமாளிச்சு வந்துவிடுவேன் கனி".... என்றாள் சிரித்து கொண்டே.
மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் விடைப்பெற்றோம்.


சரியான படிப்ப்ஸ், சராசரி மதிப்பெண் 89% அவளுக்கு... :-) நான் ஒரு யூனிட் டெஸ்ட்ல கூட எந்த பாடத்துளையும் இவ்ளோ மதிப்பெண் வாங்கினது கிடையாது.
பல மொக்கைகளைத் தவிர, உடன் வந்து தோல்வி அடைந்த தோழிகளை அவள் தேற்றிய விதத்தையும், பிறருக்கு உதவும் குணத்தையும் என்னவென்று சொல்ல...

அவளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.
நல்ல நட்பை பெற்ற சந்தோஷத்தில் நான்.

....................

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைவதே தூய நட்பாம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் பலரில் சிலர் மட்டுமே என்றும் நம் நெஞ்சத்தில் ஊன்றி இருப்பர்.
அவர்களிடம் நாம் பழகியது சில மணி நேரமாய் இருந்தாலும் அவர்களின் தாக்கம், அளவிட முடியாததாய் இருக்கும்.
என்னை தாக்கிய சில தேவதைகளை பதிவிட விரும்பி செய்த, என் முதல் முயற்சி .

3 comments:

 1. :-)

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. "
  நாம் பழகியது சில மணி நேரமாய் இருந்தாலும் அவர்களின் தாக்கம், அளவிட முடியாததாய் இருக்கும்."
  s.u r right.

  greetings to get new friend.

  ReplyDelete