Wednesday, May 19, 2010

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!
"இனி தம்பியோட fees க்கு கஷ்டப்பட வேண்டியதில்லை அம்மா"
என்றேன் நேற்று.
அன்னையின் கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர்......

தந்தை விட்டு சென்ற அத்தனை பொறுப்புகளையும்,
செம்மையாய் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக நல்ல கம்பெனியில், தேவைக்கும் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. :-)

கடந்த இரண்டு நாட்களாய் நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றது மொத்தம் 1498 பேர் இறுதியில் தேர்வு செய்யப்பட்டது 80 பேர்.

அதில் நானும் ஒருத்தி என அறிவித்த போது....... அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. துள்ளி குதித்து ஓடினேனாம், தோழி ஒருத்தி சொன்னாள்.

இந்த வேலை எனக்கு கிடைக்க, என்னை விட பலமுறை கடவுளிடம் வேண்டிய, வேலை கிடைத்ததும் என்னை விட பல நூறு முறை சந்தோஷப்பட என் அன்பு தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உறவினர்களுக்கும் மிக்க நன்றி.

சோர்ந்த போதெல்லாம் தட்டி கொடுத்து, வெற்றி பெற்றபின் தொலைபேசியில் ஓவென கத்தி மகிழ்ந்த என் நெஞ்சார்ந்த தோழி 'யுஜி' மற்றும் அன்பு 'ரங்கி'கும் என்றும் என் அன்புகள்.... :-)

வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாட்களில் பயணித்து கொண்டு இருக்கின்றேன்... :-)

9 comments:

 1. இது கதை இல்லியே, நிச வாழ்வு தானே?

  என் மனமார்ந்த வாழ்த்துகள். என் பழங்கதையும் நினைவுக்கு வருது. இன்னும் இன்னும் மகிழ்ச்சியான பயணங்கள் விளையட்டும்.

  ReplyDelete
 2. In everyone's life, at some time, our inner fire goes out. It is then burst into flame by an encounter with another human being. We should all be thankful for those people who rekindle the inner spirit.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள், மனம் மாற்றா பணம் சம்பாதித்து சந்தோஷமாய் இருங்கள். :-)

  ReplyDelete
 4. விவரிக்க இயலவில்லை....

  என் அன்பு வாழ்த்துக்கள் தோழி..

  ReplyDelete
 5. Congratulations!

  You and your family deserve this!!!!!

  May God bless you and grant success whatever you do.

  With love, regards and best wishes

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கனி..!!

  இன்னும் நிறைய சந்தோஷங்களோடு வாழ்க்கையை உங்களுக்கும் பிறருக்கும் வளமானதாய் கொண்டுசெல்லுங்கள்..!!

  ReplyDelete
 7. @ கெக்கே பிக்குணி,
  அட நெசமா தானுங்க..
  நன்றி.. :-)

  @ ப்ரின்ஸ்,
  எப்பவும் பிரின்ஸ்... :-)

  @ முரளிகுமார் பத்மநாபன்,
  நீங்க இருக்கும்போது எப்படி முரளி மாறிவிடுவேன்.
  :-)

  @ ஜெய்,
  நன்றி ஜெய்.. :-)

  @ ஜிஜி,
  நன்றிங்க.. :-)

  @ ரங்கன்
  நன்றிங்க.. :-)

  ReplyDelete
 8. today is my happiest day in my life..

  wish you all the best..
  siva

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் கனி ...
  லைப் ஸ்டைலே மாறப் போகுதுன்னு சொல்லுங்க ...
  என்ஜாய் பா ...
  எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சுத் தான் ஜாப்ல ஜாய்ன் பண்ற மாதிரி இருக்கும் ..
  சோ ..நிறைய எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன் ...

  சென்னை போம்ரா எஞ்சினியரிங் காலேஜ் first year பொண்ணு தற்கொலை பத்தி அஞ்சலி பதிவு எழுதியிருக்கேன் கண்ணீரோடும் ஆத்திரத்தோடும் ...
  உங்களோட கோபத்தையும் பகிர்ந்துக்குங்க ....
  engg students யாராவது பதிவர்களா இருந்தாங்கன்னா அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க ...

  வரேன் கனி..

  ReplyDelete