செம போர்..
கல்லூரி முடித்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கியுள்ளேன்.
வேலைக்கு எடுத்த கம்பனியோ, எப்போது அழைக்கும் என சொல்லவே இல்லை. குறைந்தது மூன்று மாதம் ஆகும் என நம்புகிறேன்.
அம்மா ஊர் சுத்தவும் விட மாட்டேன்றாங்க. :(
ஏதாவது ஒரு வேலை செய்து எப்படியாவது இருக்கின்ற நேரத்தை உபயோகமாக மாற்றிக்கொண்டு இருக்கேன்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு படமாவது பார்க்கின்றேன்.
அடுத்து புத்தகங்கள், சேட்டன் பகத்-இன் நாவல்கள் " One night at the call center", " Two states ". இரண்டும் படிச்சுட்டேன். இப்பொழுது " தீண்டாத வசந்தம் " படித்து கொண்டிருகின்றேன். இது ஒரு மொழி பெயர்கப்பட்ட நாவல். நாவல் முழுக்க, வலிகள் நிறைந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சு குமுறல்கள்.
மேலும் ஹிந்தி கற்றுக்கொண்டு வருகின்றேன். :)
சனி, ஞாயிறு காலையில் மட்டும் வகுப்பு. பெரும்பாலும் எல்லாருமே ஒன்னாவது, ரெண்டாவது பசங்க. அவங்களோட சேர்ந்து க, கா, க(ga), க(gha) என்று படிக்கின்ற சுகம் இருக்கே.......
ஹிந்தி சார், நக்கலாய் கேட்கும் கேள்விகளுக்கும், வெள்ளந்தியாய் பதில் சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... அந்த வெள்ளந்தி சிரிப்பெல்லாம் மரணித்து விட்டது நமக்கு.
"அக்கா உன்னோட பேர் என்ன?" இந்த கேள்வியை ஒரு குட்டி பொண்ணு நான் சென்ற முதல் நாள் மூணு முறை கேட்டுச்சு.
ஆனால் நம்ம, யாராவது பேர் சொன்ன அடுத்த நொடியே மறந்து போனாலும், ஈகோவினால் திரும்ப கேட்க கூட மாட்டோம். மறுபடியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தெரியத்தானே போகுது என விட்டுவிடுவோம் இல்லையா... :)
அப்படியும் வார நாட்கள் வெட்டியாய் கழிகின்றனவே என சுவற்றை பார்த்து யோசிக்கையில் ஒரு போஸ்டர் வரைந்தால் என்ன?.. என ஒரு எண்ணம் எழ தூரிகையை கையில் எடுத்தேன்.


நல்லா இருக்கா???? :)
ஒரு மகிழ்ச்சியான செய்தி, எங்களின் போட்டோ ஒன்று இந்த மாத PIT - இன் முதல் கட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஒரு அடி முன்னேறி இருப்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி... தலைப்பும் மகிழ்ச்சியே...

அடுத்து car driving கற்றுக்கொள்ள அம்மாவிடம் பிட்டு போட்டுள்ளேன்.. ஹிஹிஹி...
இன்னும் உபயோகமாய் கழிக்க என்ன செய்யலாம் இந்த வெட்டி நாட்களில்.....????
சமூகசேவை ?
எங்கு எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டுள்ளோம் நானும் தோழியும்.
யாரை அணுகுவது என தெரியவில்லை.
உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் பின்னுட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும்.