
கீழே வைக்க மனமில்லாமல்...
( சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5 அன்று, பெட்ரோல் பங்கில் தரப்பட மரக்கன்று. பரிகாரம் என்று நினைக்கிறேன்.... )
இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது போல் ஒரு உணர்வு.
ஒவ்வொரு கன்றையும், செடியையும் பார்க்கும் போது அப்படியே வீட்டுக்கு தூக்கிட்டு போய்விடலாம் என்று தோன்றும்.
ஒரு செடியை வாங்கினாலோ, பதியனிட்டது அழகாய் வந்து விட்டாலோ, ஒடித்து நடப்பட்ட கிளையில் தளிர் வந்தாலோ, ஒரு சந்தோஷம் வரும் பாருங்க, அதற்கு இணை ஏதும் இல்லை.
இந்த சந்தோஷத்தை அனுபவிக்கவாயினும் ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றி தான் பாருங்களேன்.
உண்மைதான் கனி!!
ReplyDeleteஅவை வளர்ந்துவரும்போது...நம் மனமகிழ்ச்சியும் அதோடு வளர்வதாக உணர்ந்திருக்கிறேன்..!!
நாளைக்கே இரண்டு செடிகள் வாங்கி வளர்க்க துவங்குகிறேன்..!!
நன்றி!!
அன்பின் கனிமொழி
ReplyDeleteசுற்றுச் சூழக்ல் தினத்தன்று ஒரு அருமையான இடுகை - மழலையின் பாதங்களைத் தொட்டால் வரும் இன்பத்திற்கு அள்வே இல்லை - அதே இன்பம் இலைகளைத் தொடும் போதும் வரும் - அருமையான - இயல்பான அனுபவத்தில் வந்த உவமை.
நல்ல செயல் - செய்ய வேண்டும் - நல்வாழ்த்துகள் கனிமொழி
நட்புடன் சீனா
மரம் வளர்ப்பது சுற்றுச் சூழல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் என்று கூறுவார்கள். உங்களின் இயற்கை மீதான ஆதங்கம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
ReplyDeleteபோத்தீஸ்லயும் குடுத்தாங்க, வீட்டுல நட்டு வெச்சிருக்கேன். செடி வளர்வதை பார்க்க ஆர்வத்துடன் இருக்கறேன்
ReplyDelete//இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது போல் ஒரு உணர்வு.//
ReplyDeleteஅது உண்மைதாங்க...
அதுவும் மழை நின்ற நேரம், பார்க்கும் செடி எல்லாமே புன்சிரிப்போடு இருப்பது மாதிரி தோணும்...
மழலைச்சிரிப்பு... அழகு...