Wednesday, June 16, 2010

நாற்பத்து இரண்டும், நாமும்...


நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான் என்றான் என் நண்பன்.

உங்களைப்போலவே நானும் திகைத்தேன் '42' தானா அத்தனைக்குமான பதில் என்று.
கூகுளில் சென்று உன் கேள்வியினை அளி, என்ன தருகின்றது என்று பார் என்றான்.

அவன் கூறியது போலவே " The Hitchhiker's Guide to the Galaxy "யும் அடுத்ததாக நாற்பத்தி இரண்டும் வந்து நின்றது..

அப்படி, என்ன தான் நாற்பத்தி இரண்டில் உள்ளது என்பதை தேடினேன்.
கணிதவியலில் பல்வேறு சிறப்பு தொடர் எண்களில் நாற்பத்து இரண்டு மட்டுமே வருகிறதாம்.

அறிவியலில், வானவில்லின் கோணம் 42 டிகிரி.

அடிப்படை மாறிலிகளான (Constants) ஒளியின் வேகம் மற்றும் பூமியின் விட்டம் வைத்து ஒரு கோட்பாட்டினை (theory) கூறுகிறார் 'பால் கூபர்'. அதாவது பூமியின் மையக்கோட்டில் ஒரு புறத்தில் இருந்தது இன்னொரு புறத்திற்கு துளையிட்டு, ஒளியினை செலுத்தினால் அது மறு புறம் செல்ல எடுத்து கொள்ளும் கால அளவு 42 நிமிடம். வியக்கதக்க வகையில் பூமியின் மையக்கோடு வழி அந்த துளை செல்லவில்லை என்றாலும், ஒளியின் பயண நேரம் 42 நிமிடம் தான் ஆகிறது. இதனையே 'லெவிஸ் கரோல்' என்பவரும் தன் ஆய்வின் மூலம் கூறுகிறார்.

மேலும் பைபிளில் பல்வேறு இடங்களில் நாற்பத்து இரண்டினை சுட்டி காட்டுகிறார்கள். பைபிள் பக்கம் போக வேண்டாம் ஏனெனில் அதனையே கேள்வி குறியோடு நோக்கும் ஆட்கள் நாம்(நான்).

The Hitchhiker's Guide to the Galaxy -
படத்திலும் நாற்பத்தி இரண்டை குறிப்பிட்டு இருப்பார்கள், இருப்பினும் அது ஒரு fiction கதை மட்டுமே.

மேலும் 9 * 6 = 42 ஆம் ( பேஸ் 13 ).................

'வசூல் ராஜா MBBS படத்தில்' வரும் லக்கி நம்பர் 7 கதையாக உள்ளது. :)

இது மட்டும் அல்லாமல் எந்த ஒரு search engine னில் தேடினாலும் அக்கேள்விக்கு விடை 42 வருமாறு program செய்யப்பட்டதும் ஏனோ?

'நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான்' என்பது உண்மையோ, பொய்யோ, அல்லது 42 என்பது Douglas Adams எடுத்து விட்ட ஒரு சமவாய்ப்பு இலக்கமாகவோ (Random number ) இருக்கலாம்.

எனினும், நாம் தெரிந்து கொள்வோம் நாற்பத்து இரண்டை பற்றி.

...................................................................................................................

The Hitchhicker's guide to the galaxy - புத்தகத்தின் ஆசிரியர் Douglas Adams

42 தான் உண்மையான விடை என்றாலும் நம் புலனறிவு அதனை ஏற்றுக்கொள்ளாது. :)
ஏனெனில்,
நம் மூளையானது அதன் புலனறிவுகளால் வரையறுக்கப்பட்டது. அதன் வரையறைக்கு மீறிய ஒரு உறுபொருளை அதனால் புரிந்து கொள்ள முடியாது .

விடை தெரியாத அத்தனை கேள்விகளுக்கும் இது பொருந்தும்.

6 comments:

 1. தெரியாத தகவல்கள்...

  நானும் பார்க்கிறேன்...

  ReplyDelete
 2. //நம் வாழ்க்கை மற்றும் , இந்த அண்டம் பற்றிய நமக்கு விடைத்தெரியாத பல கேள்விகளுக்கும், விடை '42' தான் என்றான் என் நண்பன்//

  சரி தான் நான் கல்லூரி படிக்கும் போது எனது வரிசை எண் 42 மேலும்.,
  முதலாமாண்டில் Basic Of Computer Science l எனது மதிப்பெண்கள் 42.., இரண்டாமாண்டில் 2nd Sem தேர்வில் Mechanics Of Material l முதல் அட்டெம்ப்டில் 4 மதிப்பெண்ணும், இரண்டாம் அட்டெம்ப்டில் 2 மதிப்பெண்ணும், கிடைத்தது.. மூன்றாமாண்டு 6thசெம் இல் Thermo Dynamics l 42 பெற்றதாக ஞாபகம்..

  ஆகையால் இது போன்ற பதிவுகள் என் நெஞ்சை பாதிப்பதால்..
  வேறு எண்ணை முயற்சிக்க வேண்டி.,
  தோழியிடம் வேண்டி வருந்தி
  மிக தாழ்மையுடன்
  அடக்கத்துடன்
  பணிவுடன்
  கேட்டுக்கொள்கிறேன்..

  ReplyDelete
 3. புதுசா ஒரு மேட்டர் கிடைச்சி இருக்கு..ஆராய்ச்சி பண்ணிட வேண்டியதுதான்!!

  ReplyDelete
 4. புதிய கண்டுபிடிப்பா கனிமொழி.

  கனிமொழி. மலர்விழி. எனும் தமிழ்பெயர்கள்
  எனக்கு பிடிக்கும்.

  ReplyDelete
 5. 42 thadava padichaathaan puriyum polaye :D

  ReplyDelete