Monday, July 5, 2010

இனியாவது விழிப்போம்...

பேருந்தின் உள் இருப்பவர்களும், வெளியில் நொடியில் நகரும் காட்சிகள் என காண்பவை எல்லாம் வெளிர் மஞ்சள் நிறத்தின் கலவையாய் தெரிகின்றது.
நா எப்போதோ வறண்டு விட்டது.
மெல்ல வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பாய் மாற,காதுகள் அடைத்து, பேருந்தில் இருந்தது எங்கோ அழைத்துச் செல்லபடுவது போல் ஒரு உணர்வு. உடல் மட்டும் இதோ... இங்கே, இருக்கும் சக்தி அனைத்தும் கொண்டு இக்கம்பியினை பிடித்து நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டும்.... குடிக்க கொஞ்சம் தண்ணீர்....

05/7/2010 11:50 A.M

தண்ணி இருக்குங்களா?
இந்தம்மா... மயக்கம் வருதா? இங்க உட்கர்ந்துக்கொம்மா.... நல்லா குடி...
போதும்.. இந்தாங்க...
இன்னும் கொஞ்சம் கூட குடி... ஜென்னளுக்கா முகம் கழுவிக்கோ... நல்லா சாஞ்சி உட்கர்ந்துக்கொம்மா...

05/7/2060 11:50 A.M

தண்ணி இருக்குங்களா?
இந்தம்மா... மயக்கம் வருதா? இங்க உட்கர்ந்துக்கொம்மா.. இந்த ஒரு பாட்டில் தண்ணி தான், இதை ரெண்டு நாளைக்கு வெச்சி குடிக்கணும், அதனால ரொம்ப ரொம்ப கொஞ்சமா குடி..
ம்ம்ம்...
நல்லா சாஞ்சி உட்கர்ந்துக்கொம்மா...

...........................................................


ஐம்பது ஆண்டு கால இடைவெளியில், மனிதமும், தாய்மையும், மாறாது...
ஆனால் கையில் காசு இருந்தும் கிடைக்கும் குடி நீரின் அளவு மிகவும் மோசமாகிவிடும்...
ஒழுகும் குழாய், வழிந்தோடும் குடங்களை பார்த்தால் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்ததெல்லாம் போதும்...
இனியாவது விழிப்போம்...

9 comments:

  1. ///ஐம்பது ஆண்டு கால இடைவெளியில், மனிதமும், தாய்மையும், மாறாது...
    ஆனால் கையில் காசு இருந்தும் கிடைக்கும் குடி நீரின் அளவு மிகவும் மோசமாகிவிடும்...
    ஒழுகும் குழாய், வழிந்தோடும் குடங்களை பார்த்தால் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்ததெல்லாம் போதும்...
    இனியாவது விழிப்போம்...//


    மிக சரி...!

    ReplyDelete
  2. மனிதமும் தாய்மையும் கூட மாறிவிடும் தோழி!
    மிக பிரபலமான ஓர் தியரி உண்டு!
    இறக்கும் நிலை வந்தால் , மனிதகுரங்கும் கூட தன் குட்டியை விட்டு விட்டு தான் தப்பிக்க வழி தேடும் என்று நிரூபணம் செய்யப்படுகிறது!
    அது தான் "struggle for existence "!
    காலம் வளர வளர , சுயநல வேர்கள் ஆழமாக ஊடுருவும்!
    உண்மை தானே!
    தாய்மை! தமிழகத்தில் தான் பெரிதாக போற்றப் படுகிறது!
    மற்ற நாடுகளில் மறைய துவங்கி விட்டது!
    உண்மை கசந்தாலும், ஒப்புக்கொள்ளவேண்டியது தானே!
    -வருத்தங்களுடன்,
    வைஷாலி

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மைதான்.!!
    சுயநலம் வளர்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டி இருக்கிறது.
    ஆனால், குடிநீருக்கு பதில் பாட்டில் வாட்டரையே நம்பி நாம் வாழப்பழகுவது மிகவும் தவறான விஷயம்.

    வருங்காலம் எப்படி இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது..!:)

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. @ வைஷாலி...

    //மனிதமும் தாய்மையும் கூட மாறிவிடும் தோழி!
    மிக பிரபலமான ஓர் தியரி உண்டு!
    இறக்கும் நிலை வந்தால் , மனிதகுரங்கும் கூட தன் குட்டியை விட்டு விட்டு தான் தப்பிக்க வழி தேடும் என்று நிரூபணம் செய்யப்படுகிறது!
    அது தான் "struggle for existence "!
    காலம் வளர வளர , சுயநல வேர்கள் ஆழமாக ஊடுருவும்!
    உண்மை தானே!
    தாய்மை! தமிழகத்தில் தான் பெரிதாக போற்றப் படுகிறது!
    மற்ற நாடுகளில் மறைய துவங்கி விட்டது!
    உண்மை கசந்தாலும், ஒப்புக்கொள்ளவேண்டியது தானே!//

    உங்களின் கருத்துகளை முழுவதுமாக ஒப்புகொள்ள முடியவில்லை தோழி, காரணத்தை பற்றி வேறோரு பதிவில் பார்க்கலாம்...
    மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும்.. :)

    ReplyDelete
  6. @ தமிழ் அமுதன்

    மிக்க நன்றிங்க வருகைக்கும், கருத்திற்கும்...

    ReplyDelete
  7. @ ரங்கன்

    நன்றி ரங்கா... :)

    ReplyDelete
  8. ஐம்பது ஆண்டு கால இடைவெளியில், மனிதமும், தாய்மையும், மாறாது...
    ஆனால் கையில் காசு இருந்தும் கிடைக்கும் குடி நீரின் அளவு மிகவும் மோசமாகிவிடும்...

    not really in full acceptance with the former line. later will always be true and is.

    மனிதமும், தாய்மையும் have really changed from the last fifty years... and will be in the next fifty...

    nicely portrayed it :)

    ReplyDelete