Monday, September 12, 2011

கரைசேர்ந்த அன்பு (பகுதி 5)

 இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே..
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே..

Sony speakers எகிறிகிட்டு இருந்தது..

அப்பா mobile ring ஆனது..
ஏதோ ஒரு unknown number..
அப்பாவை தேடி புடிச்சு அவர்கிட்ட கொடுத்தேன்..
ஆஆங் சொல்லுங்க மாப்பிள்ளைன்னு ஆரம்பிச்சார்..
சரி.. சரிப்பா.. பார்த்து பத்ரமா போய்ட்டு வாங்க..
அம்முகிட்ட பேசறிங்களா..?

எதிர் தரப்பில் என்ன reply வந்துச்சோ தெரியல.
சிரித்து கொண்டே தொடர்பை துண்டித்தார் அப்பா..

எங்கியாச்சு இப்படி ஒரு மாப்பிளை இருப்பானா..
ராணியோட would be என்னடானா கல்யாண பேச்சு எடுக்கும் போதே இவளோட நம்பரை எப்படியோ வாங்கிக்கிட்டு ..
daily night mobile-ல ஒரே பேச்சு என்று சொல்லி இருக்கா..
இவர் ஏன் இன்னும் என்  நம்பரை வாங்காமல் இருக்கார்?

ஒரு வேலை நான் முழு மனசோடு ஒப்பு கொள்ளவில்லையென வருத்தமோ?
தெரியலையே..

அப்பா மும்முரமா அவரோட மாப்பிளை நம்பரை save பண்ணிக்கொண்டு  இருந்தார்.
என்னவாம்ப்பா?
ஹே.. மாப்பிளை sydney flight ஏற போகிறாராம்டா. ஏர்போர்ட்ல இருந்தது பேசினார்..
ஏம்ப்பா அவர் என்னிடம் பேசல?
சிரித்தார்.
Sollungappa, ஏன் நீங்க சிரிக்கரிங்க?
அது உங்க ரெண்டு பேர் பிரச்சனைமா நான் தலையிட விரும்பல.
ரொம்ப தான் கிண்டல் பண்ணி சிரிக்கரிங்கப்பா ..
உங்க mobile தாங்க..

லாஸ்ட் கால்-லை டயல் பண்ணேன்..
ஹெலோ. நான் அம்முதின் செல்வி பேசறேன்.
Flight ஏற போறதா அப்பா சொன்னார்? என் கிட்ட சொல்லிட்டு போக மாட்டிங்களா மகேஷ்?
அவன் சொன்ன பதில் கேட்டு வாய் அடைத்து போனேன்..

எங்க இருந்து தான் இப்படி பேசக் கற்றுகொண்டானோ ?

மூணாவது மனுஷங்க கிட்ட தான் மொபைல்ல பேசணும் அம்மு.. நான் உன்னிடம் எப்பவோ போய்ட்டு வரேன்னு சொன்னேன்.
நீயும் சரின்னு சொன்னியே கொஞ்ச நேரத்துக்கு முன்ன?
ஹேய் என்ன confuse பண்றிங்க  ..
அதெல்லாம் அப்படி தான்.. you and me are not an individual அதான் உன்னிடம் சொல்ல தோணல..
அய்யய்யோ என்னவோ ஆய்டுச்சு இந்த பையனுக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டு. கால்-லை  துண்டித்தேன்.

அவன் சொன்ன பதில் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது ..

அப்பா.. மகேஷ் எப்போ திரும்பி வரேன்னு சொன்னார்?
இன்னும் 5 இல்லனா 6 நாள் ஆகும்மா..

இன்று திங்கள்.. வரும் வெள்ளியில் நடைபெற இருக்கும் குல தெய்வ வழிபாடு நினைவுக்கு வந்தது..

எங்க ஊர் பக்கம் ஒரு வழக்கம், இந்த மாதிரி திருமணமும் அதை தொடர்ந்து வரும் புது வாழ்வும் நல்லா இருக்க வேண்டும் என  நடைபெறும் குல தெய்வ வழிபாட்டில் மணப்பெண்ணும், மணமகனும்  கலந்து கொள்ள கூடாது.
ஏன் என்று இது நாள் வரை அர்த்தம் தெரியாது. ஆனால் அப்படித்தான் நடக்கும்.

ஆன்ட்டியும் அங்கிள்-லும் வீட்டில் full time இருக்க துவங்கி இருந்தார்கள். என்னை மட்டும் தவிர்த்து மூவரும் சேர்ந்து எப்போதும் ஒரே  கிண்டலும் சிரிப்பும் தான்.
தனிமையை உணர்ந்தேன்.
FB போய், மகேஷிடம் பேச வேண்டும் போல இருந்தது.
அவன் அங்கு இல்லை.
Waiting for u.. என message அனுப்பி log off பண்ணினேன்.

அப்படியே scooty எடுத்து கொண்டு மகேஷ் வீடு வரை சென்று வரலாம் போல் இருந்தது.
இனி நான் வாழ போகும் இல்லம் எப்படி இருக்கும் என பார்க்க அத்தனை ஆவல் எனக்கு.
இங்கு இருப்பது போல் நிறைய செடி கொடிகள் இருந்தால் அந்த வீடு என் மனதொடு  ஒட்டிக் கொள்ளும்.
இல்லையெனில்.. ஏன்  negativa யோசிக்கணும். போய் பார்த்து விட்டால் தேவலாம் போல் இருந்தது.

ஆன்ட்டி..
சொல்லுமா ..
நான்..
சொல்லுடா..
நான், விக்கியோடு மகேஷ் வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?
(விக்கி, எட்டாவது படிக்கும் பக்கத்துக்கு வீட்டு பையன் என்பதும், என் friend என்பதும் இங்கு சொல்லியே ஆகவேடும்)
மகேஷ் வீட்டுக்கா.. no no.. கல்யாணம் ஆன பிறகு தான் அங்க போகணும். இப்ப போக வேண்டாம் மா
பார்ப்பவர்கள் தப்பா பேசுவாங்க..
இல்ல ஆன்ட்டி, அங்க இருக்க போறவள் நான் தான். நான் போய் வீடு புடிச்சு இருக்கா? அங்க இருக்றவங்க  எப்படி பழகறாங்க-ன்னு  பார்த்துட்டு வந்துடறேனே..
வேணாம்டா செல்லம். நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன்.

அதற்கு மேல் ஆன்ட்டியிடம் வாதம் வேண்டாம் என தோன்றியது.

சரி.. விக்கி வீட்டுக்காவது  போயிட்டு வரேனே..

ஓகே மா.. போயிட்டு சீக்ரம் வந்துரு..

ஓடினேன்..
ஹேய் விக்கி..
சொல்லுங்க கல்யாண பொண்ணு..
போட நீவேற..
என்ன ஆச்சுக்கா ..
மாடிக்கு வரியாடா சொல்றேன்..
அம்மா.. நானும் அம்மு-அக்காவும் மாடிக்கு போயிட்டு வந்துடரோம்மா..
சரிடா.. நாளைக்கு அவ கல்யாணும் பண்ணிக்கிட்டு போயிட்டா நீ எங்க போய் படிக்க போறன்னு  தெரியல .. என சிரிச்சிகிட்டே சொன்னாங்க அகிலா அக்கா

வழக்கமாய் நாங்கள் உட்காரும் மதில் மேல் உட்காந்து பேசினோம்.
டேய் ... எனக்கு மகேஷ் வீட்ட பாக்கணும் போல இருக்குடா.. இப்பவே..
யாருக்கா மகேஷ்..?
சரியா போச்சு போ..
அதான்டா என்ன பொண்ணு பார்த்துட்டு போனானே "ஒரு தடியன்''!!
அக்கா அவரை தடியன்-ன்னு சொல்றதெல்லாம் நல்லா இல்ல.. :)
செல்லமா சொன்னா ஒரு தப்பும் இல்ல.. என வெட்க சிரிப்புடன் சொன்னேன்.
இன்னைக்கு எனக்கு இருக்கும் எல்லா problem -கும் அவன் ஒருத்தன் தான்டா காரணம்..
சரி நான் மேட்டர்-க்கு  வரேன்.. எப்படியாச்சு யாருக்கும் தெரியாம அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்துரனும்டா..

என்னால அவங்க வீட்ட பார்க்காமலாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு போக முடியாது.
உன்னால் கூட்டிகிட்டு போக முடியுமா முடியாதான்னு சொல்லுடா..
இரு.. யோசிக்ரோம்ல..
சரி.. சரி.. யோசி..
உங்க வீட்ல எங்கையாச்சும் மொத்தமா வெளிய போவாங்களா?
ஆமா வர வெள்ளிக்கிழமை. கோவிலுக்குடா..
நீ அவங்க கூட போகாத அம்மு.. ஏதாச்சு சாக்கு சொல்லி நின்னுடு..
ஹே நான் வரேனாலும் கூட்டிட்டு போக மாட்டாங்கடா..
ஏன்?
நான் போக கூடாதாம். அது அப்படி தாண்டா..
சரி பிளான் ஓகே தானா உனக்கு?
டபுள் ஓகேடா .

Friday எப்படா வரும் என்று பார்த்துட்டு இருந்தேன்.

காலையே எல்லாரும் கோவிலுக்கு புறப்பட்டுட்டாங்க..

எனக்கு துணையா ஒரு பாட்டியை வீட்ல விட்டுட்டு போய் இருகாங்க..

'பாட்டி.. நான் பக்கத்துக்கு ஊர்ல இருக்கற friend-க்கு பத்திரிக்கை கொடுத்துட்டு  வந்துடறேன்'

தனியாவாம போக போற.. நானும் கூட வரேன்.

இல்ல பாட்டி, பக்கத்துக்கு வீட்டு விக்கியையும் கூட்டிட்டு தான் போக போறேன்.

ஆனா சீக்ரம் வந்துடனும்.
சிரித்துகொண்டே சரி பாட்டி என்றேன்.

கிளிபச்சை நிற தாவணி, சில்வர் ஜரிகை.. ரொம்ப புடிச்ச டிரஸ் போட்டுகொண்டு புறப்பட்டேன்.

விக்கியும் வந்துட்டான்.

ரெண்டு பேரும் விக்கியோட ஸ்கூட்டியில் கிளம்பினோம்.

நேற்றே விக்கி, மகேஷின் வீட்டை கண்டு கொண்டதால், 10 நிமிஷத்துல அந்த தெருவுக்கு போய்டோம்.

ஏனோ இடம் நெருங்க நெருங்க.. மனசு திக் திக்-ன்னு இருந்தது..

எப்படியும் அந்த வீட்டில் எல்லாரும் கோவிலுக்கு போய் இருப்பாங்க. யாராவது  ஒருத்தர் மட்டும் வீட்டில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

வீடு பூட்டி இருந்தால் வெளிய மட்டும் பார்த்துட்டு வந்துவிட வேண்டியது தான் என  மனதில் நினைத்துக்கொண்டேன்.

சரி அப்படி யாராச்சு இருந்து, அவங்களுக்கு நம்மள அடையாளம் தெரியாம போய், வீட்டு உள்ள சேர்க்கவில்லை என்றால்?..

பயத்துல வேர்த்துடுச்சு..

அக்கா..
.
அக்கா...

ம்ம்.. சொல்டா..

அதோ ஒரு வீட்டு முன்னாடி செடியெல்லாம் இருக்கே அது தான் உன் வீடு  ஆகபோகுது..

'கொள்ளை அழகு அந்த வீடு..'

விக்கி வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினான்.

வீடு திறந்து தான் இருந்தது.

அக்கா.. நீ போய் பார்த்துட்டு வா.. நான் wait பண்றேன்..

வெளியவேவாடா?

இல்லக்கா என்னோட friend வீடு இருக்கு இதே தெருதான்..

அவன் கூட கொஞ்சம் வேலை இருக்கு.. நீ சுற்றி பார்த்ததும் எனக்கு கால் பண்ணு நான் வரேன் என்றான்.

சரி என தலையாட்டினேன்..

தெருவில் கிட்டத்தட்ட யாருமே இல்லை.

எல்லோரும் கோவிலுக்கு தான் போய் இருக்க கூடும்.

விக்கி சென்றதும் வீட்டை நிமிர்ந்து பார்த்தேன்..

அழகோ, அழகு.. Compound கேட்டின்  மேல் ஒரு வளைவு, அதில் அதன் அழகா பூ கொடி.

ஒவ்வொரு பூவும் ஒரு நிறம், சின்ன ஸ்பீக்கர் வடிவில் இருந்தது. அத்தனையும் அன்று என் வரவிற்காக பூத்த  பூக்கள்.

ஓட்டு வீடு..

மெதுவாய் கேட் திறத்து உள்ளே போனேன்.

நாய் குறைத்து.. லைட்டா  மறஞ்சு' இருந்த பயம், மீண்டும் தலை எடுத்தது.

சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. தப்பினேன்..

நாயின் குரல் கேட்டு ஒருவர் மண்வெட்டியோடு ஓடி வந்தார்..

என்னை பார்த்ததும் அத்தனை பூரிப்பு அந்த முகத்தில்.

அம்மா.. போட்டோவை விட நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க..

வியர்த்து இருந்த என் மீது ஒரு தென்றல்.

சிநேகமாய் புன்னகைத்தேன்.

என்னங்கம்மா இந்த பக்கம்?! தாத்தா உள்ள தான் இருக்காரு.. உள்ள வாங்கமா.. என்றார்.

புகபோகும் வீடு..  என் கனவுகளின் இல்லம்..

கால் எடுத்து வைத்தேன். ஞாபகமாய் வலது கால். நம்பிக்கை இல்லை இருந்தாலும், ஞாபகமாய் வலது காலினை எடுத்து வைத்தேன்.

தாத்தா ஏதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தார்.

என்னை பார்த்ததும், அத்தனை ஆச்சர்யம் அவர் முகத்தில்..

எங்க என் பேத்தியை கல்யாணத்துல தான் முதன்முதலா பார்க்க போறேனோன்னு நினைத்தேன்மா.. மகாலட்சுமி மாதிரி நீயே என்ன தேடி வந்துட்ட..

டேய் பேதிக்கு இளநிர் கொண்டுவா என்றார்.

அதுவரை தாத்தாவை மட்டுமே பார்த்து கொண்டிருந்தன கண்கள்.

என்னம்மா இந்த பக்கம். வேலை ஏதாச்சு இருந்துச்சா?..

ஆமா தாத்தா இந்த ஊர்ல எனக்கு ஒரு friend இருக்கா, அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.

நம்ம வீட்டை பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை தாத்தா.. அதான் வந்தேன். அப்பாக்கும் அங்கிளுக்கும் தெரியாது தாத்தா. நான் யார்கிட்டயும் சொல்லல.
சொன்ன வேணாம்னு சொல்லுவங்கனு தான் தாத்தா.

அதுக்கென்னம்மா நீ வந்து போனதை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன்..

தாத்தா..

சொல்லுமா..

நான் இந்த வீட்டை சுத்தி பார்க்கட்டுமா?

தாராலமா... இது உன் வீடுமா.

அப்போது தான் நிமிர்ந்தன என் கண்கள்.

கூடம் முழுக்க சாமி படங்கள். அவ்ளோ சுத்தமாய் இருந்தது ஹால்.

சமையல் அறை கொள்ளை அழகு.

எல்லாம் கண்ணம்மா கை வண்ணம்மா.. எல்லாத்தையும் சுத்தமா செய்வாங்க. என்றார் தாத்தா.

அந்த தூரத்து உறவுகாரம்மாவை பற்றி சொல்லி கொண்டிருந்தார் தாத்தா.

உண்மையில் அவங்க ரொம்ப நல்லா வேலை செய்பவர்கள் தான், ஏனெனில் காசு கொடுத்தால் கூட இவ்ளோ பெரிய வீட்டை அழகா  சுத்தமா வெச்சி இருப்பது கஷ்டம்.

She is great என நினைத்துக் கொண்டேன்.

ஒரு ரூமில் no entry என்று ஒரு sticker இருந்தது.

பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது எனக்கு.

அது தான் மகேஷோட ரூம் மா. அந்த பையன் இப்படி தான் ஏதாச்சு செவத்துல', கதவுல ஒட்டிக்கிட்டே இருப்பான். நீ உள்ள போய்  பாருமா.
 என்றார் தாத்தா easy chair-யில் அமர்ந்தபடி.

உள்ளே நுழைந்தேன். ஒரு bed, Shelves, computer, lot of books, dvds, speakers, shields, photos, ஏகப்பட்டது இருந்தது.

எல்லாம்  சேர்ந்து ஒரு புன்னகையை வர வைத்தது. கண்காட்சியில் அடுக்கி வைக்க பட்டு இருந்தவைகளை போல் பர்வையிட்டேன்

கனவு போல் இருந்தது...

இந்த ரூம்குள்ள இன்னொரு ரூம். அந்த கதவின் மேல் ஒரு மயில் இறகு ஒட்டப்பட்டு இருந்தது.

கதவை திறந்தேன், துணி மாற்றும் அறை போலும், ஷெல்ப்ல துணிகள் இருந்தது. அந்த ரூமோட இன்னொரு பக்கம், சுவரையே மறைக்கும் அளவுக்கு பெரிய கண்ணாடி.

கண்ணாடியை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்.

அந்த கண்ணாடியில் என்னுடைய photo enlarge செய்யப்பட்டு மேலே சொருகப்பட்டு இருந்தது. போட்டோவின் ஓரத்தில், "எப்போ டி புடிச்சு இருக்குன்னு சொல்லுவ?" என்று மகேஷ் எழுதிவைத்து இருந்தான்.

அழுது கொண்டே அந்த போட்டோவை பார்த்துக் கொண்டு இருந்தேன். மகேஷ்க்கு என்னை இவ்ளோ பிடிக்கும் என இதுவரை தெரியாது. ஏன் இப்போது அழுகிறேன் என்றும் தெரியாது.

ரொம்ப நேரம் ஆகி இருக்கும்.

யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. மெதுவாய் கண்களை துடைத்துக் கொண்டு, முகத்தை சரி செய்து, கதவை திறந்தேன்.

நின்று கொண்டிருந்தது மகேஷ்.

மீண்டும் என்னை அறியாமல் கண்களில் நீர்.

ஹே!! ஏன் அழற அம்மு..

கண்களை துடைத்தவாரே .. Nothing என்றேன்..

என்ன ஆச்சுப்பா  .. சரி வா.. bed -ல உட்காரு..

இருவரும் அமர்ந்தோம்..

எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. நீ என்னடான அழுதுகிட்டு.

நானும் சந்தோஷத்துல தான் அழுதுட்டேன் என்றேன்.

சிரித்துவிட்டான்.

இருவரும் சிரித்தோம்.

டைம் ஆச்சு நான் வீடுக்கு போகணும், அப்பாக்கு தெரியாம வந்துட்டேன். அவங்க கோவில்ல இருந்து வரதுக்குள்ள போகணும்.

ஹே.. என்ன.. நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற.. இப்பவெல்லாம் உன்னை போக விடமாட்டேன்.

ம்ஹும்.. நான் ஓடிடுவேன்..

சொல்றத கேக்கல.. உங்க அப்பாவிடம் சொல்லிடுவேன்.. "அங்கிள் உங்க பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கான்னு" ..

ப்ளீஸ் சொல்லாதிங்க.. நான் போகணும்..

ம்ஹும்.. நீ சரிபட்டு வர மாட்ட.. நான் அங்கிளுக்கு கால் பண்றேன் இரு..

நிஜமாவே கால் பண்ணிட்டான்..

அங்கிள் உங்க பொண்ணு.. அப்படி என ஆரம்பிச்சவன், வேற modulation-ல.. அங்கிள்.. நல்லா இருக்கீங்களா என்றான்..

பயந்தே போய்டேன்.. படுபாவி.. என மனதில் நினைத்து கொண்டேன்.

நான் நல்லா இருக்கேன் அங்கிள். இன்னைக்கு morning தான் சென்னைக்கு வந்தேன். அங்க இருந்து கோவை வரை flight அப்புறம் call taxi.
Project success அங்கிள். கோவில்ல  அபிஷேகம் எல்லாம் முடிஞ்சிடுச்சா?

ஓ! அப்படியா சரிங்க அங்கிள். நான் வீட்டுக்கு வந்துட்டதா அப்பாவிடமும்,  கண்ணம்மா அம்மாவிடமும்  சொல்லிடுங்க..
ஓகே அங்கிள். வெச்சிடறேன்..

உயிர் திரும்ப வந்தது..

என்னை பார்த்து கள்ள தனமா சிரித்தான், வசமா மாட்டிகிட்டேன். ஹையோ.. எப்படியாவது இந்த ரூம்ல இருந்து தாத்தாவிடம் ஓடிவிட வேண்டும் போல இருந்தது..

Half saree super அம்மு.

ஓடி வந்துவிட்டது வெட்கம். அதையும் மீறி சரி என்றேன்.

Saree தான.. இரு என்றான்.

என்ன லூசு தனமா சொல்றான், ஹெலோ நான் சரின்னு  தான் சொன்னேன். என்றேன். நான் சொல்வதை கேளாமல் suitcase-ஐ திறந்து
ஒரு  அழகான, red colour சாரீயை வெளியில் எடுத்தான்.

ரெட் கலர் சாரீ, ரெடிஷ் embroidery. குட்டி குட்டி வெள்ளை முத்து வெச்சி  அவ்ளோ அழகா இருந்தது சாரீ.

உனக்கு தான். சிட்னி போறதுக்கு முன்னாடியே வாங்கினேன். எப்படி உன்னிடம் தருவது என தெரியாமல் இருந்தேன். நீயே வந்துட்ட. நீ வராமல் இருந்து இருந்தா இன்னைக்கு evening உங்க வீட்டுக்கு வந்து இருப்பேன் தெரியுமா, என்றான்.

இவ்வளவு அன்பாய் இருப்பவனிடம் தான் சொல்லாமல் மறைப்பது சரியா?  என நினைத்தாள் அம்மு..

4 comments:

 1. கதை எல்லாம் கலக்குறீங்க
  நிஜம் போல இருக்கு
  காட்சிகள் எல்லாம்
  கண்ணில் கொண்டு வந்தது
  சிறப்பு
  தொடரட்டும்

  ReplyDelete
 2. நான் நல்லா இருக்கேன் அங்கிள். இன்னைக்கு morning தான் சென்னைக்கு வந்தேன். அங்க இருந்து கோவை வரை flight அப்புறம் call taxi.
  Project success அங்கிள். கோவில்ல அபிஷேகம் எல்லாம் ///

  ஏன் ஆங்கிலம் கலந்து
  அதையும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்
  என்பது தாழ்மையான விருப்பம்

  ReplyDelete
 3. அமைதியா சற்று இடைவெளி காட்டும் அம்மு மகேசுக்கு கால் பண்ணுவது அதுவும் அப்பாவிடம் பொய்க்கோபம் கொண்டு..
  திருப்பம்.. தலைப்பிற்கு பொருத்தமாய்..

  சிட்னிக்கு போன மகேஷ் எப்படி வந்தார்/ ஒருவேளை இது கனவோன்னு நினைச்சா.. :))

  மறைப்பது சரியா.. அய்யய்யோ.. கரை சேர்ந்தது ஊர் போய் பின்னர் வீடு போய் சேருமா..அது சரி..நான் ஏன் பதட்டமடைகிறேன்?? என்ன நடக்குமோ அதுவே நடக்கட்டும்...அது எழுதுபவரின் கையில் இருக்கிறது.

  ReplyDelete
 4. ஏனிந்த இடைவெளி அடுத்த பாகத்திற்கு என நான் கேட்க முடியுமா..
  வாழ்கையும் அவ்வாறு தானே இருக்கின்றது..

  ReplyDelete