Sunday, October 25, 2009

என்னுடைய சைக்கிள்...


அன்று ஆயுதபூஜை, கொஞ்சம் உடம்பு சரி இல்லாததால் அசந்து தூங்கிவிட்டேன். மணி பிற்பகல் 2.30 , திடீரென்று தோன்றியது சைக்கிளுக்கு பூஜை போடவில்லையே என்று. உடனே எழுந்து வாசலுக்கு போய் பார்த்தேன் சைக்கிளை காணவில்லை.
"அம்மா சைக்கிள் எங்க?"
"பப்லூ எடுத்துட்டு போய் இருக்கான் மா" என்றார்கள் அம்மா.
பப்லூ - கடைசி மாமா பையன், பெயர் லிங்கேஷ்வரன், பத்தாம் வகுப்பு, என்னுடைய சைக்கிள் எடுத்துக்கொண்டு தான் வெளியில் போவான்.
எதிர் வீடு.

நேரே மாமா வீட்டுக்கு சென்று சைக்கிளை எடுத்தேன். என்னை பார்த்த சச்சின் ( நாய் ) செல்லமாய் குறைத்து, மாமி நாயின் குரல் கேட்டு வெளியில் வந்தார்கள், அதற்க்குள் நான் மாமா வீட்டின் கேட் தாண்டி வந்துவிட்டேன்.

"பூஜை போட போறியா மா, பப்லூ போடலாம்னு எடுத்து வந்தான்" என்றார்கள் மாமி.
"யார் சைக்கிளை, யார் பூஜை போடுவது " மனதில் தோன்றியது.

என் நீண்ட கால உறவை யாரோ பறிப்பது போல் ஒரு கலக்கம். பின்புறம் தொட்டியின் பக்கத்தில் சைக்கிளை நிறுத்தி கழுவினேன்.
.
.
.
முதன்முதலில் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை தோன்ற காரணமாக இருந்தவன் தமிழ்செல்வன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிளில் வந்த முதல் மாணவன் , என் வகுப்பு தோழன். பள்ளி முடிந்ததும் அவனுடைய சைக்கிளை சாந்தி, ஷாகுல் , ரம்யா எல்லாரும் ஓட்டுவாங்க, நான் மட்டும் சும்மா இருப்பேன். அப்போது தான் இந்த முழு ஆண்டு லீவ் ல சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னு நெனச்சேன்.

எல்லா விடுமுறைகளுக்கும் ஆயா வீட்டுக்கு வருவது வழக்கம், உறவினர்கள் எல்லாரும் பெரும்பாலும் வந்துவிடுவார்கள். ராஜி தான் சைக்கிள் ஓட்ட கற்றுதந்தான். என்னைவிட 3 மாதம் பெரியவன். தோட்டத்தில் போய் தான் கற்றுத்தந்தான் பெரும்பாலும் சைக்கிள் மற்றும் வண்டி ஓட்ட பழகுபவர்கள் பயன்படுத்தும் இடம். தோட்டத்து கேட் கிட்ட ஏத்தி விட்டன்னா சுடுகாடு வரை ஓட்டி கொண்டு போய் திரும்பவும் தள்ளி கொண்டு வருவேன் . தானாக ஏற தெரியாது, காமெடி ஆக இருக்கும். அப்புறம் தோட்டத்து பக்கம் வந்த அப்பா தான் ஏற கற்று தந்தார். பிறர் எனக்கு கற்றுதர முடியாத, எனக்கு கஷ்டமாக இருந்த பலவற்றை அப்பா தான் கற்றுத்தந்து இருக்கிறார். அப்பாவிடம் இருந்து நான் கற்று கொண்டது ஏராளம்.

நான் வளர வளர என் சைக்கிளும் வளர்ந்தது.

முதலில் குட்டி வாடகை சைக்கிள் பயிற்சிக்காக.
பின் லேடிபிர்ட் (lady bird) - என்னுடைய முதல் சைக்கிள் ஆறாவதில் முதல் மாமா வாங்கித்தந்தது.
லேடி பிர்ட் சைக்கிள் பத்தி நினைச்சாலே, ஏழாம் வகுப்பில் நடந்த குட்டி விபத்தும்,
சுடுகாட்டை கடந்து மேல்படப்பையில் இருந்து கீழ்படப்பை செல்லும் போது முருகா , முருகா என்று சொல்லிக்கொண்டே பயந்து, பயந்து சைக்கிள் ஓட்டுவதும் தான் நினைவிக்கு வரும். அந்த சைக்கில போகும் போது தான் அப்பா முதல் முறை வலியால் துடிச்சதை பார்த்தேன். என் வாழ்கையில் முதல் வலியை ஏற்படுத்திய மறக்க முடியாத தருணங்கள், வந்து போகும்.

பின் காஞ்சிபுரம்...
இங்கு வீட்டுக்கும் பள்ளிக்கும் 2 கி.மி . மெயின் ரோட் அதனால் யாராக இருந்தாலும் ஒரு வருடம் நடந்து தான் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது தாத்தாவின் அன்பு கட்டளை. ஒன்பதாம் வகுப்பு முழுவதும் சைக்கிள் இருந்தும் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலைமை .
வந்தாச்சி பத்தாவது, நான் லேடி பிர்ட் எடுத்தால் தம்பி சண்டைக்கு வந்தான், என்னை மாமா சைக்கிலில் போக சொல்லி பெரிய சண்டை. என்னெனில் அது ரொம்ப பழசு. அக்காவாச்சே விட்டுதந்துட்டேன்.

இப்ப B.S.A ... இந்த கிராமத்தில் ஒரு பழக்கம் மாடுகளை நீண்ட கயிறால் கம்பதிலோ, பெரிய செடியிலோ கட்டி மேயவிடுவர்கள். அது சரிnயா ரோட்டுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் இழுத்துக்கிட்டு நிக்கும். இதெலாம் எனக்கு அப்ப புதுசு. படப்பைல மாட்ட பார்ப்பதே அதிசியம்.
ஒரு முறை ஒரு கன்றுகுட்டி அப்படி நின்று கொண்டு இருந்தது, கயிறு தரையை தொட்டு கொண்டு தான் இருந்தது சரி அப்டியே ஓட்டிக்கொண்டு போகலாம்னு நெனைச்சி ஓட்டினேன். அது என்ன நினைத்தோ தெரியவில்லை, ஒரு டயர் அந்தப்பக்கம் போனதும், கயிறை இழுத்துகிச்சி. அவ்ளோதான் கீழ விழுந்துட்டேன்.
யாராவது பார்க்கிறார்களான்னு சுத்தி முத்தி பார்த்தேன். நல்ல வேலை யாரும் பாக்கல. எனக்கு அப்போது கோபம் எல்லாம் சைக்கிள் மீதும், கன்று குட்டி மீதும் தான். வீட்டில் சொல்லகூடாது சொன்னால் சைக்கிள் தர மாட்டார்கள் என்று முடிவு பண்ணி சைக்கிள் ஓட்டினேன்.

அப்புறம் பதினோராம் வகுப்பு, கொஞ்ச நாள்லே தமிழக அரசு தந்த சைக்கிள் தான் இப்ப என்னோட சைக்கிள். :-)

எல்லாரையும் விட சில சமயம் அதிகம் பேசியது அவளிடம் தான்.
உடம்பு சரி இல்லாத போதெல்லாம் நான் கொஞ்சம் மிதித்தால் போதும் அதிகதூரம் போவாள்.
ஒரு முறை கூட பின்னால் வைத்த புத்தக பையை, கிழே விழ விட்டதில்லை, பையையே கிழ விழ விடாதவள் என்னை எப்படி விழ வைப்பாள்.
ஆனால் பாவம் அவள், நான் மோசமாக பாடுவதையும், அமைதியாய் கேட்பாள்.
தேர்வுக்கு முன் படித்ததை எல்லாம் சைக்கிளில் போகும் போது மனதில் சொல்லி பார்த்துக்கொண்டு போவேன், தப்பா இருந்தாலும் கேட்பாள் அவள்.
நான் யாரெல்லாம் சைட் அடிச்சேன்ன்னு கூட அவளுக்கு தெரியும்.

பள்ளி காலம் முடிந்ததும், கல்லூரி சென்னையில் என்பதால் விடுதி.
அதனால் சைக்கிளை பயன்படுத்த வாய்ப்பே இல்லை.
விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது, தோட்டத்தையும், சுடுகாட்டையும் தாண்டி , ஏன் பாலாறு வரை கூட அவளுடன் போவேன்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவளை பற்றி...
.
.
.
கழுவிவிட்டு துடைக்கும் போது கண்ணில் பட்டது, நான் கனி என்று அவள் மீது
ஒட்டி இருந்தது...

5 comments:

  1. துடிசத்தை - துடித்ததை
    நெலமை நிலைமை
    சைக்கிலில் சைக்கிளில்
    சரிnயா ?
    என்னெனில் ஏனெனில்
    சொல்லகுடாது கூடாது
    பைய்யையே பையையே

    எழுத்துபிழைகள் அதிகம் இருக்கிறது, பதிவிடும்முன் குறைந்தது இரண்டுமுறையாவது படிங்க பிறகு பதிவுங்கள், போக போக சரியாகிவிடும், தொடர்ந்து எழுத முயலுங்கள், வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சைக்கிள் - சரி என்று தான் நினைக்கின்றேன் ...
    அடுத்த பதிவில் எழுத்து பிழைகள் இல்லாமல் பார்த்து கொள்கிறேன்...
    பிழைகளை சுட்டியமைக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. வித்தியாசமான பதிவு.

    நட்புணர்வை விரிக்கிறது.

    மேலே நண்பர் சொன்னது போல்

    பிலை இள்ளாமல் எலுத முயற்சி செய்யுங்கள்.

    நானும் அதைத்தான் பல நாட்களாக செய்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. அகல் விளக்கு-
    மிக்க நன்றி தங்கள் கருத்துகளுக்கு,
    கண்டிப்பாக முயற்சிக்கிறேன்...
    தொடர்ந்து படிக்கவும்...

    ReplyDelete
  5. அன்பின் கனிமொழி

    அசை போட்டு ஆனந்தித்து அழகாக எழுதப்பட்ட இடுகை - நல்வாழ்த்துகள் கனிமொழி

    நட்புடன் சீனா

    ReplyDelete