Sunday, November 1, 2009
உடன்பிறப்புகள்...
இந்த ஒரு வாரத்திற்குள் நான்கு முறை சென்னைக்கு செல்ல நேரிட்டது. பொதுவாகவே பயணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஒரு வார பயணத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது இதுதான்...
தனி மனித ஒழுக்கம் குறைந்து கொண்டே வருகிறது...
சுற்று சுவர், நடை பாதை, நெடுஞ்சாலை ஓரங்கள், குப்பை மேடுகள், கால் வைக்கவே முடியாத இடங்கள், பொதுவாக - பொது இடங்கள்... எதையுமே விட்டு வைப்பதில்லை என் உடன்பிறப்புகள்... புரிந்திருக்கும் என் நெஞ்ச எரிமலையில் என்ன கொதிக்கிறது என்று...
ஆம், கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பது தான்... இதுவும் ஒழுக்கமற்ற செயலே...
ஆட்டோ ஓட்டுனர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள்... யாராக இருந்தாலும் சரி, ஒரு ஓரமாக திரும்பி கொள்வது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 100 பேர் இருந்தாலும் சரி...
ஒரு துளி சிறுநீரில் எத்தனை லட்சம் பாக்டீரியா, வைரஸ் உள்ளது என்று தெரியுமா என் உடன் பிறப்புகளுக்கு???
இந்த ஒழுக்கமற்ற செயல்களை பார்க்கும் போதெல்லாம் ரத்தம் கொதிக்கும் எனக்கு... நானே என் மனதிடம் கேட்பேன் ஏன் கனி வர வர அம்பி மாதிரி யோசனை செய்கிறாய் என்று... என் மனம் பதில் உரைத்தது இல்லை.
ரொம்ப ஒழுங்கா இருக்கின்றவர்கள் கூட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது ஏனோ ஒழுக்கங்களை மறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே இருக்கின்ற நோய்களுக்கு பஞ்சம் இல்லை...
யோசிப்போம்...
மாசுபடுதல் பற்றி நிறைய படிப்போம், பேசுவோம், ஆனால் அது யாரோ எவரோ செய்வது என்று ஒரு எண்ணம் என் உடன்பிறப்புகளுக்கு...
என்னை பொறுத்தவரை ஒரு பயண சீட்டை ரோட்டில் போடுவது கூட மண்ணை மாசு படுத்தும் செயல் தான், அந்த சீட்டு மட்கும் வரை...
plastics -அதை பற்றி தனி பதிவே போடலாம்...
கோயம்பேடில் இருந்து திருவான்மியூர் சென்ற பேருந்தில்,
ஜன்னல் ஓர இருக்கை... பயணத்தில் எதிர் படும் ஒவ்வொன்றையும் கவனிப்பேன்... அப்படி வேடிக்கை பார்க்கும் போது ஒரு இளைஞன், நல்ல ஆடை, leather shoes, bag, mobile with headset ( மன்னிக்கவும் ) , பேருந்து நிறுத்தம் ஆகவே
கொஞ்ச நேரம் பேருந்து நின்றது, அவன் ஒரு தெருவில் இருந்து வருகின்றான் எதிரில் ஒரு குப்பைமேடு சாதரணமாக எச்சில் உமிழ்கிறான் இந்த உடன் பிறப்பு,
அந்த குப்பைகளை அல்லபோவதும் என் உடன்பிறப்புதான்...
யோசிப்போம்...
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இதையும் யோசிப்போம்...
Subscribe to:
Post Comments (Atom)
Interesting to read kani.. nice.. keep on sharing..
ReplyDeleteநல்லா இருக்கு, இன்னும் கொஞசம் விரிவாக எழுதிரிருக்கலாம், நேரம் இல்லையென்றால் இருக்கும்போது எழுதுங்க, கனி. வாழ்த்துகள்,
ReplyDeleteநல்ல பதிவுன்றத விட உபயோகமான பதிவு...
ReplyDeleteஅவசியம் யோசிக்க வேண்டிய விஷயம்.
தொடருங்கள்..........
அப்புறம் word verification வேண்டாம். தூக்கி விடுங்கள்.
யோசிக்க வேண்டிய விஷயம்
ReplyDeleteராமவர்ஷ்னி, வேலு (புலவன் புலிகேசி) இருவரின் வருகைக்கும் நன்றி... தொடர்ந்து தொடரவும்....
ReplyDeleteமுரளி - உண்மை தான் நண்பா, நேரமின்மை தான் காரணம்... உண்மையை சொல்லப்போனால் இந்த பதிவை இத்துடன் முடிக்க மனம் இல்லை. இன்னும் நிறைய இருக்கு, தொடர்ந்து எழுதுவேன் என் உடன் பிறப்புக்கள் திருந்தும் வரை...
ReplyDelete(அகல் விளக்கு) ராஜா - கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் நண்பா... :-)
ReplyDeleteword verification - தூக்கியாச்சி...