Friday, December 4, 2009

1 : 40

நேத்து அம்மா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 1 ரூபாய் ,

இன்னைக்கி அண்ணா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 40 ரூபாய் ,

ரெண்டுமே மண்ணுல தானுங்களே வெளையுது,

எதை ஊரவெச்சி, இடிச்சாலும் மாவுதானுன்களே வரும்,

ரெண்டுத்தளையும் ஒரே அளவு கார்போஹைட்ரடேட் தானுங்களே இருக்கு,

அப்புறம் ஏங்க இவ்வளவு விலை வித்தியாசம்?

எனக்கு புரியவில்லைங்க - இந்த 1 : 40 (ரேஷன் : மார்க்கெட்) கணக்கு ,

புரிஞ்சவுங்க சொல்லிதாங்க...

- நான் இல்லை ( என்னை போன்ற பலபேர் )



( ஒரு ரூபாயில் பசி ஆற்றமுடிகிறது,
ஆனால் நல்ல சாப்பாடு? )

12 comments:

  1. இதல்லாம் கேட்டால் விலைவாசி உயர்ந்த அளவு வருமானம் பெருகியிருக்குனு சப்பக்கட்டு கட்டுவாக

    அனால் அப்படி அல்ல

    ReplyDelete
  2. அதெல்லாம் அரசியல்....

    அரசியல்...

    ReplyDelete
  3. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்குற அரசாங்கத்தை பாராட்டுவதா? இல்லை ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்க வேண்டிய நிலைக்கு மனுசன கொண்டுவந்து நிறுத்தியதற்க்காக வருத்தப்படுவதா? :-(

    ReplyDelete
  4. விலைவாசியும் வயசு மாதிரி தான், ஏறத்தான் செய்யும், இறங்காது!

    ReplyDelete
  5. // ராஜவம்சம் said...

    இதல்லாம் கேட்டால் விலைவாசி உயர்ந்த அளவு வருமானம் பெருகியிருக்குனு சப்பக்கட்டு கட்டுவாக

    அனால் அப்படி அல்ல
    //
    பின்ன எப்டிங்க, அதை சொல்லுங்க .
    நன்றிங்க வந்ததுக்கு, தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  6. நாங்களும் பேசுவோம்ல அரசியல்.
    :-)


    நன்றி ஜெய்.

    ReplyDelete
  7. என்ன பண்ணலாம் நண்பா ?
    நன்றி முரளி.

    ReplyDelete
  8. கரெக்ட் வால்பையன்.

    நன்றிங்க...

    ReplyDelete
  9. உங்க பதிவை இப்பதான் படிக்க நேர்த்தது. வலைதளத்தின் பெயரே மிக அருமை. மிக அருமையா பதிவுகளை காண நேர்த்தது. படிக்க சிந்திக்க நல்ல விசயங்கள் வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  10. நல்லா கேட்ருக்கீங்க......ஆனா பதில் சொல்ல வேண்டிய இடத்துல உள்ளவங்கல்லாம் பாசுமதி அரிசி சோறு சாப்டறவங்க.....நம்ம பொழப்ப பத்தியோ அல்லது நம்ம சாப்பாடை பற்றியோ அக்கறை கிடையாது அவங்களுக்கு..........சலவை தாள் கவர் குடுத்தாதான் நாம மறக்காம அவங்களுக்கு ஜனநாயக கடமையை நாம நிறைவேற்றிட்ரோமே...........அப்புறம் அவங்கல்லாம் அப்டிதான் இருப்பாங்க...!

    ReplyDelete
  11. வாழ்க பணநாயகம்... வேற என்னத்த சொல்ல?

    ReplyDelete
  12. முதல் முறையாக உங்கள் வலைப்பதிவிற்கு வருகைதருகிறேன். பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் வயது தான் நம்பும் படியாக இல்லை.அல்லது இப்படியும் சொல்லலாம் உங்கள் அறிவு முதிர்ச்சி உங்கள் வயதை விட அதிகம். ம் அழகிய தமிழ் மகள்(உள்ளத்தால்)
    "முகங்கள் தேவையில்லை முகவரியும் தேவையில்லை
    அழகான நட்பின் முன்னே முக அழகிற்கு அர்த்தமில்லை
    தொலைவில் இருந்தாலும் துளி கூட மறந்ததில்லை...

    ReplyDelete