Tuesday, December 1, 2009

போரூரும் காக்கையும்...

நீங்கள், மதியம் ஒரு 2 மணிக்கு அவசரமாக வெளியூர் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் .
நல்ல பசி உங்களுக்கு.
பேருந்து நிலையத்தில் ஒரு biscuit packet வாங்கி கொள்கிறிர்கள்.
பேருந்தில் ஏறியவுடன் சாப்பிட்டுவிடீர்கள். காலியான அந்த biscuit cover-ஐ என்ன பண்ணுவிங்க?????

இது தான் என் கேள்வி.


ஜன்னல் வழியே தூக்கிபோடுவீர்கள் என்றால், கிழ்கண்ட நிலை உருவாக நீங்களும் ஒரு முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் ஊரின் பெயர் பலகை நம்மை வரவேற்கின்றதோ இல்லையோ, இந்த மட்காத plastic குப்பைகள் தான் நம்மை வரவேற்கும். அது பெரிய நகராட்சியாக இருந்தாலும் சரி, இல்லை சின்ன கிராமமாக இருந்தாலும் சரி. அந்தந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குப்பைகளின் அளவு இருக்கும்.

காலி மனைகளில், மின்சார கம்பத்தின் அருகில், கோவில்களின் அருகில், கடைதெருவில், மருத்துவமனைகளின் பக்கத்தில், எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் கழிவுகள்.

எல்லாமே use and throw தான்.
நாம் போடும் குப்பைகளின் நிலை பற்றி ஒரு கவலையும் இல்லை நமக்கு. தயவு செய்து கொஞ்சம் அவற்றின் நிலை பற்றி எண்ணிபாருங்கள்.

பஸ்ல வாங்கற டிக்கெட்-ல இருந்து, ATM bills, ice cream cover, cigarette cover, biscuit cover, chocolate cover (மன்னிக்கவும்) இவை எல்லாம் நாம் ஒருவர் மட்டும் தினசரி வெளியில் தூக்கிபோடும் குப்பைகள்.


( மூணாரில் எடுக்கப்பட்டது )


ஒருவரால் மட்டும் இவ்வளவு என்றால்?
யோசித்து பாருங்கள், நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் தினமும் எவ்வளவு குப்பைகள் பொறுப்பில்லாமல் மிக சாதாரணமாக வெளியில் தூக்கி எறியப்படுகின்றது என்று.

நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான இடம் போரூர் (சென்னை). ஒரு பிளாஸ்டிக் மலையே நம்மை வரவேற்கும். அதிலும் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கால் வைக்கவே முடியாத இடத்தில், அதாவது குப்பை மேட்டின் நடுவில் அங்கு மாட்டிறைச்சி விற்று கொண்டிருப்பார்கள். பேருந்தில் இருந்து பார்க்கவே சகிக்காது. நீங்கள் போரூர் வந்திருந்தால் தெரியும், அங்குள்ள குப்பைகளையும், காக்கைகளையும்.
அழகான இந்த பூமியை, சகிக்க முடியாத இடங்களாய் மாற்றியது யார்?

நாம்.
நாம்.
ஆறறிவு கொண்ட நாம் மட்டும் தான்.

இந்த குப்பைகளையும், இந்த இடங்களின் தலைஎழுத்தையும் நம்மால் மாற்றமுடியும். நம்மால் முடியாதது என்று உலகில் ஒன்றும் இல்லை.

பிறரை சொல்லி குற்றம் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்து உருவாகட்டும். நம் முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவோம்.

1. முறையான இடங்களில் குப்பைகளை போட கற்றுகொள்வோம்.

2. இனி ஒவ்வொரு முறை நீங்கள் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை போடும்போதும் சரியான இடத்தில் தான் போடுகிறோமா என்று ஒரு பொறி தட்டட்டும்.

3. உங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் குப்பைகளை எங்கு, எப்படி வெளியேற்றுகின்றிர்கள் என்பதை பாருங்கள்.

4. நீங்களோ அல்லது உங்கள் வீட்டாரோ திறந்த வெளியில் கொட்டினால் தயவு செய்து அந்த முறையை மாற்றவும்.

5. மட்கும் குப்பையை வீட்டின் வெளியில் ஒரு குழி தோன்றி அதில் கொட்டலாம். ( இப்போது என் வீட்டில் உள்ள மட்கும் கழிவு குழியில் ஒரு மாங்கன்று முளைத்துள்ளது :-) )

6. சாதாரண தினசரி காலண்டர் பேப்பர் முதல், plastic cover, அட்டைகள் எல்லாவற்றையும், வீட்டிலேயே ஒரு குப்பைத்தொட்டி ஏற்பாடு செய்து, அவற்றில் நிரப்பி, பின் முறையான வழிகளில் அப்புறபடுத்துங்கள்.

பிளாஸ்டிக் கழிவுகளை முறையாய் அப்புறபடுத்தும் வழிகளை வேறொரு பதிவில் பார்ப்போம்.

(சில நகராட்சிகளே சேகரிக்கும் குப்பைகளை, முறையான வழியில் அப்புறபடுத்தாதது வேதனைக்குரிய விஷயம்.)

சரி, இப்பொழுது முதலில் ஆரம்பித்த செய்திக்கு வருவோம். ஒருவேளை அந்த biscuit cover - இல் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மீதம் இருந்தால் அப்படியே மடித்து பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோகும் நாம், ஏன் காலியான கவரையும் பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோய் குப்பை தொட்டியில் போடகூடாது.
வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய தவறி தான் மிகப்பெரிய குப்பை மலைகளை உருவாக்கியுள்ளோம்.

கொஞ்சம் மண்ணையும் நேசிப்போம்,
தயவு செய்து கொஞ்சம் பிறர் மண்ணையும் நேசிப்போம்.


( சொல்லனும்னு தோணிச்சு சொல்லிவிட்டேன் , பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். சுற்றுச்சுழல் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னுடன்களாய் பகிர்ந்தால், பிறரும் பயன்பெறுவார்கள், மண்ணும் சுத்தமாகும் )
13 comments:

 1. தேவையான பதிவு.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. ரெம்ப தேவையான பதிவு .
  நாமும் நம்மால் ஆனதை செய்ய வேண்டும் சுற்றுப்புறம் சார்ந்த விசயங்களில் .

  இது தவிர பக்கத்துக்கு தெருக்கு பைக்ல போறது போன்ற நிறைய விசயங்களை நாம் தவிர்க்க வேண்டும்

  படங்கள் அருமையாக உண்மை நிலை கூறுகின்றன

  அன்புடன்
  மீன்துள்ளி செந்தில்

  ReplyDelete
 3. நல்லா இருக்குங்க கனி, என்னுடைய ட்ராஃப்ட்ல இதேபோல ஒரு பதிவு ரொம்ப நாளா தூங்கிட்டு இருக்கு, இன்னும் முடிக்கலை. நீங்க முந்திகிட்டிங்க..... :-)
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஆமா நீங்க என்ன பேனா உபயோகிக்கிறீர்கள்? உண்மையான பதில் தேவை.

  ReplyDelete
 5. நல்ல பதிவு..

  சொல்லப்போனால் அந்த 'ஆறறறிவு' சாட்டையடி போல சுர்ர்ர் என்று இருக்கிறது...

  ReplyDelete
 6. //
  ரெம்ப தேவையான பதிவு .
  நாமும் நம்மால் ஆனதை செய்ய வேண்டும் சுற்றுப்புறம் சார்ந்த விசயங்களில் .

  இது தவிர பக்கத்துக்கு தெருக்கு பைக்ல போறது போன்ற நிறைய விசயங்களை நாம் தவிர்க்க வேண்டும்
  //
  மிகவும் சரி செந்தில்.
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. நன்றி சுந்தரராஜன்.

  ReplyDelete
 8. நன்றி முரளி,
  :-) முந்திகொண்டேனா?
  காத்துகொண்டிருக்கிறேன் உங்கள் பதிவிற்காக நண்பா.
  //
  இங்க் பேனா தான். சில சமயம் மை பேனா.

  ReplyDelete
 9. அவசியம் அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய ஒரு விஷயத்தை எடுத்துறைத்தமைக்கு நன்றி கனிமொழி.. நீங்கள் சொன்ன விஷயம் மணிமொழி என்று கூட சொல்லலாம்.வாழ்த்துக்கள்!

  என் தரப்பில் சில யோசனைகள்..

  * அவசியம் ஏற்பட்டால் ஒழிய ATM ரசீது எடுக்க வேண்டாம்.
  * வெளியூரோ அல்லது வேறு எங்கும் வெளியிலோ செல்லும்போது தண்ணீர் பாட்டில் மற்றும் இதர பிளாஸ்டிக் பைகளை கண்ட இடத்தில வீசாமல் அதற்கான குப்பைத்தொட்டியில் போடுங்கள்
  * அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கோ காய்கறி கடைக்கோ தயவு செய்து உங்கள் வீட்டில் இருந்தே கூடை அல்லது துணி பை கொண்டு செல்லுங்கள்.. பிளாஸ்டிக் கவர் கடையில் கேட்டு வாங்காதிர்கள்.

  நட்பு
  http://manathilpattavai.blogspot.com

  ReplyDelete