ஏதோ ஒரு அடர்ந்த சோகம்,
கால்களை மடக்கி,
முகத்தை முட்டிக்குள் புதைத்து,
மீன் பிடித்து கொண்டிருந்தது...
ஒரு திசைமாறிய கப்பல்,
நினைவுகளின் ஊடே பயணித்தது...
நேற்று பார்த்த பிச்சைகாரின்யின் முகமும்,
அவளின் மூக்குத்தியும் ஏதோ சொல்ல விரும்பின...
குடிபோதையில் என் முதுகில் கை வைத்தவன்
ஏதோ சொல்ல நினைத்தான்...
அந்த ஊர் கோடியில் உள்ள வீட்டில் வாழும்
மனநலம் குன்றியவனும் ஏய் என்றான்...
திருநங்கை ஒருத்தி கைகளை தட்டி அழைத்து
கவனத்தை திருப்பினாள்...
எங்கும் நிற்காமல் பயணித்து கொண்டே இருந்தது
என் கப்பல்...
திடிரென,
காலத்தின் கடலில் பின்னோக்கி பயணித்தது...
வாழ்வின் ஒவ்வொரு சோக நினைவுகளிலும் நங்கூரம் இட்டது...
இன்று ஏன் இப்படிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள்,
என்றும் எண்ணினேன்...
இமைகளை திறக்க துளியும் விருப்பம் இன்றி
முட்டியே கதி என முகத்தை மறைத்து
கண்களை மேலும் இறுக்கி கொண்டேன்...
திடீர் என்று காலில் ஏதோ ஒன்று நக்குவது போல் ஒரு உணர்வு
மெதுவாய் தலை தூக்கி காலை பார்த்தேன்
கருப்பு காலினை அந்த எச்சில் மேலும் கருப்பாய் காட்டியது
மேலும் நிமிர்ந்தேன்
மெல்ல விளங்கியது
அது மாடிக்கு போகும் பாதையை
நான் மறித்து அமர்ந்துள்ளேன்,
விலகினேன்
அது படி ஏறவில்லை
என்னையே பார்த்துகொண்டிருந்தது
இதுவும் ஏதோ சொல்ல நினைத்தது...
யார் சொல்லுவதையும்
கேட்க காது கொடுக்காமல்
பயணித்துக்கொண்டே இருக்கிறது, என் கப்பல்
கரையை நோக்கி, சுயநலத்துடன்...
ம்ம்ம் அடுத்த ஃபார்முக்கு வந்துட்டிங்க போல, கலக்குங்க, வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை, ஏதோ சொல்லவருகிறது...
ReplyDeleteஏன் இந்த சிந்தனைகள் இந்த வயதில் என்ற சிந்தனை வருகிறது.
ReplyDelete