Tuesday, February 2, 2010

கோபம் என்னும் நெருப்பு...

அது தீக்காயம் தான்.
ஆனால் அந்த இடத்தில் எப்படி ?
வரைந்து வைத்தாற்போல் இருந்தது.
சினிமாவில், பாம்பு கடித்து வாயருகே நுரை வழிந்து நிற்பது போல், தான் பார்த்து இருக்கின்றேன்.
இது என்ன தீ வழிந்துள்ளது?
எப்படி நடந்து இருக்கும்?
சுவாமி சந்நிதானத்தில் எனக்கு எதிர் வரிசையில் நின்று தெய்வத்தை, வணங்கும் அந்த 5 வயது சிறுவனை பார்த்தவுடன் என்னுள் அதனை கேள்விகள்.
தெரியாமல் இன்று காலை நான் சூடான பாத்திரத்தில் கை வைத்திற்கே அலறிவிட்டேன்.
இந்த ஆழமான தீ விபத்து ஏற்பட்ட போது அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்.
மனம் கனத்தது.
நேரடியாக அவனிடமோ, அருகில் இருந்த அவன் தாயிடமோ கேட்க ஒரு மாதிரி இருந்தது.
கோவில் விட்டு வெளியில் வந்தவுடன், என் அம்மாவிடம் கேட்டேன். அந்த குட்டி பையனுக்கு வாய்க்கு பக்கத்துல என்னம்மா, எப்படி அடிபட்டுச்சினு உங்களுக்கு தெரியுமா என்று.
அந்த குட்டி பையனோட அம்மா தான் சூடு வெச்சிட்டாங்க, என்று என் அம்மாவிடம் வேலையாள் சொன்னதாக சொன்னங்க. பெரிய பிரச்சனையாகி, ஊரில் எல்லாருக்கும் தெரியும் போலும்...

இப்படியும் ஒரு தாயா??

பெற்ற பிள்ளைக்கு கன்னத்தில் சூடு வைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்க அந்த குட்டி பையன் என்ன செய்திருப்பான்?

எவ்ளளவு பெரிய தவறாகவே இருந்தாலும், குழந்தையை திருத்தும் வழியா இது?
யார்மீதோ உள்ள கோபத்தை குழந்தை மீது கொட்டியுள்ளர்கள்...
ச்சே, எப்படி எரிந்து இருக்கும் அவனுக்கு, நினைத்தாலே மனம் ஏதோ செய்கின்றது.
இப்படிப்பட்ட பெற்றோர்களை என்ன செய்வது??


9 comments:

  1. நல்லா எழுதி இருக்குது வரிகள் சிறந்த அர்த்தங்கள்

    ReplyDelete
  2. குழந்தைக்கு சூடு வைக்கிற பெற்றோர் நிறைய இருக்காங்க.

    ReplyDelete
  3. கஷ்டம்மா இருக்கு..,

    ReplyDelete
  4. தலைப்புகேற்ற கோபம்..

    ReplyDelete
  5. //கவிக்கிழவன் said...

    நல்லா எழுதி இருக்குது வரிகள் சிறந்த அர்த்தங்கள்
    //
    வாங்க கவிகிழவன்...

    :-)
    மிக்க நன்றி...

    ReplyDelete
  6. // தமிழ் உதயம் said...

    குழந்தைக்கு சூடு வைக்கிற பெற்றோர் நிறைய இருக்காங்க.
    //

    ஆமாம்... ஆனால் நான் முதன்முதலில் நேரில் பார்த்த காயம் இதுவே ...
    இதுவே கடைசியாகவும் இருக்கட்டும்...

    வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் உதயம்...

    ReplyDelete
  7. // பேநா மூடி said...

    கஷ்டம்மா இருக்கு..,
    //

    ம்ம்ம்...

    வருகைக்கு நன்றி ஆனந்த் ...

    ReplyDelete
  8. ஷங்கர்.. said...

    தலைப்புகேற்ற கோபம்..


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷங்கர்...

    ReplyDelete
  9. கனிமொழி உங்க எல்லா படைப்புகளையும் படித்தேன் ரொம்ப நேர்மையா இருக்கு அதனாலேயே ரொம்ப அழகாவும் இருக்கு .எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ..வாழ்த்துக்கள்

    ReplyDelete