Tuesday, March 23, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்...

தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் அகல்விளக்கு ஜெய்க்கு நன்றி...
தொடர்பதிவின் நிபந்தனைகள்

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக
இருக்கும்
,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

.....................................................................................................................................................
ஜெய் சொன்ன எல்லாரையும் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவர்களைத்தவிர
......................................................................................................................................................

1. N.K டீச்சர்

நா.கலாவல்லி, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை.ஒல்லியான உருவம், எப்போதும் அபூர்வா புடவை, எல்லாரையும் நல்லா மிரட்டுவாங்க, இவ்வளவுதான் தெரியும் இவர்களை பற்றி ஒன்பதாம் வகுப்பு வரை.

நான் பத்தாம் வகுப்பு ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன், அப்பாடா... இவங்க எங்க கிளாஸ் டீச்சர் இல்லை, வெறும் கணிதத்திற்கு மட்டும் தான், தப்பிச்சோம் என்று.
அவங்க வகுப்புக்கு வந்து பாடம் எடுக்க ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுது, அவங்களை பற்றி.
வெறும் கணிதத்திற்கு மட்டும் ஆசிரியை அல்ல, என் வாழ்க்கைக்கே ஆசிரியை என்று.
நம்பிக்கையின் உற்று அவங்க.
என் கையெழுத்தை மாற்றி என் தலையெழுத்தையே மாற்றியவர்கள். எல்லாத்தையும் 90 டிகிரில எழுத்து கனி, எந்த மொழியாக இருந்தாலும் சரி என்றார்கள், அப்ப மாத்தினது தான்.

கிளாஸ்ல, வில்மா ருடோல்ப் கதைல இருந்து மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடுறது வரைக்கும் எல்லாத்தையும் பேசுவாங்க.
எண்கணிதம் முதல் எய்ட்ஸ் வரைக்கும், வகுப்பில் சர்வ சாதாரணமா பேசுவாங்க.
எல்லாமே பிளான் பண்ணிதான் பண்ணுவாங்க.
பசங்களை மிரட்டி அழவெச்சிட்டு, சாக்லேட் தந்து காமெடி பண்ணுவாங்க.

இவளின் முந்தானை பிடித்து சுற்றி திரிந்த காலங்கள் என்றும் மறக்கவே முடியாதவை.

வீட்டில் உள்ள பல்வேறு காரணத்தினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த என்னை, படிப்பை தவிர வேறு எந்த விஷயத்திற்கும் கவனம் செலுத்த முடியாமல் மாற்றினாங்க.
கணித மன்றம் பற்றியும், ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் நாங்க வாங்கின பரிசும் பின்னாடி இருந்து வழிநடத்தின N.K டீச்சர் பற்றியும், அவங்களுடைய தன்னம்பிக்கை பற்றியும் ஒரு தனி பதிவே போடலாம். என்னோட சேர்த்து பொது தேர்வில் கணிதத்தில் ஏழுபேர் முழு மதிப்பெண், ஒரு கிராமத்துல இருக்கின்ற அரசு பள்ளிகூடத்தில் இதுவும் ஒரு சாதனையே. இன்னும் சொல்லிகிட்டே இருக்கலாம் எங்க டீச்சர் பற்றி.

இப்பவும் " மண்ட மேலையே தட்டு " என்று அவங்க அடிக்கடி சொல்லும் வாக்கியம் காதில் கேட்டுகொண்டே இருக்கும். :-)

2. லத்திக்கா சரண்...



இவங்கள நேரில் பார்த்ததில் இருந்து ரொம்ப பிடிச்சி போச்சு, என்ன.... ஒரு கம்பீரம்!!!
இவங்களுடைய நடையும், இன்னொரு போலீஸ் அதிகாரி கிட்ட பேசும் விதமும், ரொம்ப பிடிக்கும்.
அப்புறம் அவங்களுடைய ஹேர் கட்டிங்.






3. அன்னை தெரசா

தன்னிகரற்ற தொண்டு. ( வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன் )

4. வில்மா ருடால்ப்





நம்பிக்கையின் சிகரம்.








5. அருந்ததி ராய்




எழுத்திற்கு...
எழுத்திற்கு என்று மட்டும் சொல்ல முடியாது...
ஏதோ ஒன்னு என்னை ஈர்க்கும்...











6. ஸ்ரீ சரவணா ஸ்டோர்ஸ் ( காஞ்சிபுரம் )- கடையோட முதலாளி அம்மா

இவங்க பெயர் தெரியாது, ஆனால் அப்படி ஒரு அடக்கம், பொறுமை, பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவங்க பில் போடும் அழகையும், வேலை ஆட்களை வேலைவாங்கும் திறமையையும், வாடிக்கையாளர்களிடம் பேசும் கணிவையும்.
மேலாண்மைத் திறமைகளுக்கு இவங்க.

7. கல்பனா சாவ்லா

வானத்தில் பறக்கணும்னு ஆசை இருக்கின்ற பொண்ணுக்கு, அப்படி பறப்பவர்களையும், விண்வெளிக்கு போகின்றவர்களையும் எவ்ளோ....... பிடிக்கும்.
எல்லாரையும் பிடிக்கும்னாலும் கல்பனா சாவ்லா தான் ரொம்ப பிடிக்கும்........
( நாசா என்ற பேட்சுக்கு பதில் இஸ்ரோ என்று இருந்து இருக்கலாம்...
எதை சொல்வது, யாரை சொல்வது? )





8. பார்கா தத் ( Barkha Dutt )

இவங்க NDTV குரூப் எடிட்டர், இவங்களையும் ரொம்ப பிடிக்கும்.

26/11 நிகழ்வின்போது இவர்களை உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது ( அட, டிவில தாங்க ), அப்பொழுதில் இருந்து இவங்களை பிடிக்கும்.

இவங்க நேர்முகம் காணும் விதம் அழகு.

எனக்கு பத்திரிக்கை துறைக்கு போகணும்னு வேற ஒரு ஆசை. இவங்க எல்லாரையும் பேட்டி எடுக்கும் போதும், கவரேஜ் நியூஸ் தரும்போதும் பொறாமையா இருக்கும்.

சமீபத்தில் தான் தெரியும் இவங்களுக்கு 2004 ல் பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது என்று.



9. மேரி கியூரி


எனக்கு வேதியியல் ( Chemistry ) ரொம்ப ரொம்ப பிடிக்கும், ரேடியம், போலோனியும் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ஐசொடோப்கள் பற்றிய இவருடைய ஆராய்ச்சி மெய்சிலிர்க்கவைக்கும்.

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
பாரிஸ் பல்கலைகழகத்தின் முதல் பெண் விரிவுரையாளர், என பல பெருமைகள் இவரைச்சாரும்.

இவை அனைத்தையும் விட, ரேடியத்தின் அதிக கதிரியக்க தன்மையே அவரின் உயிரிழப்பிற்கும் காரணம் என்னும் செய்தியே, அவரை என் உள்ளத்தில் உட்கார வைத்துவிட்டது.
பதினோராம் வகுப்பில் இருந்து இவங்களை ரொம்ப பிடிச்சி போச்சு.


10 . ராஜி
முழு பெயர் இராஜேஸ்வரி.
எல்லாத்தையுமே வித்தியாசமா செய்யணும்னு யோசிகின்ற பொண்ணு இவ.
என்னோட தோழி.
இவ வித்தியாசமா யோசிக்கிறது மட்டும் இல்லாம, என்னையும் யோசிக்க வைப்பா.
பல்கலைவித்தகி.
நான் வாசித்த முதல் கவிதை அவள் தான்.
எங்கள் பள்ளியின் பூபந்து நடு ஆட்டக்காரி ( அதாங்க Ball Badminton center player ). வெறித்தனமா ஆடுவா.
பழசை எப்பவுமே மறக்க மாட்டா.
எவ்ளோ பெரிய கஷ்டமா இருந்தாலும், ஒரு புன்னகையோடு எதிர் கொள்ளும், அவளிடம் இருந்து நான் கற்றது, கற்க வேண்டியது ஏராளம்... ஏராளம்....

......................................................................................................................................................

ராஜி கிட்ட மட்டும் இருந்து இல்லை, மேலே சொன்ன மீதி ஒன்பது பேரிடம் இருந்தும் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
இன்னும் நிறைய பேர் இருக்காங்க அரசியல், வலைப்பூ பதிவர்கள், பொது வாழ்க்கை, மருத்துவம், சமையல் என பல பிரிவுகளில் பல பேரை பிடிக்கும். விதி முறையை மீற கூடாது இல்லையா...
நிறுத்திக்குவோம்... :-)

7 comments:

  1. Hi.. Me first.........

    உங்களுக்கு பிடித்த 10 பெண்கள் நல்ல தேர்வு.....

    கலக்குங்க........

    ReplyDelete
  2. மீ த செகண்டே..!!

    நல்ல தேர்வு, நல்ல பதிவும் கூட..!!

    வாழ்த்துக்கள் மேலும் தொடர்க.

    ReplyDelete
  3. அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி தோழி...

    அனைத்துத் தேர்வுகளும் மிக அருமை...

    ராஜி மற்றும் என்.கே. மறக்க முடியாத அறிமுகம்...

    :-)

    ReplyDelete
  4. All are good,especially my favourite icon Arunthathi roy.

    ReplyDelete
  5. இந்த பத்து பேரில் எனக்கு ரொம்ப பிடித்தவங்க மேரி கியூரி.இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார்.ஐந்தாம் குழந்தையாக மேரி கியூரி பிறந்த பின்பு பெற்றோர் இருவரும் தமது ஆசிரியத் தொழிலை இழந்தனர். பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை.1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். 1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.1906 இல் கணவரின் அகால மரணத்தின் பின்பு சார்போனில் கணவரின் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அங்கு கல்வி கற்பித்த முதலாவது பெண் எனும் பெருமையையும் பெற்றார்.1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.

    ReplyDelete
  6. சங்கவி,
    ரங்கன்,
    ஜெய்,
    ஜெரி ஈசானந்தன் ( மன்னிக்கவும் ஜெரி, என்னோட template அப்படி இருக்கு, ஆகையால் இதே பக்கத்தில் பின்னூட்டம் இடுமாறு செய்துள்ளேன்... )
    பிரின்ஸ்...

    அனைவருக்கும் நன்றி...
    :-)

    ReplyDelete
  7. உன் மீது எனக்கு கோபம்..
    உனக்கு பிடித்த பத்து பெண்களில் நாங்கள் இல்லை என்று..!!!
    இவர்கள் உன்னை மிகவும் கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
    நிச்சயமாக எங்களை போன்று
    உன் மனதிற்கு நெருக்கமானவர்கள் இல்லை...!!!
    miss u badly டி மக்கா..!!!

    ReplyDelete