Sunday, March 21, 2010

முதல் ஓவியம்

















இது என் முதல் ஓவியம்,
இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வரைந்து இருப்பேன்,
எங்கு மட்கியதோ அந்த காகிதம்...
ஆனால் ஓவியம் மட்டும்,
நினைவுகளின் அறைகளில் நீங்காமல் உள்ளது...

ஒரு வீடு,
திறந்த கதவு,
வீட்டின் பக்கத்தில் ஒற்றை தென்னை மரம்,
வீட்டிற்கு போக ஒரு பாதை,
மேலே சூரியன்,
கொஞ்சம் மேகங்கள்,
இரண்டே இரண்டு பறவைகள்...

இது தான் அடிப்படை,
எனக்கு மட்டும் அல்ல,
பல பேரின் முதல் ஓவியம் இது தான்.

வகுப்புகள் மேலே போக போக,
ஒரு சில பாகங்கள் கூடின,

வீட்டின் முன் ஒரு கோலம்,
பக்கத்தில் ஒரு வைக்கோற்போர்,
மாட்டு வண்டி,
சைக்கிளில் போகும் சிறுவனும்,
அங்கம் ஆகினர்...

ஆறாம் வகுப்பில்,
இந்த ஓவியம் ஒரு வட்ட வடிவம் ஆனது,
வீடு மறைந்து பூங்காவானது,
பாதை மறைந்து ஓடை ஆனது,
மாட்டு வண்டிக்காரர், படகோட்டியானார்...

மேல்நிலைவகுப்புகளில்,
மகாபலிபுரம்,
தாஜ்மஹால்,
சுற்றுசூழல்,
சுனாமி,
ஒற்றுமை,
உலக அமைதி,
புவி வெப்பமயமாதல்,
புதுபிக்கத்தக்க எரிசக்தி,
என கொடுக்கப்பட தலைப்புகளில் வடிவம் மாறியது
என் முதல் ஓவியம்.

இதுவரை எத்தனை ஓவியங்கள் வரைந்து இருப்பேனோ தெரியவில்லை,
அனைத்திற்கும் தாய்,
இந்த முதல் ஓவியம் மட்டுமே...

ஏனோ, பக்கத்தில் கட்டிகொண்டிருக்கும்
இந்த வீட்டை பார்க்கையில்,
நினைவுகளின் கடைசி அறையில் இருக்கும்
என் முதல் ஓவியம்
மேல் அறைக்கு வந்துவிடும்.



12 comments:

  1. சூப்பரு..!! அதும் முதல் படத்துக்கும் கடைசி படத்துக்கும் நல்ல மேட்ச் ஆகுது!!

    ReplyDelete
  2. களங்கமற்ற குழந்தையின் எளிமைதான் அந்த ஓவியத்தின் அடிநாதம்.வளர வளர ஒவ்வொன்றாய்த் தொலைத்து இறுதியில் முழுமையாய் இழக்கிறோம் நம் ஓவியத்தை-அதன் மொழியை.அற்புதம் கனிமொழி.

    ReplyDelete
  3. நினைவுகளின் பதிவுகள் தான் ஓவியங்கள். கனவுகளுக்கு உயிர் கொடுத்தால் அதன் பெயர் தான் கலை. அது பேச்சாய்,எழுத்தாய்,ஓவியமாய்,நடனமாய்,இசையாய் உயிர் பெறுகிறது.ஓவியங்கள் பெரும்பாலும் எதிர்காலத்திற்கான தகவல்களாகவும் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளன. பல புதிய கண்டுபிடிப்புகளின் முன்னோடி இந்த ஓவியங்களே. உதரணமாக டா வின்சி ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். (பதிவு பயனுள்ளதாய் உள்ளது தொடரட்டும் உமது பணி).

    ReplyDelete
  4. யதார்த்தம் பொதிந்துள்ள வரிகள்,ரசித்தேன்..

    ReplyDelete
  5. இரண்டாவது படிக்கறதுக்கு முன்னால வரைஞ்ச படம் ஏதாவது இருக்கா?

    எழும்பூர் மியூசியத்துக்கு தேவைப்படுது.
    அதுக்குதான் கேக்கறேன்.

    :)

    ReplyDelete
  6. // சுந்தர்ஜி said...

    களங்கமற்ற குழந்தையின் எளிமைதான் அந்த ஓவியத்தின் அடிநாதம்.வளர வளர ஒவ்வொன்றாய்த் தொலைத்து இறுதியில் முழுமையாய் இழக்கிறோம் நம் ஓவியத்தை-அதன் மொழியை.அற்புதம் கனிமொழி.//

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சுந்தர்ஜி...
    மிக்க நன்றி...

    ReplyDelete
  7. @ Prince

    எவ்ளோ பெரிய பின்னூட்டம், டாவின்சி பற்றி நிறைய தகவல் சொல்லி இருக்கீங்க...
    நன்றி பிரின்ஸ்...

    ReplyDelete
  8. // அகநாழிகை said...

    இரண்டாவது படிக்கறதுக்கு முன்னால வரைஞ்ச படம் ஏதாவது இருக்கா?

    எழும்பூர் மியூசியத்துக்கு தேவைப்படுது.
    அதுக்குதான் கேக்கறேன்.

    :)
    //

    :-)
    தேடி பார்க்கின்றேன் அகநாழிகை....
    வருகைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. அழகான ஓவியம். அந்த தளிர் பருவத்தில் எடு செய்யினும் அழகே அல்லவா. இன்றைய தினம் வரைந்த ஓவியம் அதை விட நேர்த்தியாய் இருக்கலாம் தான்.எனினும் இவை சிறக்க வேண்டி உத்திகளும் பாசாங்குகளும் வண்ணத்தொடு கலந்து வரைந்தவை. அந்த சின்ன விரல்கள் வரைந்தவையோ நிர்மலமானவை...தாயன்பைப் போல.. வாழ்த்துக்கள்
    மோகன்ஜி.ஹைதராபாத்

    ReplyDelete
  10. // மோகன்ஜி said...
    தாயன்பைப் போல..
    //
    மிக்க நன்றிங்க, தங்களின் முதல் வருகைக்கு........

    ReplyDelete