Wednesday, August 11, 2010

அளவுக்கு மீறின அன்பினால்...

பேருந்தில் , "நேத்து காலேஜிக்கு போன பொண்ணு வீட்டுக்கு வரலமா.." என ஒரு தாய் அடி வயிற்றிலிருந்து கதறுகிறாள். எவ்ளோ வேதனை இருந்தா யாருனே தெரியாத என்கிட்ட அழுது இருப்பாங்க அந்த அம்மா... என்ன சொல்லி, ஆறுதல் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

இதேபோல் ஒரு முறை, என் தோழி 'ஜோ'வின், பள்ளித் தோழியின் தாயிடம் இருந்தது அழைப்பு வந்தது. அது சமயம் நாங்கள் இருவரும் ஒரே ரூமில் தங்கி இருந்ததால், அவள் என்னிடம் பகிர்ந்து கொண்டாள். விஷயம் இது தான் " நேத்து காலைல எப்பயும் போல வாக்கிங் போன பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலையாம் கனி, ஆனா இன்னைக்கு நான் பத்ரமா இருக்கேன் தேடாதிங்கனு கால் பண்ணி சொல்லி இருக்கா, பாவம் அவங்க அம்மா என் கிட்ட ஏதாவது சொன்னாலான்னு கேக்றாங்க கனி, நான் அவ கிட்ட பேசியே 2 மாசமாகுது".....
என்ன சொல்வது, என்று தெரியாமல் அன்றும் விழித்தோம்.

இது போல் ஒரு பெண் காணாமல் போனால் என்னனு நினைப்பது.. ஆயிரம் கேள்விகள் எதிர்படும் இல்லையா... கடத்தல், விபத்து, காதல், வேறு சில வீட்டு பிரச்சனை என்று. அக்கம்பக்கத்தார் கிட்ட கூட சொல்ல தயக்கபட்டாங்க அந்த பெற்றோர். போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவும் யோசிச்சு, அதனால் பொண்ணோட எதிர்காலம் பாதிக்குமோ என்று அதுக்கும் தயக்கப்பட்டு, பிறகு நண்பர்கள் எடுத்து சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணினாங்க...

பல்வேறு சிரமங்களையும், கண்ணீரையும் தாண்டி அவளை இரண்டு வாரங்கள் கழித்து தென்காசியில் காணாமல் போனவளை சென்னையில் கண்டுபிடித்தனர்...
வெளிய இருந்தது பார்க்கும் போது எல்லாம் ஒரு செய்தியாக மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு நாளும் அவங்க அம்மா, அப்பா பட்ட கஷ்டம் இருக்கே...
அவள் வீட்டை விட்டு போக முக்கிய காரணம், அம்மா, அப்பாவின் சந்தேகங்களும், ஏச்சுகளும் தான்.

அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும் இல்லையா...??

புரிதலின்மை...
புரிதல், இதுல பசங்களும் தன்னுடைய எண்ணங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக்கணும், பெற்றோரும் பிள்ளைங்க கிட்ட அவங்களோட எண்ணங்களை பகிர்ந்துக்கணும். சின்ன வசயுல உன்னோட கிளாஸ்ல படிக்கரவங்க பெயரையெல்லாம் சொல்லுன்னு ஆசையா கேட்கிற பெற்றோர். பிள்ளைங்க வளர வளர நண்பர்கள் பத்தியோ, தோழிகள் பத்தியோ கேட்டு தெரிஞ்சுகறது இல்லையோன்னு ஒரு எண்ணம் எனக்கு.

மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்... (நம்ம பிள்ளைங்களயாச்சு மனம் விட்டு பேசிபழக வளக்கணும்ப்பா)

பெற்றோரும் ஒன்னு புரிஞ்சிக்கணும், ஒரு வயசு வரைக்கும் தான் நீங்க எங்களை வளக்கரிங்க, அதுக்கு அப்புறம் தோழமையும், புத்தகங்களும், மீடியாவும் தான் அந்த வேலைய செய்யுது.

ஒருவன் ஒரு இடத்தில் இருந்தது ஓட விரும்புகிறான் என்றால் அவனுக்கோ அல்லது அவளுக்கோ எவ்ளோ பிரஷர் இருந்தது இருக்கும் என்பதையும் புரிஞ்சிக்கணும்.

"காதலை மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறான் ஒருவன், காதலால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என சொல்கிறது குடும்பம்.. மீறி, காதலோடு சேர்ந்தால் இதுநாள் வரை கிடைத்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அன்பை இழப்பேன். இல்லையேல் குடும்பமே திரண்டு வந்து பழிதீர்க்கும். பயந்து குடும்பத்தார்க்கு தலையாட்டினால், அன்புக் காதலை இழப்பேன்.."
எல்லாத்துக்கும் ஒரு தீர்வு, பொறுமை, பொறுமையாய்... உறுதியாய்... இருக்கும் போது உண்மையான அன்பு புரியும். காலம் புரியவைக்கும்.

இது காதலுக்கு மட்டும் இல்லை. எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் பொருந்தும். ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன். ஏதாவது ஒரு வகையில் இந்த பதிவு உதவும் என்ற நம்பிக்கையில்... :)
நம்மக்கென இருப்பது ஒரு life.. அதை எவ்ளோ அழகா ஆக்க முடியுமோ, அவ்ளோ அழகா மாற்றுவோம்......

10 comments:

 1. ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க..... :)

  ReplyDelete
 2. ரொம்ப பொறுப்பா பெரிய மனுஷித்தனத்தோட இருக்கு பதிவு... வாழ்த்துக்கள், கனிமொழி.

  யாருக்கவாது உதவட்டும் என்கிற அக்கறை வளரட்டும்

  வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது....

  ReplyDelete
 3. வளர்ச்சியும், பொறுப்புணர்வும் நல்லாவே தெரிகிறது உங்கள் பதிவில்.

  வாழ்த்துக்கள்!! உங்கள் முற்போக்கு சிந்தனைக்கு!!

  பெற்றோர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.

  உண்மையாய், நேர்மையாய் தெளிவாய் இருப்பதில் தான் உறவின் பலமே இருக்கிறது என்பதை நன்கு புரிந்துகொண்ட உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள்!!

  நல்ல பதிவுன்னு சொல்றதை விட.. நல்ல பகிர்வு!!

  ReplyDelete
 4. @ அகல்விளக்கு

  நன்றி ஜெய்.. :)

  ReplyDelete
 5. @ முரளிகுமார் பத்மநாபன்

  //ரொம்ப பொறுப்பா பெரிய மனுஷித்தனத்தோட இருக்கு பதிவு... //

  :))))))

  ReplyDelete
 6. @ ரங்கா

  நன்றி ரங்கா.. :)

  ReplyDelete
 7. //மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்... //

  சரியான தீர்வு இது தான்....

  ReplyDelete
 8. மிக நல்ல பதிவு!
  நன்றிகளும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 9. இதுல பசங்களும் தன்னுடைய எண்ணங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக்கணும், பெற்றோரும் பிள்ளைங்க கிட்ட அவங்களோட எண்ணங்களை பகிர்ந்துக்கணும். சின்ன வசயுல உன்னோட கிளாஸ்ல படிக்கரவங்க பெயரையெல்லாம் சொல்லுன்னு ஆசையா கேட்கிற பெற்றோர். பிள்ளைங்க வளர வளர நண்பர்கள் பத்தியோ, தோழிகள் பத்தியோ கேட்டு தெரிஞ்சுகறது இல்லையோன்னு ஒரு எண்ணம் எனக்கு.

  bang on head truth.. well depicted kani...
  very mature thinking... great work.. :)

  ReplyDelete