
இருள் வீசும் இவ்வேளையில், இல்லாத உன் கைகளை, பிடித்து நடப்பது பிடித்திருக்கிறது...
கடிகாரத்தின் சப்தம் கூட அச்சமூட்டும் இவ்வேளையில், நான் இருக்கிறேன் எனும் வாயற்ற நின் குரல் நம்பிக்கை ஊட்டுகிறது ...
கலங்கிய கண்களோடும், அடைக்கும் தொண்டையோடும், நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு
கணமும் நின் தொடுதலை உணர முடிகிறது..
நீ இல்லாமையை உணரும் போதெல்லாம், உருவம் அற்ற நீ, அருகில் அமர்ந்து தோளில் கை போடுகிறாய்...
இரவில், தனிமையில், இசையில் லயித்து இருக்கும் போது முழுவதுமாய் உணர்கிறேன் உன்னை...
நின் பெயர் தான் என்னவோ?
அன்பா?
நம்பிக்கையா?
கடவுளா?
தோழமையா?
தனிமையா?
அல்லது
ஒன்றும் இல்லாத ஒன்றா???
அருமையான கவிதை..!!
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சி..அது அன்பு..அன்பு..அன்பு!!
பதில் கிடைத்துவிட்டதா?
ஆயிரம் பொன் எனக்குதானே?
அற்புதமான கவிதை...
ReplyDeleteமிகப்பிடித்திருக்கிறது...
நின் பெயர் தான் "கவிதை"
ReplyDeleteரசித்தேன் கனிமொழி.
ReplyDeleteஅட... நல்லாயிருக்கே
ReplyDeleteபடம் கூடுதல் அழகு
கவிதையுமா! கலக்குறே கனி! பிரமாதம்...
ReplyDeleteசில நேரம் பெயர் தெரியாதவை(புரியாதவை) கூட ரசனையாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஅழகான கவிதை, வாழ்த்துக்கள்!
கவிதை நல்லா இருக்கு...
ReplyDeleteYaaruppaa....??? :P
ReplyDeleteம்ம்ம்...
ReplyDeleteநல்லா இருக்கு...!
ReplyDeleteநல்ல கவிதை..!
@@@@ரங்கன்
ReplyDeleteஅகல்விளக்கு
ஜெரி ஈசானந்தன்.
ஈரோடு கதிர்
ப்ரின்ஸ்
Priya
Sriakila
Sivaji Sankar
அஹமது இர்ஷாத்
லெமூரியன்...
--- நன்றி :)))))