Saturday, October 16, 2010

விழுங்கிவிட்ட வார்த்தைகள்


என்ன இருக்கு?
என்ன இருக்கா? இருங்க வரேன்..
ம்ம்ம்..
இந்தாங்க மெனு கார்டு...
........
wheat தோசை 1, மல்லி ஊத்தப்பம் 1, அதுக்கு முன்ன veg சூப் 1/2
அஆங்... இதெல்லாம் இருக்கு, ஆனா தர முடியாது....
ஏன்???!!
கூட்டமா இருக்குல...
( இந்த அசிங்கம் தேவையா மச்சி )


சனிக்கிழமை நைட்டு முட்டி மோதி ஹோட்டல் சீட் புடிச்சா, இப்படி சொல்லிடாரு தலைவரு..
வாய் வரைக்கும் வந்துரும் 'எதுக்குயா ஹோட்டல் நடத்துரிங்கன்னு' ....
ச்சீ... இவன திட்டி என்ன பண்ணபோறோம் என்று, விழுங்கி விட்ட வார்த்தைகள் ஏராளம்...

11 comments:

  1. hahahahahahahahhahahahahahahahahahahahahahaha!!!!

    ReplyDelete
  2. :( :( :(
    என்ன கொடுமை இது...!
    அப்பறம் என்னதான் தருவாங்களாம்????
    இட்லி தோசை???

    சரி அப்புறம் என்னாச்சு??? சாப்பாடு கிடைச்சுத???? :(

    ReplyDelete
  3. விழுங்கின வார்த்தைகள் பசியை இன்னும் அதிகமாக்கியிருக்குமே... :)

    ReplyDelete
  4. nice.
    கடைசியில் சாப்டீங்களா இல்லீயா?

    ReplyDelete
  5. மிக சரி பல இடங்களில் இப்படி விழுங்கி விட்ட வார்த்தைகள் ஏராளம்

    ReplyDelete
  6. //wheat தோசை//

    ஒருவாட்டி நானும் என் நண்பரும் ஒரு மெஸ்ஸில் சாப்ட போனோம். அங்க வீட்டு தோசை கிடைக்கும். ஹோட்டல் தோசை மாதிரி மெல்லிசா பெருசா போடாம வீட்ல செய்ற மாதிரி செஞ்சித் தருவாங்க. நான் என் நண்பர்கிட்ட வீட்டு தோசை சொல்லவான்னு கேட்டேன். ஓ.. அதெல்லாம் கிடைக்குமா இங்க, சொல்லுன்னு சொல்லிட்டார். நானும் ஆர்டர் பண்ணிட்டேன். தோசை வந்ததும் கடுப்பாய்ட்டார். டேய், நான் வீட் தோசை தானே சொன்னேன் என்றார். நான் வீட்டு தோசை வேனுமான்னு தானே கேட்டேன் என்றதும் செம டென்ஷன் ஆய்ட்டார். :))

    ReplyDelete
  7. "உதிர்ந்த மலர்கள்... பறிக்கப்பட்ட மலர்களை விட அழகானவை"
    இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஹோட்ட‌லில் சாப்பிடுவ‌தை விட‌ ப‌சியோடிருப்ப‌தே மேல்னு
    வ‌ந்திட்டிங்க‌, அப்ப‌டித்தானே?

    ReplyDelete
  8. தீபத் திருநாள் வாழ்த்துக்கள் கனிமொழி.

    ReplyDelete