Saturday, November 14, 2009

ஏன் பெண்ணாய் பிறந்தேன்?



நகரவும் வழியில்லை புறநகர பேருந்துகளில்
நிற்பதில் நான் மட்டும் பெண்
உரசிக்கொண்டே இருக்கின்றான் ஒருவன்
பட்டாம்பூச்சி மீண்டும் புழுவானது
இன்னும் என்னால் நகர முடியாது என்கிறது கடைசி இருக்கை
திரும்பி பார்க்கவும் வழி இல்லை
பாவம் நிற்க இடம் இல்லை போலும், என்று நினைத்து கொண்டேன்
அவன் கீழே இறங்கியவுடன், நடத்துனர் கேவலமாக திட்டினார் அவனை
அப்போதுதான் உணர்ந்தேன் அந்த ஈன பிறவியை
"கன்னத்திலே ஒண்ணு விட கூடாதம்மா " - நடத்துனர்
என்ன செய்வேன் நான்
நடப்பது தவறு என்று கூட நினைக்காதவள்

எது எப்படி இருப்பினும் அவனை ஈர்த்தது என் வெற்று உடல்
எரித்துவிட்டேன் என் உடலை தீயில்
இறந்துவிட்டேன் சில நிமிடங்கள்
ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற கேள்வியுடன்,
என் பிணத்தின் முன் அழுதது வானம் வெளியில்...

எந்த நேரத்தில் சொன்னானோ தெரியவில்லை, பாரதி-
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா...





( சில நேரங்களில் பேருந்துகளில் பெண்கள், பிணங்களாய் பயணிப்பதை எடுத்துரைக்க )

13 comments:

  1. //எந்த நேரத்தில் சொன்னானோ தெரியவில்லை, பாரதி-
    மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா...//

    பெண்களுக்கு பகுத்தறியும் திறன் வேண்டும். பெண் என்பவள் அடிமையாய் இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இக்காலப் பெண்கள் இது போன்ற செயல்களை கண்டு அஞ்சுவதில்லை என்பது என் கருத்து.

    நல்ல சிந்தனை பதிவு. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பெண் என்பவள் இது போன்ற செயல்களின் போது பெருங்கோபம் கொண்டவளாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
  3. //பெண் என்பவள் இது போன்ற செயல்களின் போது பெருங்கோபம் கொண்டவளாக இருக்க வேண்டும்...//

    அவர் சொல்வது உண்மைதான்

    ReplyDelete
  4. உங்கள் கவிதைகள் எதார்த்த உண்மைகளை பேசுகின்றன. நிறைய எழுதுங்கள்!

    இந்நேரங்களில் இயலாமையை நினைப்பதைவிட இயன்றவரை தண்டியுங்கள்..

    ReplyDelete
  5. எரித்துவிட்டேன் என் உடலை.தீயில். இறந்துவிட்டேன் சில நிமிடன்கள்.. ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்றகேள்வியுடன், என் பிணத்தின் முன் அழுத்து வானம்....(சில நேரங்களில், பெண்கள் பிணங்களாய் பயணிப்பாதை எடுத்த்டுரைகக்க்,....குட்டி... என் செல்லம் ....பெண்களின் துயரத்தை இதைவிடவும் யாராலும் அழகாகச் சொல்ல முடியாது. அழுதுவிட்டேன்...... விகடனுக்கு அனுப்பு. என் மகணும் பொறியியல் இறுதிவருடம்தான் படிக்கிறான்.கண்டிப்பாக நீ நன்றாக வருவாய்.

    ReplyDelete
  6. //பட்டாம்பூச்சி மீண்டும் புழுவானது//

    உங்களுடய நிலையை ஒரே வரியில் சொல்லிட்டிங்க!

    கவலைப்படாதிங்க!
    அனைத்திற்கும் ஒரு மாற்றம் வரும், அது உங்களிடமிருந்து கூட ஆரம்பிக்கலாம்!

    ReplyDelete
  7. பெண்களை பற்றிய புலவரின் கருத்து முற்றிலும் உண்மை...
    பெருங்கோபம், வசவு, சண்டை, தண்டனை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்,
    இப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் இந்தமாதிரி கேள்விகள் தோன்றி பின் மறையும்...


    எங்களை பற்றிய உங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி புலவரே...

    ReplyDelete
  8. அகல் விளக்கு, நட்பு, வாத்துக்கோழி, வால்பையன்
    ---
    தங்கள் வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  9. கனிமொழி, அருமையான வளர்ச்சி உங்களிடம். இந்த இடம் நிச்சயம் உங்கள் எதிர்ப்பை காட்டவேண்டிய இடம். ம்ம்ம் .... ஊதி எரியவைக்கும் உதடாக இரு.

    ReplyDelete
  10. காத்திருக்கும் வரை
    நம் பெயர்
    காற்றேன்றே இருக்கட்டும்.
    புறப்பட்டுவிட்டால்
    புயலென்று
    புரிய வைப்போம்.
    ** மு.மேத்தா, மகளே.

    ReplyDelete
  11. நன்றி ராஜாராம்...
    நீங்க 'மகளே', என்று விளித்து உள்ளது எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது ஐயா...

    ReplyDelete
  12. "கன்னத்திலே ஒண்ணு விட கூடாதம்மா "//

    நீங்க பண்ணியிருக்கணும்.

    ReplyDelete