Saturday, February 20, 2010

தனிமை - நான் - இரவு




மணி இரவு 9 ...
"எங்க போற?" - அம்மா.
"சும்மா வெளிய நடந்துட்டு வரேம்மா..." - நான்

இரவில் வெளியில் நடப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்

வளர்பிறை நிலவு
குளிர் காற்று
பக்கத்து ஊரின் நிலா
" கனி... உள்ள வா... "
இரவில் மாமரமும் அதன் பூவும்
தவளையின் சப்தம்
அங்கங்கே குதித்து ஓடும் குட்டி தவளைகள்
சுடுகாட்டின் மின்விளக்கு
இருள்
ஆள் நடமாட்டமே இல்லாத தெரு
பவழ மல்லியின் வாசம்
என் கொலுசு சப்தம்
" கனி... சொல்லிகிட்டே இருக்கேன்..."
நிலவின் வெளிச்சத்தில் தெரியும் தென்னைமரம்
காற்றின் போக்கிற்கு ஏற்றவாறு அசையும் கீற்று
என்னுடனே இங்கும் அங்கும் நடந்து வரும் வீட்டு நாய்குட்டி
வெளிச்சம் இல்லாத இடங்களில் 'U turn' அடிக்கும் என் பயம்
ஒழுகிக்கொண்டே இருக்கும் தெரு குழாய்
சிமெண்ட் சாலையின் விரிசல்
( வெளியில் வந்து, இரு புருவங்களையும் தூக்கியபடி )
" கனி... இப்ப நீ, உள்ள வரல... "
"வந்துட்டேன் அம்மா... "
உள்ளே போனதும்
"நடக்கணும்னா ஹால்-ல நடையேன்..."
"?!?!?!?!?!"

13 comments:

  1. இந்த உரைவீச்சு நடையும் .... காட்சியின் ஓட்டமும் நல்லயிருக்குங்க.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா, நல்லா இருக்கு போங்க.
    இந்த மாதிரி சமய்த்துல அம்மாவையும் கூட கூப்பிட்டுகிட்டு இதையெல்லாம் அவஙகிட்டயும் சொல்லிகிட்டே வாக்கிங் போக முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  3. @ சி. கருணாகரசு

    நன்றி..

    ReplyDelete
  4. @ முரளிகுமார் பத்மநாபன்,

    நல்ல ஐடியா தான் ஆனால், ஒத்து வராது... :-)

    ReplyDelete
  5. @ சென்ஷி,

    நன்றி சென்ஷி..

    ReplyDelete
  6. \\சுடுகாட்டின் மின்விளக்கு
    இருள்
    ஆள் நடமாட்டமே இல்லாத தெரு
    பவழ மல்லியின் வாசம்
    என் கொலுசு சப்தம்\\*
    இந்த வரிகளை மட்டும் படித்தால் மோகினியோ என எண்ண தோனுகிறது.. ஹி ஹி ஹி .......... நல்ல கவிதை நடை

    ReplyDelete
  7. நானும் இப்புடி தான் நடப்பேன்.., ஆனா யாரும் கூப்பிடமாட்டாங்க

    ReplyDelete
  8. @ PrinceR5

    இதே டவுட் தான் எனக்கும்...
    :-)
    நன்றி பிரின்ஸ்.

    ReplyDelete
  9. @ பேநா மூடி

    mmm.. Enjoy...
    :-)

    ReplyDelete
  10. \\சுடுகாட்டின் மின்விளக்கு
    இருள்
    ஆள் நடமாட்டமே இல்லாத தெரு
    பவழ மல்லியின் வாசம்
    என் கொலுசு சப்தம்\\*
    அப்படின்னா கொலுசு சப்தம் யாருடையதோ அவங்க தானே மோகினி

    ReplyDelete
  11. பிரம்மாதமாக சொல்லி இருக்கிங்க. நல்ல உணர்வுகள். நானும் தான் பார்த்திருக்கேன். படிக்கும்போது புதுசா தெரியுது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete