Monday, April 26, 2010

நாமும், அணுக்கருவும்...

ஏப்ரல் 26,
Chernobyl Day,

சிலருக்கு நினைவு இருக்கலாம். சிலர் மறந்து போயும் இருக்கலாம். எனக்கு இந்த வருடம் தான் 1986 - ல்
Chernobyl - ல் நடந்த பெரிய அணுக்கரு விபத்தை பற்றித் தெரிய வந்தது. மேலும் கடந்த வாரம் discovery channel - ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இந்த விபத்தை பற்றியும், அதனால் இன்றளவும் ஏற்பட்டு வரும் நோய்கள் பற்றியும், இனி என்ன நடக்கும் என்பது பற்றியும், மிகத் தெளிவாய் சொல்லி இருந்தார்கள்.

You tube -ல் இருக்கும் இந்த சுட்டியையும் பார்க்க.

Chernobyl - ல் அணுக்கரு விபத்து நடந்து முடிந்த மூன்றாம் நாள் தான் செய்தியை வெளியில் விட்டு இருக்கிறது அப்போது இருந்த ஐக்கிய சோவித் ரஷ்ய அரசாங்கம். ஏகப்பட்ட பொய்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். " அணுக்கரு சக்தி மனித சக்தியை மீறிவிட்டது", என்று எளிமையாய் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த விபத்தினால் வெளியேற்றப்பட்ட கதிரியக்க caesium-137, strontium-90 , iodine, மற்றும் plutonium ஆகிய தனிமங்களின் ஐசோடோப்க்கள் இன்றளவும் மக்களை பாதித்து வருகிறது.

ஹிரோஷிமா, நாகசாகியில் எற்படுத்தப்பட்டதை போல 100 மடங்கு கதிர்விச்சு.
சாதரணமாக, ஒரு கையடக்க கதிரியக்க அளவுகோளானது அதிகபட்சமாக 4 roentgens per hour வரை கணக்கிடுமாம். ஆனால்
Chernobyl -இன் மேற்கூரையில் மட்டும் கதிரியக்கத்தின் அளவு 2,000 and 15,000 roentgens per hour என்று இருந்தது அப்போது.

தொடர்ந்து கதிரியக்க தனிமங்கள் வெளியேற்றப்பட்டு கொண்டே இருந்ததால், அந்த அணுக்கரு உலையின் மேற்புறத்தில் ஒரு தடுப்பு சுவர் போன்ற அமைப்பை கட்ட எண்ணி ரோபோட்டுக்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கதிரியக்கத்தின் விளைவால் ரோபோட்டுகளும் செயல் இழக்கவே, ராணுவ வீரர்கள் கொண்டு 200m அளவுள்ள காண்க்ரீட் கூரையை 1989 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம்.

You tube Video வில் இருவர் முகமூடி போட்டுகொண்டு எதையோ அள்ளி கீழே வீசுவதைப் பார்க்கலாம். அவர்கள் தான், பயோரோபோட்டுகள் (Bio Robots ) என்று அழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் (அனைவருமே 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று).

அது தான் கூரையின் மேற்புறம், அவர்கள் கையாளுவது மணிக்கு 2000 ரோஜெங்களை வெளியிடும் கிராபைட் துகள்கள். அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் காரணமாக, மனிதர்கள் 40 நொடிகள் மட்டுமே அங்கே இருக்க முடியும், அதுவும் 30 கிலோ எடை கொண்ட ஈயத்தால் ஆன பாதுகாப்பு உடையுடன் மட்டுமே போக முடியும்.

ஆகவே இந்த வேலையையை செய்து முடிக்க மட்டும் சுமார் 6,00,000 பயோரோபோட்டுகள் பயன்படுதப்பட்டனர். பின்னர் அத்தனை பேரும் கதிரியக்கத்தின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டனர்.

24 வருடம் கழித்து அவர்களில் இன்று 1,50,000 பேர் மட்டுமே உயிரோடு இரு
க்கின்றனராம்.

எஞ்சி இருப்போருக்கு உரிய ஊதியம் கூட வழங்கவில்லை அந்த நன்றயுள்ள அரசு.
உண்மையில், இன்றளவும் இத்தகைய கதிரியக்கத்தினால் ஏற்படும் மனித உயிர் இழப்புகளின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு வருகிறது.

2005 யில்
Chernobyl ஐ green peace குழு ஒன்று ஆராய சென்ற போது ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

" Today I learned that the radioactive material still in the reactor can blow up any second. " என்று.

" அணுக்கரு கதிர்விச்சு பிரளயம்" யோசிக்கவே பயமாக இருக்கிறது.


விபத்து ஏற்பட்டதன் காரணம் அனுபவம் இல்லா ஊழியர்கள் என்று சொல்லபட்டாலும், வருங்காலத்தில் இப்படி ஒரு கோர விபத்து ஏற்படாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வபோது உறுதி செய்ய வேண்டும்.

கதிரியக்க கழிவுகள் பற்றி பெரும்பாலும் பலருக்கு தெரியும் என்று நம்புகிறேன். நேரம் இருப்பின் நம்ம கல்பாக்கத்தை பற்றிய இந்த செய்தி தொகுப்பையும் படிக்க வேண்டுகிறேன்.

உலகத்தில் தேவைப்படும் மின்சாரத்திற்கு நாம் பெரிதளவில் இந்த அணுக்கரு உலைகளையே நம்பி இருகின்றோம்.

நேற்று " நீயா நானா" வில் சொன்னது போன்று "ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் அழிவுகள் இருக்கத்தான் செய்யும்" .

வேறு ஒருவர் வலியில், நாம் நம் அறைகளுக்கு குளிரூட்டிக் கொண்டு இரு
க்கின்றோம்.

இத்தனை அபாயங்களுக்கு நம்மையும், வரப்போகும் நம் தலைமுறையினரையும், உட்
படுத்திக்கொண்டு பெறப்படும் மின்சாரத்தை, மிகச் சிக்கனமாய் பயன்படுத்துவோமாக (என்னையும் சேர்த்தே)...

5 comments:

 1. வேதனையாக இருக்கிறது..
  லட்சகணக்கான மக்களை கொன்று, அவர்கள் பிணத்தின் மீது “வல்லரசு நாடு” என்கிற கொடியை பறக்கவிடுகிறார்கள்.

  அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!

  ReplyDelete
 2. அனைவரும் அறிய வேண்டிய ஒரு தகவல்....

  பகிர்வுக்கு நன்றி கனி...

  ReplyDelete
 3. paaren enta pullaiku evlo ariviyal arivu erukkunu...v.good.
  good post

  ReplyDelete
 4. அறியக் கூடிய அரிதான விஷயங்கள். பொறுப்பு உணர்வும் கூட...

  பகிர்வு அருமை.

  ReplyDelete
 5. நல்லதொரு தகவல்.. விளக்கமாக எழுதியது நன்றாக இருக்கிறது.

  ReplyDelete