துள்ளி எழுந்திடடி, என் தேவதையே
நின்னைச் சுற்றி இருக்கும் முட்டாள்களுக்கு,
நீ யார்ரென புரியவைப்போம்.
நீ சோர்ந்து இருப்பதனால்,
இந்த சோலையும் சோர்ந்ததடி.
அஞ்சி இராதே, - நீ
இப்புவி ஆளபிறந்தவளடி.
மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.
பாரதி பெற்றவளே, - நீ
துயர்கொள்ளல் ஆகுமோ?
இறக்கை விரித்திடடி, - உந்தன்
கனி காத்திருக்கிறாள்.
( ஓவியம் - நன்றி ஸ்வேதா )
சூப்பர் கவிதை..!!
ReplyDeleteஇன்னும் இன்னும் நிறைய எழுதுங்க கனிமொழி..!!
வாழ்த்துக்கள்!
/*அஞ்சி இராதே, - நீ
ReplyDeleteஇப்புவி ஆளபிறந்தவளடி.
மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.// ஆவலுடன் எதிர்பார்கிறோம்
அழகாக எழுதுகிறீர்கள் கனி ...
ReplyDeleteவலைப்பக்கத்தின் கருப்பு பின் புலத்தக் கொஞ்சம் மாற்றியமையுங்கள் . படிக்கையில் உருத்துகிறது.
இந்த நல்ல தொகுப்புக்கு ... ”உதிர்ந்த மலர்கள்” எனும் தலைப்பு எதற்காக வைத்தீர்கள் ..
//அஞ்சி இராதே, - நீ
ReplyDeleteஇப்புவி ஆளபிறந்தவளடி.//
வாவ்.......
அருமையான கவிதை...
இதுபோல நிறைய எழுதுங்கள்...
:)
பாரதி கண்ட புதுமைப் பெண். பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது. கவிதையும், ஓவியமும் நிறைய சொல்கின்றன.
ReplyDelete// பாரதி பெற்றவளே//
ReplyDeleteரசிக்க வைத்த வரி.
@ ரங்கன்
ReplyDelete// இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க கனிமொழி..!! //
கண்டிப்பாக ரங்கா...
நன்றிங்க எங்க பக்கம் வந்ததுக்கு :-)
@ Prince
ReplyDelete///
/*அஞ்சி இராதே, - நீ
இப்புவி ஆளபிறந்தவளடி.
மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.// ஆவலுடன் எதிர்பார்கிறோம்
///
ம்ம்ம்ம்.... நன்றி பிரின்ஸ்.
@ Sindhan R
ReplyDeleteநன்றி சிந்தன்.
கருப்பு பின் புலம் தானே, நல்ல template தேடிக்கொண்டு இருக்கிறேன் விரைவில் மாற்றிவிடலாம், சிரமத்திற்கு மன்னிக்கவும். :-)
//இந்த நல்ல தொகுப்புக்கு ... ”உதிர்ந்த மலர்கள்” எனும் தலைப்பு எதற்காக வைத்தீர்கள் ..//
என் மனசில் சில பூக்கள் பூக்கும்..சில என் மறதியாலோ, நேரமின்மையாலோ மனதிலேயே வாடிவிடும்..ஆனால் சில பூக்கள் மட்டும் இந்த பதிவுலத்தில் வந்து விழுவதால் “உதிர்ந்த மலர்கள்”.
இது பேர் வைத்ததிற்கு அப்புறம் யோசிச்சது...
:-)
உண்மையான காரணம் என் நண்பர் மற்றும் குரு முரளிகுமார்.
@ அகல்விளக்கு
ReplyDeleteநன்றி ஜெய்... :-)
@ விக்னேஷ்வரி
ReplyDeleteநன்றி விக்னேஸ்வரி...
உங்க ரசிகையாக மாறிக்கொண்டு வருகிறேன். :-)
@ மதுமிதா
ReplyDeleteநன்றி மது...
பாரதியின் புதுமைப்பெண்ணாய் கவிதை சிறகு விரிக்கிறது....
ReplyDeleteஅருமை கனிமொழி!!!
ஆ...தங்கம்.
ReplyDeleteபாரதி கண்ட புதுமைப் பெண் என்பது கவியிலும் தெரிகிறது....பூஸ்ட் கவிதை...
ReplyDelete