Saturday, May 15, 2010

நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி......

"மாமி, இன்னிக்கு மழை வர மாதிரி இருக்குல..."
"இன்னிக்கு வர வேண்டாம் கனே*, நேத்து தானே நட்டோம், இன்னும் பச்ச கட்டல இல்ல, மழை பெஞ்சா தாங்காதுமா"

"கடவுளே இன்னைக்கு மழை வேண்டாம் நாளைக்கு சேர்த்து வெச்சி பெய்யட்டும்......"

அது தான் நான் முதல் முறை மழை வேண்டாம் என வேண்டியதாய் இருக்கும்.

தாத்தா இறந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான்
நெல்லு போட்டு இருக்கோம்.

"நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி...... " :-)




செம காத்து...













விட்டு, நாலடி நடந்து வந்ததுக்கு, ரெண்டு எலுமிச்சை, ரெண்டு மாங்காய்....



(உள்ள பாம்பு இருக்கா??
இல்ல சிலந்தி தான்... :-) )



அதோ தெரியுதே.... அதுதான் எங்க வீடு...

காத்து வாங்கிக்கொண்டே நடக்கையில், தோன்றியது 'குடுத்து வெச்சவ கனி நீ' என்று....
சிரித்து கொண்டே ரசித்தேன்...

"எங்க, போட்டாத கூட எடுக்க முடியல" என்று யாரோ பேருந்தில் புலம்பியது நினைவிற்கு வர, யோசனை எங்கோ போனது...



(கனே - கண்ணே என்பதன் மருவு )

4 comments:

  1. Ada ada kodailum jillunu irukke padam,vaikalil thanni ,thennam thopu koduthu vachavanga than... Periya pannaiyaro neenga? Enakkum kani nilam vendum thanniroda!

    ReplyDelete
  2. என்ன ஒரு ரம்யமான சூழல்...

    நீங்க நிச்சயம் கொடுத்து வைத்தவர்தான் கனி...

    ReplyDelete
  3. புலர்ந்து விடியும் பொழுதினிலே,
    பொய்கைக் கரையஞ் சோலையிலே,
    மலர்ந்து நல்ல மணம்வீசி
    மகிழும் மலர்கள் ஆயிரமாம்!
    உலர்ந்து வாடிச் சேற்றினிலே
    உதிரும் அவையும் ஆயிரமாம்!
    கலந்த உலக வாழ்வை இதில்
    கண்ணால் கண்டு தெளிவாயே!

    ReplyDelete
  4. What a pleasant surrounding...and your house in the midst.

    Photograhps are "Arumai"

    ReplyDelete