Wednesday, May 26, 2010

இரு வேறு ஊமைகள் ..















எப்போதுமே அழுக்காய் இருக்கும் பேருந்து நிலையம்,
எப்போதாவது சுத்தம் செய்யப்படும் டீலக்ஸ் பஸ்,
நேத்து பார்த்த அதே பிச்சைக்கார தாத்தா,
அதே 'அம்மா' என்னும் குரல்,
நேற்று சட்டென காசெடுக்க உள்ளே போன 'கை'
இன்று போக மறுத்தது
மூளையின் கட்டளைக்கு இனங்க
கண்கள் பேருந்தின் உள்ளே திரும்பின.
உள்ளே,
வேறோரு தம்பி தன்னை ஊமை என
துண்டு சீட்டினால் விளம்பரம் செய்து கொண்டிருந்தான்
என் மீதும் துண்டு சீட்டு விழுந்தது
திரும்பி வந்து நின்றவன்,
வாய்திறந்து நாக்கை காட்டினான்,
அறுபட்டது போலவே இருந்தது.
ஏற்கனவே இது போல் நிறைய பேரை பார்த்து இருந்தாலும்
மனதின் கட்டளையால் 'கை' காசெடுக்க போனது,
சில்லரையை கொடுத்தேன்...
வாங்கினான், கடனை வசூலிப்பவன் போலவே
பேருந்தின் கீழே இறங்கியவனை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
யாரிடமோ,
பேசினான் அவன்.
ஊமையை நான்.


( மூளை சில சமயம் ஊமையாய்,
மனம் சில சமயம் ஊமையாய்... :-) )

8 comments:

  1. நல்ல கவிதை!!
    திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்துகொள்ளடான்னு தலைவர் பாடினதுதான் ஞாபகம் வருது..!!

    வாழ்த்துக்கள் மேலும் தொடர்க!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஜெய்....

    .............

    இது கவிதைலாம் இல்ல ரங்கா....
    திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்துகொள்ளடான்னு தலைவர் பாடினதுதான் ஞாபகம் வருது..

    சரிதான்...

    ReplyDelete
  3. தோழர் கனி!
    // நேற்று சட்டென காசெடுக்க உள்ளே போன 'கை'
    இன்று போக மறுத்தது //
    .....
    .......
    // ஏற்கனவே இது போல் நிறைய பேரை பார்த்து இருந்தாலும்
    மனதின் கட்டளையால் 'கை' காசெடுக்க போனது //
    ....
    ........
    // ஊமையாய் நான் //

    .... அடுத்த முறையும் கண்டிப்பா நீங்க help பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும் ....

    அப்புறம் ..
    // வாங்கினான், கடனை வசூலிப்பவன் போலவே //
    மிகவும் ரசித்தேன் தோழர் ...

    வருகிறேன் கனி ...

    ReplyDelete
  4. நிஜத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ( மூளை சில சமயம் ஊமையாய்,
    மனம் சில சமயம் ஊமையாய்...)


    mmm

    ReplyDelete
  6. அர்த்த்ம் இருக்கு.
    நல்லா சொன்னீங்க

    ReplyDelete
  7. சகோதரி.. இப்படியும் மனிதர்களா? கவிதையில் வாயுள்ளவர்கள் பிழைப்பார்கள் என்பதெல்லாம் பொய் தானே?
    கவிதை எங்களையும் ஒரு முறை மௌனமாக்கி விட்டது.

    ReplyDelete