Tuesday, March 2, 2010

மரகதம் தந்த முத்து...


















ச்சே...
எனக்கு ஏன் இது தோன்றவில்லை...

எப்போதும் நான் உபயோகப்படுத்தியதையே
அவளுக்கு தரும் எனக்கு,
நேற்று,
திருவிழா கடையில் இருந்து
புது வளையல்கள் வாங்கி வந்திருந்தாள்
எனக்காக...


நீ வெச்சிக்கோ மரகதம் என்றேன்..
எனக்கு எவ்வளவோ தந்து இருக்க,
மறுக்காமல் வாங்கிக்கோ என்றாள்...


குற்றஉணர்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன்
தினக்கூலி ரூ 50 என தெரிந்தும் ...

நான் கையில் போட்டுக்கொண்டதும்
அவள் முகத்தை பார்க்கணுமே,
இணையில்லா சந்தோசம்...
எனக்கும்...

முத்தை விட விலைமதிப்பற்றவை,
இவையும் ... இவளின் அன்பும்...

நானும் முடிவெடுத்துவிட்டேன்,
வேலைக்கு போய் என் உழைப்பில்
அவளுக்கு புதியதாய் ஏதாவது வாங்கித்தரனும் என்று...


8 comments:

  1. // (விலைமதிப்பற்றவை,
    இவையும் ... இவளின் அன்பும்...)//*
    வேறெதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
  2. அது தான் இருப்பவர்களிடம் இல்லாததும், இல்லாதவர்களிடம் இருப்பதும்.. அந்த தூய அன்பு!!

    ReplyDelete
  3. நன்றி பிரின்ஸ்...

    ReplyDelete
  4. //அந்த தூய அன்பு!! //

    உண்மைதான்..
    நான் கொடுத்துவைத்தவள் அதை பெருவதற்கு...
    :-)

    நன்றி ராஜசேகர்...

    ReplyDelete
  5. வாவ்...

    நல்ல விஷயங்கள் எல்லாமே நமக்கு லேட்டாகத்தான் தெரிகின்றன....

    அருமை....

    ReplyDelete
  6. கவிதையும்,போட்டோவும் நச்

    ReplyDelete
  7. //நல்ல விஷயங்கள் எல்லாமே நமக்கு லேட்டாகத்தான் தெரிகின்றன....//
    :-( என்ன செய்ய ஜெய்...

    ReplyDelete
  8. நன்றிங்க மின்னல்...

    ReplyDelete